Sunday, February 25, 2018





பகுத்தறிவு -

(Made In India )




ஹோலி பண்டிகை நெருங்கிவிட்டது பல்வேறு போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. UCN என்ற ஒளி பரப்பு  கம்பெனி Battle of Talents என்ற போட்டியை அறிவித்திருந்தது .24  ம்  தேதி அதன் இறுதி போட்டி நடந்தது . 

இரவு 11மணிக்கு கை  பேசி ஒலித்தது . "தாத்தா ! Ucn போட்டியில் நான் இரண்டாவதாக வந்திருக்கிறேன் எனக்கு 11,000 /- கு காசோலை   தந்திருக்கிறார்கள். "

"verygood  ரா கண்ணா ! உடனே வா ! நான் முழிசிகிட்டு இருக்கேன் !வா!" என்றேன் .

"இல்லை தாத்தா ! நான் நண்பர்களோடு சாப்பிட்டுவிட்டு வருவேன் ! நேரமாகும் !காலையில் பார்க்கிறேன் !" போனை வைத்துவிட்டான்.

இரவு முழுவதும் தூக்கம் இல்லை .

பேரன் நிஹால் நன்றாக படிப்பான்> இது இறுதி ஆண்டு ! பொறியியல்.! 7செமஸ்டரிலும் 7.8 டோ rank ! இது தவிர compus selection ல ACCENTURE என்ற கம்பெனி வேலை உத்திரவு அனுப்பியுள்ளது . இவன் பாட்டு பாடிட்டு திரியரானே ங்கிற கவலை அதிகமாயிட்டுது . 

மனசு சமாதானமாகலை ! மெலிதான குறட்டையிலிருந்தமுத்து மீனாட்ச்சியை எழுப்பினேன்.விவரத்தை சொன்னேன். AR  ரஹ்மானின் இயக்கத்தில் பேரன் பாடப்போவதாக நினைத்துவிடக்கூடாதே என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. பேசி பேசி சோர்ந்துவிட்டேன் .

"சரி ! காலையில் எழுந்ததும், நிஹால் ,அவனோட அப்பா,அம்மா மூன்றுபேரையும்  "ஓக்கா"த்தி சுத்திப்போடு "

"ஒங்களுக்கு நம்பிக்கை இருக்கா ?"

"இல்லை "

"பின்ன ?"

"அவன் "என் பேரன்" கிற நம்பிக்கை இருக்கே !"


கடவுள் இல்லை என்று அறிவு சொல்லத்தான் செய்கிறது. கடவுள் இல்லை என்று சொல்ல பயமாகவும் இருக்கிறது.! 

என்ன செய்ய !!!


0 comments: