Monday, February 26, 2018





Agnosticism and 

 Me !!!






பகுத்தறிவு made in India என்று நேற்று பதிவிட்டிருந்தேன் .பல தொலைபேசி அழைப்புகள், மற்றும் பதிவுகள்  வந்துள்ளன. "பயப்பட வேண்டாம் ! இது வயதானால் வரக்கூடியது தான் . இந்த பிரபஞ்சம் உருவானது<கடவுள் உண்டா இல்லையா போன்ற கேள்விகளுக்கு விடை யே கிடைக்காது.இந்த இரண்டும் கேட்டநிலைக்கு  agnosticsm என்பார்கள் ! " என்று விளக்கியுள்ளார்கள்.

நான் சனாதன குடும்பத்தில் பிறந்தவன்.பகவத் கீதையையும், உபநிஷத்துக்களையும் படித்தவன் .சின்மயாமிஷனின் "சாந்தீபனி " கல்லூரியில்சேர்ந்து   சர்வபரிவிராஜனாக போக விரும்பியவன். என் 18வந்து வயதில் Carlile எழுதிய French revolution என்ற புத்தகத்தை படித்தேன். பின்னர் razers edge , டூமாஸின் black tulip என்று பயணமானேன்.என் பயணம் முடியும் பொது கார்ல் மார்க்ஸ் என் கையில் இருந்தார்.

60ம் ஆண்டுகளின் முற்பகுதியில் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்தில் ஹைதிராபாத் நகரத்தில்நடந்த அடக்கு முறை என்னை மாற்றியது. ஏற்கனவே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் செயல்பட்டு வந்தவன் .மாற்றலில் மதுரை வந்த பொது சங்கத்தலைவர் எனக்கு வழிகாட்டினார்கள் . குறிப்பாக இரண்டு பேரை என்னால் மறக்க முடியாது> ஒருவர் என்நை கடசி உறுப்பினராக்கினார் மற்றவர் அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் என்ன ஒழுங்கு படுத்தினார்.

என்னை கடசியில் சேர்த்தவர்  பிற்காலத்தில் தடிவளர்த்துமொட்டை போட்டுக்கொண்டு திருப்பதி போனார். தத்துவ வெளிச்சம் கொடுத்தவர் நெற்றியில் திருமண் கொண்டு பாசுரம் பாடிக்கொண்டு சென்னையில்வல ம் வருகிறார் இருவருக்கும் அப்போது 50 வயது கூட ஆகவில்லை. வயதிற்கும் மன  பிறழ்வுக்கும் சம்மந்தமில்லை. முன்னவர் மிகவும் கஷ்ட ஜீவன த்தினால் மாறினார்>மற்றவர் கொடூரமான குடும்ப சாவினால் மாறினார்   

என்னுடைய நேற்றய பதிவில் நான் என்னையே பாத்திரமாக்கிக் கொன்டேன். காரணம்  யார் மனமும் புண்படக்கூடாது என்பது தான் .(இந்த நொடிவரை என்குடும்பத்தில்  "சுத்தி " போடும் நிகழ்ச்ச்சி நடக்கவில்லை )

நம்மை சுற்றி இருப்பது மூலதன சமூகம்.! அதற்குள் தான் பொது உடமைசமுகத்தை கட்டமைக்க வேண்டும். 

700 கோடி மக்கள் வாழும் உலகில் அத்துணை பெரும் நாத்திகர்களாலான பின்னர் தான் நான் நாத்திகனாவேன் என்றால் நடக்காது.

ஐநா வின் புள்ளிஇவ்விவரம் இன்று உலகில் 110கோடி பேர் நாத்திகர்கள் என்கிறது. பெறும் பகுதியினர் வடக்கு ஐரோப்பா மற்றும் நார்வே ,சுவீடன், பேலிஜியம்  போன்ற நாடுகளில் இருப்பதாக சொல்கிறது. சமூக தளத்தில் இந்த நாடுகள் மிகவும் செழிப்பாகவும், சமாதானமாகவும் வாழ்வதாக உள்ளன .

75 ஆண்டுகள்   கடந்த பின்னர் சோவியத் யூனியன் விழுந்ததே  ? ஏன் ? 

பலவீனமான மூலதனமும் விழும் !!!

நம்புவோம் !!!


0 comments: