skip to main |
skip to sidebar
எஸ்.வி .சேகர் ,
காயத்திரி,
மூளை வளர்ச்சி....!!!
"காயத்திரி மந்திரத்தை ஜெபித்தால் மூளை வளரும் " என்று நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளதாக செய்திகள் வந்தன .
தமிழகத்தில் புரோகிதர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் உள்ளன. இவர்கள் மந்திரங்களை கற்றுத்தருவார்கள். இந்த மந்திரங்களை எப்படி பிரயோகம் செய்வது என்பதை கற்றுத்தர வாரணாசி தான் செல்ல வேண்டும்.முடியாதவர்கள் அங்கு சென்று கற்று வந்தவர்கள் மூலம்தெரிந்து கொள்வார்கள்.
1994ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இல்லை 96 ம் ஆண்டு ! நான் வாரணாசி சென்றேன் அந்த தேர்தலில் வாரணாசியில் மார்க்சிஸ்க்கட்சி போட்டி இட்டது.
அங்கு திரிபாதி என்று ஒரு வேத விற்பன்னர் இருந்தார். மந்திர பிரயோ கம் எப்படி செய்யவேண்டும் என்பதை கற்றுத்தரவார். சுமா இருக்காமல் அவரிடம் போய் சேர்ந்தேன். காயத்திரி மந்திரத்தை பெண்கள் சொல்லக்கூடாதா ? என்று கேட்டேன்.
"முட்டாள்கூட அப்படி சொல்லமாட்டான்.பிரம்ம உபதேசத்தின் பொது மற்றவர் காதில் விழக்கூடாது என்பதற்காக" பட்டால் " கூடாரம் செய்து உபதேசிப்பார்கள். அப்போது புரயோகிதர் ,பிரம்மசாரி,அவன் தாயார், தந்தை ஆகியோர்தான் அங்கு இருப்பார்கள். தாய் பெண் இல்லையா? என்று ஒரு போடு போட்டார்,
"உலகிலேயே மிகவும் பலகீனமான உயிர் மனிதன் தான் .மற்ற உயிரினங்களுக்கு தற்காப்பு க்கான இயற்கை கொடுத்துள்ள வசதி உண்டு. மனிதன் அப்படி இல்லை. அவனுக்கு இருட்டு என்றால் பயம்இருட்டிலிருந்து தப்ப-மற்ற விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள அவன் கூட்டாக -குழுவாக வாழ்ந்தான். உயரமான மரப்பொந்துகளிலும், உயர்ந்த பாறைகளின் இண்டு இடுக்குகளிலும் வாழ்ந்தான் . இருட்டின பிறகுதானமற்ற விலங்குகள் இரை தேடும் என்பதால் அவன் தன குழுவை காப்பாற்ற இரவு முழுவதும் காவல் காக்க வேண்டியதாயிற்று.
வெளிச்சம் வர வர அவன் மகிழ்ச்ச்சியுற்றான். அவனுடைய மிகப்பெரிய ஆச்ச்ரியம் வெளிசம் தான். வெளிச்சம் அவனுக்கு வெப்பத்தை தருகிறது. வெப்பம் நீரை ஆவியாக்குகிறது. காற்றில் சலனம் உண்டாகிறது ஆவி மேகமாகிறது.மழை பொழிகிறதுபயிர்ப் பசசை ,காய் கனி கிடைக்கிறது. ஆகவே அவன் வெளிச்ச்சத்தை வணங்கினான்.
"ஓம் !தத்ச வரேண்யம் " என்று காயத்திரி மந்திரத்தை சொன்னான்! உண்மையில் அது அப்படி சொல்லப்பட்ட கூடாது.
"ஓம் ! தத் சவித: வரேண்யம் " இருக்க வேண்டும். ! சவித : என்றால் வெளிச்சம் . என்று பெரியவர் விளக்கினார்.
இந்த நவீன காலத்திலும் இந்த வணக்கம் தேவையா ?"என்று கேட்டேன்.
"ஒரு சின்ன பொத்தானை அமுக்கினால் அணுசக்தி மூலம் சூரியகோடி பிராகாசத்தை மனிதனால் உருவாக்கமுடியும் . மிகவும் பலகீனமான மனிதன் தன ஆற்றலை வளர்த்துக்கொண்டு மற்ற உயிர்களை ஆட்டிப்படைக்கிறான் . ஏன் இயற்க்கையையே வென்று காட்டிவிட்டான். காயத்திரி ஜபம் வேண்டுமா வேண்டாமா என்பதை அவன்தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார் பெரியவர்.
0 comments:
Post a Comment