skip to main |
skip to sidebar
சாமியே ...!
சரணம்.....!!
நாகபுரியிலிருந்து என் குடும்பத்தினர்கள் சபரிமலை புறப்பட எத்தனம் செய்தனர் .தகராறான இந்த நேரத்தில் போகவேண்டாம் என்று சொன்னலும்கேட்கும் ஜென்மங்கள் இல்லை. திட்டப்படி டிசம்பர் 14ம் தேதி பெங்களூர் விமானப்பயணம். அங்கிருந்து கோட்டயம்.ரயில்.
என் மகன் கேரள முதலமைசார் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிலைமை பற்றி விசாரித்தான். அதிகாரி விபரங்களை சொன்னார் .
கோட்டயத்திலிருந்து வாகனம் மூலம் நிலைக்கல் வரை போகலாம் .அதன் பிறகு தனியார் வாகனத்திற்கு அனுமதி இல்லை. நிலாக்கல்லி ருந்து அரசு போக்குவரத்து மட்டுமே என்று அதிகாரி விளக்கினார்.
சுவாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அங்கேயே தங்குவார்கள். காலை 4மணிக்கு நெய் அபிஷேகம் பார்த்து விட்டு கீழே இறங்குவது வழக்கம். இந்தத்தடவை 144 தடை உத்திரவு போட்டு அங்கே யாரும் தங்கமுடியாது . என்று அரசு அறிவித்து விட்டது> ஆனால் இரவு 12மணிக்கு பஸ் ரெடியாக இருக்கும்மலை ஏறும்போது நான்கு மணி சரியாக இருக்கும் .சொகுசு பஸ் ,மற்றும் ஏசி பஸ்வசதி யை அரசு செய்திருக்கிறது.
கூட்டம் கட்டுபாட்டிலிருக்கிறது . அரசு பெருந்தில் அங்கங்கே கடுமையான செக்கிங் ! இன்ஸ்பெக்டரும், கண்டக்டர்களும் கேட்கும் கேள்விகள் மூலமும், பார்வைகள் மூலமும் போலி "ஐயப்பாமாரை " கீழே இறக்கி அனுப்பி விடுகிறார்கள் .
என் குடும்பத்தினர் 18ம் தேதி நாகபுரி திரும்பினார்கள்
எந்த ஆண்டும் இல்லாதவாரூ இந்த ஆண்டு மிகவும் சவுகரியமாக சென்றுவந்தோம். என்றான் என் மாப்பிளை.
"எல்லாம் அய்யப்பன் பாத்துப்பான் ! சாமிசரணம் !! என்று முடித்தான்.
"இல்லைடா பயித்தரா ! பினராயி சரணம் " என்று நான் சொல்லிக்கொண்டேன்.
0 comments:
Post a Comment