பிடிவாதக்கார இயக்குனர்
லெனின் பாரதி ....!!!
அதிகாலை நேரம் .மழை கொட்டுகிறது. "ரங்கா ... ஏல ..ரங்கா ...எந்திரி " என்கிறார் அந்த அம்மையார் . ரங்கன் எழுந்து .மழை நீரில் வாய் கொப்பளித்து " ஆத்தா ! நாளை பத்திரம் பதிவு.சாக்கு போக்கு சொ ல்லாத. காலைல வந்திடு . நல்ல சேலைய உடுத்திகிட்டு வா ! "என்கிறான்.
இருட்டில் உருவங்கள் புலப்பட வார்த்தைகள் காதில் விழுகின்றன. "மேற்கு தொடர்சசி மலை" படம் ஆரம்பமாகிறது. 35 நிமிடம் படம் ஒட்டிய பிறகு கங்காணி "நாளை பத்திரம்ப்பதிவா " என்று கேட்கிறார் .
வெளிர் நீல சட்டை, கருநீல கால்சாராயில் ரங்கன் ஸ்டூலில் அமர்ந்திருக்க காற்றாலையின் ராட்சச சக்கரங்களின் பின்னணியில் ரங்கன் தூரத்து கழுகு பார்வையில் தெரிய " குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் நிலமற்றவர்களுக்கு காணிக்கை "என்று படம்முடிகிறது.
இந்த படத்தின் one line இது தான்.
ஏலத்தோட்டத்து சுமகாரர்களின் வாழ்க்கையை பார்வையிடும் சாட்ச்சிகளாக்கி நம்மை ஒன்ற செய்கிறார் இயக்குனர் லெனின் பாரதி .
சுமைக்காரர்கள் மலைமேல் ஏறுகிறார்கள். என்ன நுணுக்கமான ஒலி ப்பதிவு. அவர்களின் குரலோசை மூலம் அவர்களுக்கு இடையே உள்ள தூரத்தை பதிவு செய்கிறார்கள் .
தேனீ சுந்தர் மற்றுமொரு பிடிவாதக்காரர். படம் முழுக்க ஒரு குளோசப்.அல்லது டைட் இல்லை. அந்த வாழ்க்கையை வாழ அதனைப்பார்க்கும் சாட்ச்சிகளாக நாம் . மேற்குமலையின் முகடுகளில் நாம் ஏறி நிற்கிறோம்.அங்கு வீசும் காற்று ,குளிர், பட்சி களின் இரைசல் அத்தனையும் நமக்காக காத்திருக்கின்றன.
இரண்டுமணி நேரம் ஓடும் படத்தின் இசைக்கோர்வை 20 நிமிடம் கூ ட இருக்காது. இபடத்தின் இசை கோர்வையை மட்டும் கேட்டுக்கொன்டே தூங்குங்கள். இளையராஜா எந்த உயரத்தில் இருக்கிறார் என்பதை உணருவீர்கள்/அற்புதம்.
இந்த படத்தை விஜய் சேதுபதி என்ற முன்னணி நடிகர் தயாரித்துள்ளார்.அவரை நடிக்க வேண்டாம் என்று சொன்ன லெனின் பாரதி பிடிவாதத்தக்காரர்தான். ஆனால் அவரை வீட\ பிடிவாதக்காரர் என்று தன்னை நிரூபித்து விட்டார் சேதுபதி.
இத்தகைய பிடிவாதக்காரர்கள்
வாழ்க ! வளர்க !!
0 comments:
Post a Comment