"ஜன சங் " தலைவர் ,
"தீன தயாள் உபாத்யாயா" மரணம் -
விபத்தா ? கொலையா?
இந்தியா சுதந்திர அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னால் இடைக்கால சர்க்கார் அமைந்தது> அதில் சியாமா பிரசாத முகர்ஜி அமைசராக இருந்தார். இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும் என்பவர் அவர் . அதனால் பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு போனார். முழுக்க முழுக்க இந்துக்கள் நாடாகி விடுமே !
அமைசச்சரவை இதனை ஏற்கவில்லை. முகர்ஜி ராஜினாமா செய்தார்தனிக்கட்சி ஆ ரம்பிக்க திட்டமிட்டார்.
காத்திருந்த ஆர்.எஸ்.எஸ் .நேசக்கரம் நீட்டியது. முகர்ஜி தனக்கு உதவியாக இளம் ஆர்.எஸ்.எஸ் காரர்களை கேட்டார். ஆர்.எஸ்.எஸ் தலைமை தீன் தயாள் உபாத்யாயா,நானாஜி தேஷ்முக்,வாஜ்பாய், அத்வானி ஆகியோரை கொடுத்தது .அரசியலுக்காக "ஜனசங் "கம் உதயமாகியது .
கடசியின் தலைவராக இருந்த முகர்ஜி மறைந்தார். தீன தயாள் உபாத்யாயா பொறுப்பேற்றார் . கடசி மெதுவாக சிறகை விரிக்க ஆரம்பித்தது. ஜன சங் கடசியின் முக்கியஸ்தர்களில் ஒருவர் பால் ராஜ் மோதக. இவர் உபாத்தய்யாயாவின் ஆதரவாளர்.
உபாத்யாயா நாடுமுழுவதும் சுற்றி கடசியை வளர்க்க முயன்றார்.ஒருமுறை சுற்றுப்பயணமாக அவர் பாட்டனாவிலிருந்து முகால்சராய் என்ற ஊருக்கு பயணமானார் . கடசி தொண்டர்கள் முகால்சராய் ரயிலடியில் தலைவரை வரவேற்க காத்திருந்தார்கள். ஆனால் அந்த பெட்டியில் தலைவர் வந்து இறங்கவில்லை . தேடிப்பார்க்க தொண்டர்கள் இறுதியில் போலீசாரிடம் போனார்கள்.
போலீஸ் விசாரித்ததில் மொகல்சராயுக்கு முன்னாள் தண்டவாளத்தின் அருகில் ஒரு சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் கையி ஒரு ஐந்து ரூ நோட்டு இருந்ததாகவும் சொன்னார்கள். அந்த சடலம் உபாத்யாயாவின் சடலம் என்று உறுதி செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். ரயிலில் வழிப்பறி செய்யும் கொள்ளையர்கள் தான் அவர்கள். இவர்கள் பெட்டியில் ஏறியதை கண்டுகொண்ட உபாத்யாயா இவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்கமுயன்றிருக்கிறாரா. பயந்துபோன கள்வர்கள் அவரை ரயிலிலிருந்து தள்ளி விட்டுள்ளனர்.
கேஸ் பதிவாகி வழக்கு நடந்தது.இறுதியில் சாட்ச்சிகள் இல்லாததால் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பால்றாஜ் மோதக போன்றவர்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது.அரசாங்கத்திற்கோ ,அல்லது கடசி தலைமைக்கோஉண்மை தெரிந்திருக்கும்,விசாரணை வைத்தால் தெரிந்துவிடும் என்று பலர் நம்பினர்.கடசி அசையவில்லை.
பிற்காலத்தில் ஜனசங் கலைக்கப்பட்டு ஜனதா கடசியாக உருவெடுத்தது .இதனை ஏற்காதவர்கள் பால்ராஜ் மோதக தலைமையில் ஜனசங் கட்சி ல இருந்தார்கள். நானாஜி தேஷ்முக் வன்குடிமக்களுக்க பாடுபடப்போகிறேன் என்று கூறி கிஷ்கிந்தையில் ஆசிரம்கட்டி போய்விட்டார். வாஜ்பாயும்,அத்வானியும் ஜனதா ஆடசியில் அமைச்சரானார்கள் .
பால்ராஜ் மோதக இந்த சமயத்தில்முன்று புத்தகங்களை எழுதினர். ஒரு புத்தகத்தில் உபாத்யாயா மரணம் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுப்பிரமணியம் சாமி அப்போது வாஜ்பாயாய் எதிர்ப்பாளர். சும்மா இருப்பாரா. விசாரணைக்குகுரல்கொடுத்தார் . தேசாய் அரசு விசாரணைக்கு உத்திரவிட்டது .
"யாருடைய தலையிடு என்று தெரியவில்லை விசாரணை நடைபெறவில்லை" என்று பால்ராஜ் மோதக குறிப்பிடுகிறார்.
இப்போதுதன்னந்தனியாக மோடி ஆள்கிறார்.. சிபிஐ, ,வருமான வரித்துறை, என்று எல்லாமே இவர்கள் கையில் இருக்கிறது.இவர்களின் தலைவர் தீன் தயாள் உபாத்யாவின் மரணம் விபத்தா ?கொலையா? என்பதை கண்டுபிடிக்கலாமே ?
மாட்டார்கள் !
ஏன் ?
மறை ந்த பால் ராஜ் மோதக வரவா போகிறார் !!!
0 comments:
Post a Comment