Sunday, December 02, 2018






இருந்த போதும் அள்ளி கொடுக்கும் !

இறந்த போதும் அள்ளி கொடுக்கும் !!!




2004 ம் ஆண்டு  என் துணைவியார் பணி  ஒய்வு பெற்றார். முதுமைக்காலத்தில் யாருக்கும்  சிரமம் கொடுக்கக் கூடாது என்று நினைப்பார் அவர் .திடீரென்று இறந்தால் மகன் ,மக்கள் என்ன செய்வார்கள்  என்று நினைத்தார் .சனாதன குடும்பம் என்பதால் "சாங்கியங்கள் " எப்படியும் 50000 /- ஆகும். வருடாந்திர நினைவேந்தலுக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் ஆகலாம் . இவற்றிற்காக 85000ரூ க்கு ஒரு பாலிசி எடுத்து அதன் பயன் மகனுக்கு என்று சொன்னார்> அதே போல் மகளுக்காக 50000 /-  ரூபாய்க்கு ஒரு பாலிஸ் எடுத்தார் . 

நான் 1996ல் ஒய்வு பெர்றேன்.3 லட்சம் ரூபாயை  fd ஆக போட்டேன் .அது குஜராத்தில் செயல்படும் மருந்து காமப்பேணி. வட்டி  அதிகம் தந்தார்கள் . மூன்று ஆண்டு க்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ளலாம் .வட்டி ஒழுங்காக வந்தது .மூன்று ஆண்டுகள் கழித்து புதுப்பிக்க நேரம் வந்தது> அப்போது கம்பெனியிலிருந்து கடிதம் வந்தது .கம்பெனி சட்டப்படி கம்பெனி முதிர்வு பணத்தை  ஆண்டுக்கு 20 சதம் விதம் ஐந்து ஆண்டுகளில்கொடுக்கும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அறிவிப்பு வந்தது .வட்டியும் இல்லை என்று அறிவிப்பு வந்து விட்டது 

என் துணைவியார் எடுத்த பாலிசி ANNUITY ! மாதம் 600 /- ஒரு பாலிசியில்,மற்றோன்றில் மாந்தம் 413 /- ர்பாயும் வந்து கொண்டிருக்கிறது . அதாவது மாதம் 1013 x 12 x 14 விதம் இதுவரை சுமார் 170000 /- வந்து விட்டது. என் துணைவியார் இன்னும் பத்து ஆண்டுகள் இருக்கும் வாய்ப்பு உள்ளதாக நன் நினைக்கிறன்.

Ij anything untowerd  haappens my son and daughter will get benifit of 85000 /- and  50000//-


என் துணைவியார்  LIC ல் பாலிசி எடுத்துள்ளார்.

lic இருப்பு தொகை 30 லட்சம் கோடி என்கிறார்கள். இதனை அம்பானிக்கும்.,அதானிக்கும் கொடுக்க சதி நடப்பதாக சொல்கிறார்கள். lic பாலிசிதாரர்களிலிருந்து, chairman ,அதிகாரிகள்  ,ஊழியர்கள், வளர்சசி அதிகாரிகள், முகவர்கள் மற்றும் மக்கள் இணைந்து போராடி தடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

இருந்தும் அள்ளி கொடுக்கும் ,இறந்தும் அள்ளி கொடுக்கும் lic ஐ காப்பாற்றுவோம்.!!!   

0 comments: