Friday, November 28, 2014
Wednesday, November 26, 2014
ATM பற்றியது அல்ல ....!!!
Automatic teller mechine என்றால் என்ன என்று கட்டுரைஎழுதப்போவதில்லை !
ATM என்பதை தமிழில் எப்படி சொல்லுவீர்கள் என்று வங்கியில்பணிபுரியும் மூத்த ஊழியரிடம் கேட்டேன் ! ATM நு தான் சொல்றாங்க என்றார் !
இதில் பணம் எடுக்கும் போது நடக்கும் வழிப்பறி பற்றி செய்திகள் வந்துள்ளன ! அந்த இயந்திரத்திலிருந்து மற்றவர் பணத்தை "அபேஸ் " செய்வது பற்றியும்செய்திகள் வந்ததுண்டு !
சமீபத்தில் அந்த இயந்திரத்தையும் அதனை கண்காணிக்க வைத்திருந்த காமிராவையும் துக்கிச்சென்ற செய்தியைப் பார்த்தோம் !
மிக அதிகமாக அதில் 20லட்சம் ரூ வைத்திருப்பார்கள் என்கிறார்கள் !
இதனை பிடிக்க போலீஸ் சிறப்பு விசாரணை ,கமிஷன் என்று போடுவார்கள் !
சில ஆண்டுகளுக்குமுன்னால் "கிங் ப்ஃஷர் கம்பெனி தள்ளாடியது !அதன் தலைவர் மல்லையா தெருத்தெருவாக அலைந்தார் ! கடனுக்காக !ஒருபய கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான் !
அப்பம் நம்ம நிதி அமைச்சர் ரொம்ப வருத்தப்பட்டார் ! ஸ்டேடவங்கிய கூ ப்பிட்டு அவருக்கு கொஞ்சம் கடன் கொடுத்து (5000 கோடி ) உதவுங்கள் என்று சிபாரிசு செய்தார் !
சின்ன அதிகாரி இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க விரும்பினார் ! அவருக்கு தெரியும் கடன் திருப்பி வராது என்பது !"இவ்வளவு பெரிய தொகையை என்னால் அனுமதிக்க முடியாது ! இதனை வங்கி தலைவர்தான் முடிவு செய்யணும் " என்று தப்பித்து கொண்டார் !
தலைவர் இதனை மோப்பம் பிடித்தவர் ! "படக் " என்று வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போய்விட்டார் ! மல்லையா கையை பிசைந்து கொண்டிருப்பதை பார்க்க சகிக்காமல் நிதி அமைச்சர் கண்ணிர் வீட்டர் !
அதிகாரிகளை கலந்து ஆலோசித்தார் ! ஸ்டேட் வங்கி அதிகாரிகளை கடன் கொடுக்கும் ஆவணத்தை தயார் செய்ய்ச் சொன்னார் ! ஒரு அதிகாரியை விமானத்தில் அனுப்பி தலைவரிடம் கையெழுத்து வாங்கி வரசெய்தார் ! சோத்துக்கு லாட்டரீ அடித்த மல்லையாவுக்கு கடன் கிடைத்தது !
இது ஐக்கிய முன்னணி U P A காரன் செஞ்சது!
NDA காரன் அப்படி எல்லாம் செய்யவில்லை !
அதனியை பிரதமர் தன்னோட விமானத்திலேயே அழைத்துசென்றுவிட்டர் !
6000 சொச்சம் கோடி கடனை ஸ்டேட்வங்கி கொடுக்கும் நு செய்திகள் சொல்கின்றன !
வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடிவருகிறார்கள் !
"எப்படிங்க கொடுக்க முடியும் ! லட்சக்கணக்கில கடன் பாக்கி இருக்கு ! நட்டம் ! ஊதியம் எப்படி கூட கொடுக்க முடியும்"நுநிதி அமைச்சகம் சொல்லுது !
வங்கி ஊழியர்கள் மல்லையா,அதானி வீட்டு வாசலில் ஆர்பாட்டம் செய்யாமலிருக்க வேண்டும் !
நம்ம பத்திரிகைகள் ATM கொள்ளைபற்றி பத்தி பத்தியா எழுதும் !
படிச்சுக்கிட்டு இருப்போம் !!!
Tuesday, November 25, 2014
நினைக்க நினைக்க
இனிக்கும் செய்தி...!!!
தாழையுத்து என்ற சங்கர் நகர் அருகில் இருக்கும் கங்கை கொண்டானில் "கொலா" தொழிற்சாலையை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் ! அரசு உட்பட எவரும்கண்டுக்கல ! சிவகங்கைமாத்தூரில் கம்யுனிஸ்டுகள் "கோலா" கம்பெனியை எதிர்த்து பொராடினார்கள் ! கண்டுக்கல ! ஜார்கண்டில் ஒரு ஆற்றையே 60 மைல் நீளத்திற்கு "கொலா" கம்பெனிக்கு விற்று விட்டர்கள் !கண்டுக்கல ! இந்த போரட்டங்களில் பங்கு கொண்ட மனிதனுக்கு இது பற்றிய செய்தி வந்தால் மனம் நிறைவையாவது தரும் ! அதே மன நிலைதான் "கத்தி" படத்தை பார்த்த கம்யுனிஸ்டுகளூக்கும் !
ஒரு இலக்கிய படைப்போ,கலைப்படைப்போ ,புரட்சியை நடத்தி விடாது ! ஆனால் பிரும்மாண்டமாக நடக்க விருக்கும் அந்த புனிதப் போரின் முன்னணிப்படையாக அவை sappers and miners ஆக செயல்படும் ! அப்படிப்பட்ட advance guard ஆக செயல் பட கலை இலக்கிய வாதிகளை தூண்டும் செயல்தான் கம்யூணீஸ்டுகள் "கத்தி "பற்றி விமரிசிப்பது !
புரட்சி நடந்த பிறகும் கூட சோவியத்தில் நிலத்தில் இறங்க விவசாயிகள் பயப்பட்டர்கள் ! "குலக்குகள்" மீண்டும் வந்து விடுவார்களோ என்று பயந்தார்கள் ! அவர்களுக்கு புரட்சி என்றால் என்ன என்று தெரியாது ! அவர்களுக்கு புரட்சி பற்றி கற்றுத்தர லெனின் அவர்கள் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அழைத்தார் ! அப்பொது உருவானது தான் "Battle ship...." , "October ...", Blue mountain" போனற படங்கள் ! இவை புரட்சி நடக்கும் போது காமிரவும் கையுமாக எடுக்கப்பட்டது அல்ல !
எங்கள்தலவர் "சுனில்மைத்ரா " அவர்கள்குறிப்பிடுவார்கள் !" சோவியத் புரட்சி பற்றி ஐம்பது அறுபது புத்தகங்களாவது வந்திருக்கும் ! நான் சுமார் முப்பது புத்தகங்களைத்தான் படித்துள்ளேன் மீதமுள்ளதை படிக்க முடியவில்லை " என்று குறிப்பிடுவார் !
புரட்சிப்படை வரும் பொது எதிரிகள் ஒளிந்திருந்து தாக்குவார்கள் ! எதிரிகளிடமிருந்து வீரர்களை பாதுகாக்க முண்ணனிபடை செல்லும் ! அது வீரர்கள்செல்ல விருக்கும் பாதையை செப்பனிடும் ! அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றும் ! ஒளிந்திருக்கும் எதிரிகளின் முதல் தாக்குதலை சந்திக்கும் ! எதிரிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்களென்பதை பின்னல் வரும் வீரர்களுக்கு அடையாளம் காட்டும்!எதிரிகள் பகுதிக்குள் சென்று அந்த மக்களை நம் பக்கம் இழுக்க கலை இலக்கியத்தை பயன்படுத்தி கருத்து விதைகளைத் தூவும் !மிகுந்த சேதத்தை சந்திக்கும் ! இந்த முண்ணணிபடை போரில் மிகவும் முக்கியமான பணியை தன்னலம்கருதாது செய்யும்!
இதனை செய்யும் கலைஞர்கள் எழுத்தாளர்கள் தான் முற்போக்கு எழுத்தாளர்கள் ! புரட்சி கலைஞர்கள் !
தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 20.,21,22 ம்தேதிகளில் திருப்பூர் என்ற திரு நகரத்தில் கூடப்போகிறார்கள் !
நினைக்க நினைக்க இனிக்கும் செய்தி !
Saturday, November 22, 2014
முகவரிதான் உங்களுக்கு தெரியுமே !
ஒரு அஞசல் அட்டை போடுங்களேன் ...!!!
அந்தககுழந்தை பிறந்த உடனேயே அவர்கள் குலவழக்கப்படி அவளுக்கு மாப்பிளளையை தீர்மானித்து விட்டர்கள் ! குழந்தைத் திருமணம் ! பதினைந்து வயதில் சடங்கு ! நாள் குறித்து கணவன் வீட்டிற்கு போனாள் !
மூன்று மாதம்கணவரோடு வாழ்ந்தாள் !
பின்னர் தாய்வீடு வந்தாள் !
கணவர் அழைத்து செல்வார் என்று காத்திருந்தார் ! வரவில்லை !
வேலைக்கு செல்ல விரும்பினார் ! கணவரால் கைவிடப்பட்டவருக்கு கலக்டர் வேலையா கிடைக்கும் ! பள்ளிப் படிப்பு தொடர்ந்தது! ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியரானார் !
என்றாவது ஒரு நாள் கணவர் வருவார் ! என்ற நினைப்பிலேயே வாழ்ந்தார் !
கணவரப்பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் மனம் முகிழ்ந்து போவர் ! அவர் நன்றாக வாழ கடவுளை வேண்டுவார் ! காலம் ஓடிக்கொண்டிருந்தது !
ஊரில், அண்டை அசலில் என்ன பேசுவார்கள் என்று அவர் சிந்திக்க வில்லை ! மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதவில்லை ! பெண் என்பதால் பாதுகாப்பிற்கு சகோதரன் குடும்பத்தோடு வாழ்ந்தார் !
ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வும் பெற்று விட்டார் !
Zee Media Bereu என்ற நிறுவனத்திடம் " வோ லேனே ஆயோந்தோ மை தயார்ஹூம் " ( அவர் என்னை அழைத்தால் நான் தயாராகஇருக்கிறேன் ) என்று அந்த அம்மையார் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன!
திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆகிவிட்டன !
கடைசிகாலத்தில் கணவனோடு வாழ விரும்பும் அந்த மூதாட்டியின் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் !
நீங்களும் விரும்புவீர்கள் என்று எனக்கு தெரியும் !
அவர் கணவருக்கு ஒரு அஞசல் போடுங்களேன் !
அவருடைய முகவரி ........
உங்களுக்குத்தான் தெரியுமே !!!
Wednesday, November 19, 2014
"பறை" இசையும்,
மசாலா.எப்ஃஎம் அலை வரிசையும்..!!!
இருபத்து நான்கு மணிநேரமும் நிகழ்ச்சிகளை நடத்தும் அலைவரிசை மசாலா.எப்ஃ எம் ! வெளிநாட்டிலிருந்து ஒலி பரப்பப்படும் இந்த அலை இரவும் பகலும் கணினியில் பணிபுரிபவர்களுக்காக திரைப்பட மற்றும் இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது ! மூளை அயர்ந்து விடாமல் இருக்க இசையை பயன்படுத்தும் நோக்கம் கொண்டது !
இந்த நிகழ்ச்சியில் இசைக்கருவிகளைப் பற்றி ஒலிபரப்பினார்கள் !
பறை, நாதஸ்வரம்,தவில்,வீணை ஆகியவை பற்றியும், அவற்றின் தோற்றம்,வளர்ச்சி இன்றைய நிலை ஆகியவை பற்றி விளக்கம் அளித்தார்கள்!
"குழுக்களாக இருந்த மனித சமூகம் தங்களுக்குள் ஒன்றுகூடி தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது ! ஒலிபெருக்கி, போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் மிகவும் அதிகமானவர்களை சென்றடைய ,அவர்களை அழைக்க ,ஒன்றுபடுத்த, ஒரு கருவியை உருவாக்கினார்கள் !"
"மரத்தாலான ஒரு வட்டில் உருவாக்கி அதனை மாட்டுத்தோலால் மூடி அதன்மீது குச்சியால்தட்டி ஒலி எழுப்பினர் "!காத்திரமானதும்,விசேஷமானதுமான இந்த ஒலி யின் தனித்தன்மை அவர்களுக்கு செய்தியின் அவசரத்தையும் உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது பற்றியும் அறிவுறுத்தியது!
"கால வர்த்தமானத்தில் அது தாளக்கருவியாகவும்,இசைக்கு ஏற்ப ஆட துணைகருவியாகவும் பயன்படலாயிற்று "
இதே போன்று தவில்,நாதஸ்வரம்,வீணை என்று பல்வேறு இசைக்கருவிகள் பற்றி விளக்கம் அளித்தார்கள் !
இந்த நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவர் இசைத்துறையில் பட்ட மேற்படிப்பு (M . A ) படித்தவர் !
இசை கலைஞர்களின் அறிவுசார் உரிமைகள் பற்றி ஆராய்ந்து M .Phil பட்டமும் பெற்றவர!
இதற்காக சட்டக்கல்லூரியில் சேர்ந்து பட்டமேற்படிப்பு (M .L ) பட்டம் பெற்றவர் !
ஹன்ஸா காஷ்யப் என்ற இவர் தற்போது திருச்சியில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார் !
(கொசுறு : எழுத்தாளர் காஸ்யபனின் செல்ல மகளுமாவார் !)
Friday, November 14, 2014
இந்து மத சீர்திருத்த சட்டமும்
வலது சாரிகளின் சதியும் .......!!!
"சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக இன்றி அமையாதது சமூகபண்பாட்டுத்துறையிலும் மாற்றங்கள் வரவேண்டும் ! அப்போதுதான் ஒரு சமத்துவமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் " என்று அன்றய தலைவர்கள் கணித்தார்கள் !
முக்கியமாக இந்து மதத்தில்முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டுவர நேரு விரும்பினார் ! அவருக்கு ஆதரவாக அம்பேத்கர் இருந்தார் ! சட்டத்திருத்த மசோதாவை உரூவாக்க அம்பேத்கர் முற்பட்டர் !
இதில் மிக முக்கியமான அம்சங்களாக
1) கணவனை இழந்த பெண் ,மற்றும்பெண்வாரிசுகளுக்கு சொத்துரிமை !
2) மனைவியைத் துன்புறுத்தும் கணவனிடமிருந்து விவாக ரத்து பெரும் உரிமை !
3) மனைவி உயிரோடு இருக்கும் பொது கணவன் மறுமணம் செய்து கொள்வதை தடுப்பது !
4) சாதிவிட்டு சாதி திருமணம் செய்வதை சட்டபூர்வ மாக்குவது !
5) சாதிவிட்டு சாதி தத்து எடுத்துக் கொள்வதை சட்டபூர்வமாக்குவது !
இந்த ஐந்தும் முக்கியமானவைகளாகும் ! இதனை வலது சாரிகள் எதிர்த்தனர் ! அவ்ர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பாபு ராஜேந்திர பிரசாத், ,வல்லபாய் படேல்,ஷ்யாமா பிரசாத்முகர்ஜி ஆகியொர் !
இந்தமசோதாவை நாடாளுமனறத்தில் நிறைவேற்றி சட்டமாக்க நேருவும்,அம்பேத்கரும் முனைப்பாக இருந்தனர் !
இதில் மிகவும் முக்கியமாக இருந்தது சவர்க்கர் இந்த சீர்திர்த்த மசோதாவை ஆதரித்து தான் !" இது காங்கிரஸ் காரர்களின் தேர்தல் பிரச்சாரமாக இருந்தால் என் ஆதரவு இல்லை ! ஆனால் நாட்டின் வளர்சிக்கு இது தேவை என்பதால் ஆதரிக்கிறேன் "என்று சவர்க்கர் அறிவித்தார் !
நாடாளுமன்றத்தில் நிறைவேறும் நிலை உண்டானது !
அப்போது ராஜேந்திர பிரசாத் பிரதமர் நேருவுக்கு மிகமிக ரகசியமாக ஒரு கடிதம் எழுதினார் ! அதில் "நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும் ஜனாதிபதி என்ற முறையில் நான் ஏற்க மறுக்கும் வாய்ப்பு உள்ளது "என்று குறிப்பிட்டிருந்தார் ! இந்த கடிதம் நேருவின் கைகளுக்கு போகும் முன்பே வலது சரிகள் பத்திரிகைகளுக்கு தெரிவித்து விட்டனர் !
ஒரு பக்கம் நடாளுமன்றம் ! மறுபக்கம் ஜனாதிபதி ! இரண்டும்முட்டி மோதுவது அன்றைய இளம் குடியரசுக்கு நல்லதா ! நேரு இதனை எதிர்பார்க்கவில்லை ! மேலும் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் ! இந்த சந்தர்பத்தில் இந்த பலப்பரிட்சை தேவையா என்று நேரு சிந்திக்க ஆரம்பித்தார் !
அம்பேத்கர் நொறுங்கிப் போனார் ! நேரு தன் உறுதி மொழியக் காப்பாற்றாமல் தன்னை கை கழுவி விட்டதாக மனதார நம்பினார் !
பின்னர் நடந்தெதெல்லாம் வரலாறாயிற்று !!!
Thursday, November 13, 2014
ஜவகர்லால் .........!!!
அந்தச் சிறுவன் பள்ளிக்கு சென்றிருந்தான் ! பள்ளி வாசலில் அவனை அழை த்துச் செல்ல கார் நிற்கும் ! அதில் ஏறி வீட்டிற்கு செல்வான் ! ஓர்நாள் அவன் தன கூட படிக்கும் சிறுவர்களோடுபேசிக்கொண்டே வெளியெ வந்த பொது காரைக் காணவில்லை!
அந்த பள்ளிக்கு நான்கு வாயில்கள் ! எப்போதும் வரும் வாயில் வழியாக வராமல் வெறு வாயில் வழியாக வந்து விட்டான் ! விடு செல்ல நேரமாயிற்று ! செல்லப்பிள்ளை !
அவன் தந்தை நான்கு கார்களை வாங்கினார் ! நான்கு ஓட்டுனர்களை நியமித்தார் ! நான்கு வாயிகளிலும் கார்களை நிறுத்தி தன செல்ல மகன் இஷ்டம்போல் வர ஏற்பாடு செய்தார் !
அந்த செல் மகன் பெயர் ஜவகர் !அவன் தந்தை பெயர் மோதிலால் !--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜவகர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டுமொத்தம் 3000நாட்கள் சிறையில் இருந்ததாக சொல்வார்கள் !
ஜவகரின் செல்லமகள் பிரியதர்சினி !சிறு வயதில் அவர் தன மகளோடு கொஞ்சி விளையாடியதில்லை !
மகளுக்கு சிறையிலிருந்து கடிதம் எழுதியே உலக சரித்திரத்தை போதித்த தந்தை உலகத்திலேயே அவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் !
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஜவகரின் மகள் இந்திரா பிரியதர்சனி ! திருமணமாகி பேரன் பிறந்திருக்கிறான் ! ஜவகர் அப்போது சிறையில் இருந்தார் ! பேரனைப் பார்க்க வேண்டுமானால் ஜாமீனில் போங்கள் என்று பிரிட்டிஷ் அரசு சொன்னது !
ஜாமீனில் செல்ல மறுத்து விட்டார் !
போலிஸ் வானில் அவரை அழைத்துச் சென்றார்கள் 1 இந்திரா அந்த சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் தன மகனை தூக்கி காட்டினார் ! ஜவகர் பேரனைப் பார்த்துகையசைத்தார் !
ஜவகர் ,இந்திரா, குட்டி பேரன் ராஜீவ் ஆகியோர் இந்தியாவின் பிரதமராக இருந்தது பின்னாளைய சரித்திரம் !
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஜவகரின் மனைவி பெயர் கமலா ! அலகாபாத்தில் ஒரு பள்ளி முன்பு சத்தியாகிருக்த்தில் ஈடுபட்டர் ! வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தார் ! கூட அவருடைய சின்னஞ்சிறு மகள் இந்திரா ! பள்ளிச் சிறுவன் ஒருவன் ஓடிவந்து கமலாவைத் தூக்கி வைத்து முதலுதவி செய்து வீட்டில் கொண்டு விட்டான் !
அந்த சிறுவன் பெயர் பெஃரோஸ் ஜஹாங்கீர் காந்தி ! பின்னாளில் இந்திராவை மணந்தவர் !
ஜவகருக்கு இந்த திருமணத்தில் விரு ப்பமில்லை !மகாத்மா காந்தியின் மூலமாக பெஃரோஸை மாற்ற முயன்றார் ! காந்தி இந்திராவை கூப்பிட்டு அனுப்பினார் ! "புகழ் பெற்ற தலவர்கள் நீங்கள் இருவரும் ! நான் பெஃரோசை மணப்பதை உங்களால் தடுக்க முடியாது ! உங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் " என்று கூறிவிட்டார் இந்திரா !
--------------------------------------------------------------------------------------------------------------------------ஜவகரின் மனைவி கமலாவுக்கு உடல்நலம் மோசமாகியது ! அவர் சுவ்ட்சர் லாந்தில் ஓய்வெடுக்க மருத்துவர் அனுப்ப விரும்பினார் ! பாரிசில் இறங்கி மூன்று ரயில்களில் மாறி செல்ல வேண்டும் ! மருமகள் சிரமப்படுவார் என்று கருதிய மோதிலால் பாரிசிலிருந்து சுவிஸ் வரை தனியாக ஒரு ரயிலை ஏற்பாடு செய்தார் ! அதில் கமலா,ஜவகர் ,இந்திரா,மற்றும் பெஃரோஸ் மட்டும் பயணம் செய்தனர் !(30 ம் ஆண்டுகளில் )
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஜவகர் ஒரு நாத்திகர் !கோவில் குளத்திற்கு சென்று சாமியார் காலில் விழாதவர் ! காந்தி தான் ஒரு "இந்து "என்று பெருமைப்படுபவர் ! ராம பக்தரும் கூட !
வல்லபாய் படே லா -ஜவகரா என்று கேள்வி எழுந்த போது ஜவகர் தான் என்று நின்றவர் காந்தி !
-----------------------------------------------------------------------------------------------------------------------
------------------
Wednesday, November 12, 2014
அபுல் கலாம் முகையுத்தீன் என்ற
ஆசாத் .......!!!
1962ம் அண்டு ஹைதிரபாத்திளிருந்து மாற்றல் பெற்று மதுரை வந்தேன் ! அது சமயம் குஜராத்தி நண்பர் "தோர்சி மேத்தா" என்ற நண்பர் India Wins Freedom என்ற நூலை நினைவுப்பரிசாக கொடுத்தார் !
ஆசாத் அவர்களின் சுய சரிதம் அது !
ஆசாத்அவர்கள்சொல்லச்சொல்ல அவர்களின் சீடர் பேராசிரியர் ஹுமாயூன் கபிர் அவ்ர்கள் எழுதியது !
இந்திய சுதந்திரபோராட்டத்தின் மிக வும்முக்கியமான கட்டத்தில் ஆசாத் அவ்ர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் ! அதிகார பரவல் பற்றியும்,நிர்வாகம் பற்றியும் மவுண்ட் பாட்டனுடன் பேசிமுடிவு செய்தவர் அவர் ! மிகவும் இக்கட்டான அந்த காலகட்டத்திலவ்ருடைய பணி மகத்தான ஒன்றாகும் !
சுதந்திர மடந்த இந்தியா ஒரு சோசலிச நாடாக இருக்கவேண்டும் என்று கனவுகண்டவர் அவர் ! லக்னௌ காங்கிரசில் இது பற்றி விவாதம் வந்த பொது ராஜேந்திர பிரசாத்,வல்லபாய் படேல்,ராஜகோபாலாச்சாரி ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்தனர் ! ஆசாத்,நேரு,சுபாஷ் ஆகியோர் இதனை ஆதரித்தனர் !
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பான் ரங்கூன் வழியாக இந்தியாவை நெருங்கிவிட்டது ! அஸ்ஸாமை பிடித்து கலகத்தாவையும் பிடித்துவிடும் அபாயம் ! பிரிட்டீஷ் அரசு மேற்கு வங்கத்தில் உள்ள தொழிற்சாலைகளை எதிர்கள் கையில் சிக்காமலிருக்க வெடிவைத்து தகர்க்க முடிவு செய்தது ! கம்யுனிஸ்டுகள் இதனை எதிர்த்தனர் ! ஆலைகளையும் தொழிற் சாலைகளையும் பாது காக்க தோழர்களை நிறுத்தினார்கள் ! ஆஸாத் ,காங்கிரஸ் தொண்டர்களு ம் கம்யூணீஸ்டுகளொடு சேர்ந்து கொள்ளுமாறு உத்திரவிட்டார் ! காங்கிரசில் பலர் இதனை எதிர்த்தனர் ! நேருவும் ஆசாத் அவர்களும் காங்கிரஸ் காரியக்கமிட்டியிளிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தனர் ! பின்னர் சமரசம் நடந்தது !
இந்து--முஸ்லீம் ஒற்றுமைக்காக நின்றவர் அவர் ! அவருடைய சீடர் ஹுமாயூன் கபிர் ஒரு இந்து பெண்ணை காதலித்து மணந்தார்! அவரை ஆதரித்து நின்றவர் அசாத் !
காந்தி ,நேரு வரிசையில் வைத்துபோற்றப்பட வேண்டியவர் அவர் ! எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் பணியாற்றியவர் அவர் !
புனித தலமான மெக்காவில் பிறந்த அவருடைய குடும்பம் கலகத்தாவில் குடியேறியது ! அரபிய மொழியிலும்,உருது மொழியிலும் மிகச்சிறந்த ஆற்றல் மிக்க எழுத்தாளர் !
அபுல் கலாம் முகையுத்தீன் என்ற அவர் "ஆசாத் " என்ற புனை பெயரிலேயே எழுதினார் !
"ஆசாத் "என்றெ அழைக்கப்பட்டார் !
அன்றய தலைவர்கள் பற்றிய மிகவும் அந்தரங்கமான விஷயங்களையும் தன சுய சரிதையில் எழுதினார் ! அது பற்றிய மூன்று அத்தியாயங்களை 58ல் புத்தகம் வெளியிடும் பொது அதை செர்க்கவேண்டாமென்று தவிர்த்து விட்டார் !
1985ம் ஆண்டுக்குப் பிறகு அதனை வெளியிடலாம் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டிருந்தார் !
வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த முன்று அத்தியாயங்களும் பின்னர் வெளியிடப்பட்டன !
ஆசாத் மிகவும் முற்போக்கான சிந்தனையாளர்
Monday, November 10, 2014
ஜோசப்ஃ ஸ்டாலின் -
என்ற கட்சி ஊழியன் .....!!!!
உலக சரித்திரத்தில் மிக முக்கியமாக பெயர் ஜோசப்ஃ ஸ்டாலின் என்பதாகும் ! அந்த மாமனிதனைப்பற்றி உள்ளதும் இல்லாததுமாக எழுதித்தள்ளி இ ருக்கிறார்கள் !
புரட்சினடந்த ஐந்தாவது வருடம் கட்சியின் செயலாராக வந்தவர் 1953ம் ஆண்டு மறையும் வரை புரட்சியையும்,சொவியத்தையும் காப்பற்றுவது தவுரவேறு சிந்தனை இல்லாமல் பணியாற்றினார் !
இளம் சோவியத் நாட்டை சீர்குலைக்க வெண்செனையை அனுப்பி ஏகாதிபத்தியம் குழப்பம் விளவித்தபோது அதனை அடக்கி காப்பாற்றினார் !
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் பாசிசத்தை அடக்க அதே ஏகாதிபத்தியத்தோடு ஒத்துழைக்க அவர் தயங்க வில்லை !
ஆனாலும் ஏகாதிபத்தியம் அவரை கொடுங்கோலன் என்று வர்ணிக்க தயங்கவில்லை !
"ச ர்வாதிகாரி ஸ்டாலின் "என்று வர்ணித்தன !
கிரெம்ளின் மாளிகை தான் அரசு அலுவலகம் செய்ல்படும் இடம் !
அவர் வாசித்ததோ அங்கிருந்து 15 மெயில் தள்ளி இருந்த தன வீட்டில் !ஒரு ஹால் ,இர்ண்டு படுக்கை அறை, ஒரு சமையலறை இவை தான்!அந்த வீடு! படிக்கை அறையில் எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் கிடையாது ! ஹாலில் ஆணியில் அவருடைய ராணுவ உடையும் தொப்பியும் மாட்டியிருக்கும் ! அவர் மூத்தமகன்"யுகோவ்"சமையல் அறையில் உள்ள சோபாவில் தான் படுப்பான் ! இரண்டாவது மகன் "வசலோவ்"ஒரு படுக்கை அறையில் படுப்பான் ! மற்றொரு அறையில் ஸ்டாலின் படுப்பார்!
சோவியத் நாட்டில் கட்சி ஊழியர்களுக்கு மாத"அலவன்ஸ் " தருவார்கள் ! எந்த பதவியில் இருந்தாலும் அதற்குள் தான் குடும்பம் நடத்த வேண்டும் !
அந்த"சர்வாதிகாரி"ஸ்டாலினுக்கு மாதம் 500 ரூபிள் தான் அலவன்ஸ் ஆக கட்சி கொடுக்கும் ! அதற்குள் தானே அவர் குடும்பம் நடத்த வேண்டும் !
ஜோசப்ஃ ஸ்டாலினாக இருந்தாலும் அவரும் கட்சி ஊழியன் தான் !
என்று வர்ணித்தன !
Saturday, November 08, 2014
செவ்விசையும் . இசை உலக போராளி
T. M .கிருஷ்ணாவும் ....!!!
கர்நாடக இசை வானில் இளம் நட்சத்திரங்கள் புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ! சமீப காலங்களில் பலருடைய கவனத்தை கவர்ந்தவர்களில் திரு T.M .கிருஷ்ணா முக்கியமானவர் !
நோபல் பரிசு பெற்ற அமார்த்திய சென் அவர்கள் , கோபாலகிருஷ்ண காந்தி அவ்ர்கள் தலைமையில் கிருணாவின் "தி சதெர்ன் மியூசிக் " என்ற புத்தகத்தை 2013ம் ஆண்டு வெளியிட்டார் ! அந்த புத்தகம் பற்றி ஆங்கில மொழி அலைவரிசை ஒன்றில் கிருஷ்ணாவின் காணொளி நேர்காணலை பார்க்க கிடைத்தது !
--------------------------------------------------------------------------------------------------------------------------
அது பற்றி எழுது முன் கிருஷ்ணாவை பற்றி சில வார்த்தைகள் !
கிருஷ்ணா வின் தந்தை தொழில் முதலாளி ! அவருடைய தாயார் சங்கிதம் பயின்றவர் ! சிறு வயதிலேயே தாயின் குருவிடம் இசை பயின்றார் ! ஜே.கிருஷ்ண் மூர்த்தியின் தத்துவ பள்ளியில்(ரிஷிவந்தியம்) பயின்றார் !விவேகானந்த கல்லூரியில் பட்டம் பெற்ற்வர் !
மறைந்த இந்திய நிதி அமைச்சர் TT கிருஷ்ணமாச்சாரி அவருடைய தாய்வழி பாட்டனார் !
--------------------------------------------------------------------------------------------------------------------------
"கர்நாடக இசை குறிப்பிட்ட சாதியினுடையதாக மாறிவிட்டது ! ஆம் ! நான் பிராமணர்களைத்தான் குறி ப்பிடுகிறேன் ! இசைக்கு அவ்ர்கள் ஆற்றிய பணியை நான் குறைத்து மதிப்பிடவில்லை !அவர்களில் இசைமேதைகள் பலர் தோன்றியுள்ளார்கள்! ஆனாலும் இசை ஏன் பரவலாகவில்லை ? "
"பள்ளிகளில் ஏன் இசை கற்றுக் கொடுக்கப்படுவதில்லை ! ஓவியத்திற்கு வகுப்பு இருக்கிறது ! இன்னுமெதற்கு குருகுல பயிற்சி ! மற்ற வகுப்பைச் சேர்ந்தவனும் கற்க வசதி ஏற்பட்டால் இசை தங்கள் கையைவிட்டு போய்விடுமென்பதாலா !"
"நாதஸ்வரமும்,தவிலும் இசையின் அற்புதமான வாத்தியங்கள் ! அதனை ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான் வாசிக்க வேண்டுமா ? திருவாவடு துறை ராஜரத்தினமும்,காருகுறிச்சி அருணாசலமும் மட்டும் தானா ! அதன் பிறகு ஏன் வரவில்லை ?"
"இதை விட படு பாதகமான நிகழ்ச்சி என்ன தெரியுமா ? மிகச்சிறந்த மிருதங்க வித்வான், வயலின் வித்வான் ஆகியொர் "குறிப்பிட்ட பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வாசிக்க மாட்டேன் "என்று அறிவித்தார்கள் ! அவர்கள் அறிவித்தபாடகர்களின் திறமைக் குறை விற்காக என்றால் கூட சரி என்று கொள்ளலாம் ! ஆனால் அவ்ர்கள் "பெண் " என்பதால் மறுத்தார்கள் !"
" இதை விட சோகம் என்ன வென்றால் மேடை ஏறும் ஒரு பாகவதர் கூட இதனை எதிர்க்கவில்லை ! பெண்பாடகர்களும் வாய் திறக்கவில்லை !"
"சங்கீத மும்மூர்த்திகள் கச்சேரி செய்து பிழைக்கவில்லை ! கச்சேரிக்காக விதி முறை எதையும் வைத்துவிட்டு போகவில்ல ! ஒரு வர்ணம் , ஒரு சிறு கீர்த்தனை, ஒரு பல்லவி, தானம், கனராகம், துக்கடா என்று எந்தபந்தாவும் இல்லை ! சில தலைகட்டுகள் வைத்தது தான் சட்டம் என்கிறார்கள் ! நான் ஒரு இசைக் கலைஞன் ! என் மனம் மகிழ பாடவிரும்புகிறேன் ! இதில் எதற்கு விதிமுறைகளோ ! மேடை பந்தாவோ !"
செவ்விசைத்துறையில் அசுத்தம் (dirt in music ) சேர்ந்து விட்டது அதனை களைய வேண்டிய தருணம் வந்து விட்டது !
போராளிகிருஷ்ணாவின் கைகளை பலப்படுத்துவோம் !!!!
Monday, November 03, 2014
வென்னீரும் -காபி வாசனையும் ...!!!
இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் மறைந்த தோழர் எம்.ஆர் .வெங்கடராமன் அவர்களின் சகோதரரின் மகன் !
இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் ! கட்சியின் மத்திய தலைமை அவ்ரை மாணவர் இயக்கத்தை கட்டி வளர்க்க தமிழகத்திற்கு அனுப்பியது!மதுரை மண்டையன் ஆசாரி சந்தில் கட்சி அலுவலகத்தில்தங்கி பணியாற்றி வந்தார் ! அங்கு இவரைப்ப்போன்ற இளைஞர்களை கட்டி மேய்க்க குருசாமி நாயனா இருந்தார் !
முழுநேர ஊழியர்களுக்கு கட்சி அலவன்சு கொடுக்கும் ! மாதம் 10 /-ரூ லிருந்து 15 /- ரூ கொடுப்பார்கள் ! அது கொடுப்பதற்குள்"தாவு"தீர்ந்துவிடும் ! 20தேதிக்குமெல்தான் அது பற்றியே பேசுவார்கள் !
எம்.பி எஸ் அவ்ர்களுக்கு அப்படி இல்லை ! அவர் மத்தியகமிட்டி ஊழியர் ! டெல்லியிலிருந்து மாதம் 20/- ரூ 8ம் தேதி மணியார்டர் வந்து விடும் ! அது பற்றி அவரே விவரிக்கிறார் :
" என் சேக்காளி தோழர்கள் அன்று காலையிலேயே குளித்து விடுவார்கள் ! கட்சி ஆபிசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்போம் ! இருப்பே கொள்ளாது ! வாசல எட்டி எட்டி பார்ப்போம் ! 12 மணிக்குபொஸ்ட்மான் வருவார் ! மணியார்டர் வந்து வாங்கியதும் நாங்கள் காணாமல் போய்விடுவோம் ! மண்டையன் ஆசார சந்திலிருந்து போனால் டவுன்ஹால் ரோடு ! அங்கு தேப்பக்குளத்தில் கம்பி வேலி போட்டிருப்பார்கள்அதையும்தாண்டிமேற்கேபோனால் சுல்தானியாஹோட்டல்! பிரியாணி ஒரு பிளேட் 12 அணா ! ஆளுக்கு அரைபிளேட்! சுக்கா வறுவல் 2 அணா ! சாப்பிட்டுவிட்டு சிகரெட்டு ! திருமலை நாயக்கர் பேரன்கள் மாதிரி கம்பீர நடைபோடுவோம் "
"இரவுகையேந்துபவன் ! ஒரு அணாவுக்கு இரண்டு இட்லி ! ஆளுக்கு எட்டு இட்லி விளாசுவோம் ! அன்று எல்லோருக்குமாக நாலு ரூ ஆகும் ! ஒரு நாலைந்து நாள் ஓடும் !"
"அப்புறம் !கிடைச்சா சாப்பாடு!
"இல்லைனா ?"
"பைத்தியமே ! அது தாண்ட கட்சி வாழ்க்கை ! "
( 80 களின் பிற்பகுதியில் கோவையில் த\.மு.எ.ச.இசை பயிற்சிமுகாம் நடத்தியது ! அதை நடத்தி தந்தவர் எம்.பி எஸ் ! அப்போது அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது )