skip to main |
skip to sidebar
பா.ஜ.க ,
காங்கிரஸ் ,
தி.மு.க !!!
"ராகுல் காந்தி அவர்களே வருக !நல்லாட் சி தருக " என்று தி மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.அதுமட்டுமல்லாது 2004ம் ஆண்டு அவருடைய தந்தையும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதி அவர்கள் "இந்திராவின் மருமகள் சோனியா காந்தி அவர்களே வருக " என்று அழைத்ததையும் மறக்காமல் குறிப்பிட்டார்.
தமிழக தொலைக்காட்ச்சிகள் இதையே பத்து நாட்களாக விவாதித்து கொண்டிருக்கிறார்கள். நல்ல காலம்! நடிகர்கள் குள்ளமணியும் ,தவக்களையும் இல்லை ! இருந்திரூந்தால் அவர்களின் கருத்துக்களையும் நமக்கு தந்திருப்பார்கள்.
2004 மாண்டு சோனியா பிரதமர் ஆவர் என்று கணித்தவர்கள் அதிர்சசி அடைந்தனர். இந்தியாவின் பிரதமராக யார் ஆகி வேண்டும் என்பது பற்றி அமெரிக்க பங்கு சந்தையின் வெளியீடான Wall Street Journal தலையங்கம் எழுதியது.
அதில் அவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் நபர்களாக மூன்று பெயரை குறிப்பிட்டிருந்தார்கள்..மன்மோகன் சிங் , மண்டேக் சிங், சிதம்பரம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். சோனியா பிரதமர் பதவியை ஏற்கவில்லை> காங்கிரஸ்கட்ச்சியில் உறுப்பினராக இல்லாத மன்மோகன் சிங் அவர்களை பிரதமராக்கினார்.சிதம்பரம் நிதி அமை ச்சர். பொருளாதார துறை யின் முக்கிய புள்ளியாக மாண்டேக் சிங் .
2014 ம் ஆண்டு மோடியையோ பிரதராக்கியது யார் ?
சந்திரபாபு நாயுடு காரு நாந்தான் என்று கூறலாம் .! அவர் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம் .
கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைமை முடிவு செய்கிற விஷயமாகி விட்டது. மோடி அவர்களுக்கு பயன்படுவார் என்றால் அவர்தான் பிரதமர் .அவருக்கு அடுத்ததாக இந்திய அரசியலில் அவர்கள் கணக்கு போடுவது பழனியப்பன் சிதம்பரம் அவர்களை!
கடந்த நான்கு நாட்களாக தமிழக வலைத்தளங்களில் பழனியப்பன் சிதம்பரத்தின் கதை என்று ஒளிபரப்பாவதை கவனிக்க வேண்டும். அதில் முக்கியமாக சிதம்பரம் இளம் வயதில் மார்க்சிய நூல்களை கற்றார் . என்று விளக்குகிறார்கள் .என் ராம், மைதிலி சிவராமன் ஆகியவர்களோடு இணைந்து செயல்பட்டார்.என்று அவர்கள் படத்தையும்போட்டு ஒளிபரப்புகிறார்கள். இந்த காடசியின் பின்னணியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னம் பொரித்த கொடி அசைந்தாடுகிறது. இவர்களோடு சிதம்பரம் நடத்திய Radical Revciew பத்திரிகையும் காட்டப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக சிதம்பரம் அவர்கள் பிரதமர் வேட்பாளர் ப ற்றி கட் சி எந்தமுடிவும் எடுக்கவில்லை என்றுகூறியுள்ளார் .
இதனை பா.ஜ கட்ச்சியும் உணர்ந்தே இருக்கிறது . சிதம்பரம்,கார்த்திக் சிதம்பரம்,நளினி சிதம்பரம் என்று அவர் குடும்பத்தையே நீதிமன்ற் வாசலில் மத்திய அரசு நிற்கவைப்பதை பார்க்கும் பொது நிலைமை தெளிவாகிறது .
அதேசமயம் இந்திய அரசியல் வானில் வலதுசாரிகள் கை ஓங்கி இருக்கிறது என்பதும் அவர்கள் தான் நிகழ்ச்ச்சி நிரலை நிர்ணயிக்கிறார்கள் எனதும் தெளிவாக புலப்படுகிறது.
0 comments:
Post a Comment