Monday, December 24, 2018






"முதலாளிகளிடமிருந்து ,



முதலாளித்துவத்தை ,



காப்பாற்றுவோம் "!!!



நீராவி என்ஜின் கண்டுபிடிக்கப்பட்டபோது தொழிற்புரட்ச்சி ஏற்பட்டதாக கூறுவார்கள். அதன் அடி வயிற்றிலை பிறந்தது தான்  முதலாளித்துவம் .

மனிதகுலவரலாற்றில் இதற்கு முன் கண்டிராத வளர்ச்சியும் ,கண்டுபிடிப்புகளும்,சுபிட்சமும் கிடைத்ததும் இந்தகாலகட்டத்தில்தான். உணவு,இருப்பிடம், உடை ,மருத்துவம்,கல்வி என்று பரந்துபட்ட மக்கள் தொகுதிக்கு , கிடைத்ததும் இதே காலத்தில் தான்.

Adam  Smith போன்ற பெரியவர்கள் இந்த வாழ்க்கைமுறையை முதலாளித்துவ முறையை போற்றிப்புகழ்ந்ததும் இதனால தான். இந்தவாழ்க்கை முறையின் அடிவயிற்றில் பிறந்தது தான் ஏகாதிபத்தியம். முதலாளித்துவத்தின் உச்சகட்டம் தான் ஏகாதிபத்தியம் .

இதன் மற்றோரு பகுதி தான் காட்டு மிருகங்களைப்போன்ற அடாவடித்தனம் . ஒருபக்கம் செல்வ செழிப்பும் மற்றோருபக்கம் தாங்கமுடியாத வறுமையும் இணைந்தே  சகவாழ்வு வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.

இந்தமிருகத்தனத்தை கட்டுக்குள் கொன்டுவர உருவானது தான் நுறு ஆண்டுகளுக்கு முன் உருவான சோவியத் புரட்ச்சி. முதலாளித்துவம்  என்ற மிருகத்தை கம்பி போட்ட கூண்டுக்குள் அடைத்து வைத்தது தான் அந்த புரட்ச்சியின் அடிநாதம் .என்ன செய்ய ?

சோவியத் யூனியனின் வீழ்ச்சி  இந்த மிருகம் கூண்டை உடைத்துக்கொண்டு வெளியே வர உதவியது.தாராளமயம்,தனியார்மயம்,உலகமயம் என்று கோஷம் எழுப்பிக்கொண்டு "எத்தைத்தின்னால் பித்தம் தெளியும் " என்று கண்டதை தின்று இன்று அஜீரணக்கோளாறினால் "பங்குசந்தையில் " மரண ஓலமிட்டுக்கொண்டிருக்கிறது .

கரிசல் காட்டு புதரில்  சாராயம் காய்ச் சிக்கொண்டிருந்தவன் இன்றி ரியல் எஸ்டேட் முதலாளி.கிழக்கிந்திய கம்பெனிக்காக கஞ்சா விற்றவன் Multy National Corporate முதலாளி.

சிக்குபிடித்த முதலாளித்துவத்தின் மரணத்தை தவிர்க்க  அதன் விசுவாசிகள் முயற்சிக்கிறார்கள். டாகடர் ரகுராம் ராஜன் "Save Capitalism from  Capitalist "என்று அலறுகிறார் . உஜ் வல்  படேல் ராஜினாமா செய்கிறார் .

வடக்கு ஐரோப்பிய நாடுகள் மக்களுக்கு உணவு ,உடை ,இருப்பிடம் கல்வி மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக அளித்துவருகின்றன. கிட்டத்தட்ட 120 கோடி மக்கள் அதனை அனுபவித்து வருகிறார்கள் .   

மீதமுள்ள 600 கொடிமக்களின் பார்வை இவர்களைநோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 

ஒரு பெறும் போர் வரவிருக்கிறது .!

இந்தியாவில்  அதற்கான ஒத்திகை நாள் தான் 2019 மே மாதம் நடக்க விருக்கும் தேர்தல் . !!

   

0 comments: