புத்தகக் கண்காட்சி, பதிப்பாளர்கள் , எழுத்தாளர்கள் ,...!!!
சென்னையில்ன் நடை பெரும் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு ஆண்டுக்கு முன்பு சென்றதுண்டு ! இருந்தும் எழுத்தில் ஆர்வமுள்ளவன் என்ற முறையிலும் பத்திரிக்கை,பதிப்புத் தொழில் பற்றிய அனுபவம் உண்டு என்பதாலும் இது பற்றிய செய்திகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் !
இந்த ஆண்டு 15 கோடிக்குமெல்வ விற் \பனயை எதிர்பார்க்கிறார்கள் ! சுமார் 200 நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன ! இவை 700 கடைகளைப் பிடித்துக் கொண்டுள்ளன !
இங்குள்ள உணவு வசதி பற்றி பதிவர் ஒருவர் எழுதி இருந்தார் ! " அம்மா" உணவகத்தில் 5/-ரூ சாம்பார் சாதம் போடுகிறார்கள் ! அதைப்போல் போடவேண்டாம் ! நந்தனத்திர்கு வெளியே 30/- ரூ போடுகிறார்கள் ! இவர்கள் தயிர் சாதம் 50 /-ருக்கும் சாம்பார் சாதம் 60/-ருக்கும் போடுகிறார்கள் ! இதிவிட் "பப்பாசி " முதலாளிகள் கையில் துப்பாக்கியையோ,கத்தியையோ வைத்து வரும் பார்வையாளர்களை மிரட்டிப்பணம் சம்பாதிக்கலாம் !
"பாபாசி"க்காரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடிக்கு மேல் மிஞ்சுவதாக ஒரு பேச்சு இருக்கிறது ! அதுஆண்டுக்கு ஆண்டு
அதிகமாவதாகத் தெரிகிறது ! இல்லையென்றால் ஆண்டுக்கு ஆண்டு இவ்வளவு விமரிசையாக நடத்த முன் வரமாட்டார்கள் ! சோழியன் குடுமிசும்மா ஆடாது !
பதிப்பகங்களின் அமைப்பு தான் பாபாசி ! பதிப்பகங்கள் என்னென்ன செய்கின்றன என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கவாய்ப்பில்லை !
இவற்றை பதிப்பகங்கள் என்பதை வித "printing industry "என்று கூறுவது பொருந்தும் ! காலண்டர்களையும்,விளம்பரபோஸ்டர்களையும் அச்சடிக்கும் சிவகாசி பிரிண்டிங் பிரஸ் களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை !
பதிப்பகங்களின் கச்சாப் பொருள் "எழுத்தாளர்கள் "!
இந்த எழுத்தாளர்களை "விலையில்லாப்" பண்டங்களாக மாற்றி வருகிறார்கள் இவர்கள் ! இதில்முதலாளி ,முற்போக்கு, கூட்டுறவு என்று எந்த பேதமுமில்லை !
எழுத்தாளர்களுக்கு கொடுப்பது இருக்கட்டும் ! அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பதிப்பிக்கும் நிறுவனங்கள் உள்ளன ! அதோடு போனால் பரவாயில்லை ! அதற்கான புத்தகங்கள குறைவாக அச்சிட்டு ஏமாற்றும் பதிப்பாளர்கள் உண்டு !
சென்ற ஆண்டு ஒரு பத்திரிக்கை நடத்திய சி்று கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதையை முறைப்படி அனுமதி பெற்று இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு இந்துஸ்தான் பத்திரிகை குழுமத்தின் இந்தி இலக்கிய பத்திரிகயான "காதம்பிணி "அனுப்பினார் ஒரு எழுத்தாளர் !
அவருக்கு சன்மானமாக 1600 /-ரூ அனுப்பியது அந்தப்பத்திரிகை !
பஞசாபி நாவலொன்றை இந்தி முலம் தமிழில் மொழி பெயர்த்து சாகித்ய அகாதமிக்கு அதே எழுத்தாளர் அனுப்பியிருந்தார் !
சாகித்திய அகாதமி 1000 வார்த்தைக்கு 250/- ரூ சன்மானம்கொடுக்கி றது !
அந்த எழுத்தாளருக்கு கிட்டத்தட்ட 33000/- ரூ சன்மானமாகக் கொடுத்தார்கள் ! அந்த நூல் புத்தகமாக வருகிறதா இல்லையா என்பது கணக்கில் கொள்ளப்படுவதில்ல ! மொழிபெயர்ப்பு அங்கிகரிக்கப்பட்டதும் பணம் பட்டுவாடா ஆகிறது !
இதில் இன்னும் விசேசம் என்ன வென்றால் அரசு சார்ந்த நிறுவனமானாலும் "முக்காத்துட்டு" லஞ்சமாக கேட்கப்படவுமில்லை! கொடுக்கப்படவுமில்லை என்பது தான் !
சாகித்ய அகாதமி அலுவலக வாயிலில் வயதான எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பு வாய்ப்பிற்காக காத்திருக்கும் அவலத்தையும் பார்க்கலாம் !
தமிழகத்தின் சிறந்த (பிரபலமான அல்ல ) எழுத்தாளர் ஒருவர் ஒரு பதிப்பகத்தை நாடி சிறுகதைத்தொகுப்பை போடும் படி கேட்டுக் கொண்டார் !
சிறு கதை இப்பொதெல்லம மார்க்கெட்டில் போவதில்லை என்று அந்தபதிப்பகம் நிராகரித்து விட்டது !
கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக சிறுகதையே எழுதாத பிரபலமான (!) எழுத்தாளரின் தொகுப்பை அடுத்த மாதம் அதே பதிப்பகம் வெளியிட்டது !
எழுத்தை மட்டும் நம்பி தன வாழ்க்கையை அமைத்து வெற்றிகரமாக வாழ்ந்தவர் எனக்குத் தெரிந்து தோழர் ஜெயகாந்தன் மட்டுமே !
"பாப்பாசி" உறுப்பினராக இருக்கும் பாரதி புத்தகாலயம்,கிழக்கு பதிப்பகம்போனற நி்றுவனங்களைச் சேர்ந்தவர்கள் எழுத்தாளர்களின் நலனையும் கணக்கில்கொண்டு செயலாற்ற பாப்பாசியை வற்புறுத்த வேண்டும் !!!
1 comments:
சொன்னீங்களே.. சாட்டையடியாட்டம்.
Post a Comment