Friday, December 28, 2018




இந்த 

"சீவிலிகளை "

அடக்கி வையுங்கள் !!!



திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்,மதுரை சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய வற்றில் சுவாமி உலா வருவதற்கு முன்பாக தே வாரம்பாடிய நால் வர்,நந்திகேசுவரர்,  முருகன்,விநாயகர் ஆகிய கடவுளர்களின் சப்பரம் முதலில் வரும். இதனை "சீவிலிகள்" என்று சொல்லுவார்கள் .  தி.மு.கவின் சீவிலிகள் மதி மாறன்,நாராயண் ராஜகோபால் என்று புறப்பட்டு விட்டனர்.

மக்களவையில் உறுப்பினர் இல்லாத திமுக வரும் தேர்தலில் ஜெயித்து மத்திய மாநில அரசுகளை ஆட்டிப்படைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா. நோக்கம் நல்லது தான். கூட்டணியில் உள்ளவர்களை  இவர்கள் விமரிசிப்பது  கூட்டணியை வலுப்படுத்தாது .

2019லோ அல்லது 2021 லோ வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் ஸ்டாலி ன் இப்போதே திண்ணையில் துண்டு போடுகிறார்."ராகுல் அவர்களே வருக "என்பது அதன் வெளிப்பாடு .

நாராயண் ராஜகோபால் என்ற பன்மொழிவித்தகர் எழுதுவது போன்ற அபத்தங்களை  சகிக்க முடியவில்லை . நல்லகண்ணு அவர்கள் தேர்தலில் வெற்றிபெறவில்லை ஆகவே அவரை கொண்டாடக்கூடாது என்கிறது இந்த மூடம்  நல்ல காலம் ஸ்டாலின்  இந்த புத்திசாலியின் பேச் சை கேட்கவில்லை  கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்ததை பற்றி இந்த தத்துவ ஞானி விளக்கம் கொடுக்கிறார். "அடேய் ! உனக்கு National Democracy ,  Peoples Democracy என்ற வார்த்தையாவது தெரியுமா ? டீக்கடையில் பால் காயசிக்கொண்டிருக்கும் எங்கள் உறுப்பினர் கணேசனிடம் கேள். விளக்குவார் .சைக்கிளில் முட்டை விற்றுக்கொண்டிருக்கும் முத்தைய்யாவிடம்கேள் சொல்லித்தருவார் "

நாடாளுமனற  யுக்திகளை வடிவமைப்பது உன் கம்பெனி வாசப்படியில் அல்ல. காங்கிரஸ், இடதுசாரிகள், பா மாக, வி.சி.க, மதிமுக, தேமுதிக , என்று பல கடசிகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டிய ஒன்று .

இவர்கள் மொத்த வாக்கு என்பது 23% . இந்தவாக்கு இல்லாமல் திமுக வென்றுவிடும் என்று  நீ   நினைத்தால் - விடு- உங்கள் தலைவர் நினைக்கமாட்டார் . இன்னென்று தெரியுமா?

அதிமுக வின் மூன்று அணிகளும் சில விஷயத்தில் ஒத்த கருத்தில் இருக்கின்றனர் . பா.ஜ .க வோடு சேர்ந்தாலும் சேராவிட்டாலும் சட்டமனறத்தில் திமுக பெரும்பான்மை பெறக்கூடாது என்பதற்கான negative வாக்குமுறையை  சரியான தருணத்தில்    கையாள தயாராக இருக்கிறார்கள்.

தமிழக வாக்காளர்கள் மௌனமாக காரியம் சாதிப்பவர்கள் . அவர்களில்  திராவிடர்கள் ஆண்டது போதும் என்று  நினைப்பவர்கள் கணிசமாக உண்டு.

பா.ஜ .க வை மத்தியில் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்  என்று  நினைக்க வேண்டாம்  எனபதை மட்டும் இப்போதைக்கு சொல்லி வைக்கிறேன் !!!


0 comments: