skip to main |
skip to sidebar
ஜோசப்ஃ ஸ்டாலின் -
என்ற கட்சி ஊழியன் .....!!!!
உலக சரித்திரத்தில் மிக முக்கியமாக பெயர் ஜோசப்ஃ ஸ்டாலின் என்பதாகும் ! அந்த மாமனிதனைப்பற்றி உள்ளதும் இல்லாததுமாக எழுதித்தள்ளி இ ருக்கிறார்கள் !
புரட்சினடந்த ஐந்தாவது வருடம் கட்சியின் செயலாராக வந்தவர் 1953ம் ஆண்டு மறையும் வரை புரட்சியையும்,சொவியத்தையும் காப்பற்றுவது தவுரவேறு சிந்தனை இல்லாமல் பணியாற்றினார் !
இளம் சோவியத் நாட்டை சீர்குலைக்க வெண்செனையை அனுப்பி ஏகாதிபத்தியம் குழப்பம் விளவித்தபோது அதனை அடக்கி காப்பாற்றினார் !
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் பாசிசத்தை அடக்க அதே ஏகாதிபத்தியத்தோடு ஒத்துழைக்க அவர் தயங்க வில்லை !
ஆனாலும் ஏகாதிபத்தியம் அவரை கொடுங்கோலன் என்று வர்ணிக்க தயங்கவில்லை !
"ச ர்வாதிகாரி ஸ்டாலின் "என்று வர்ணித்தன !
கிரெம்ளின் மாளிகை தான் அரசு அலுவலகம் செய்ல்படும் இடம் !
அவர் வாசித்ததோ அங்கிருந்து 15 மெயில் தள்ளி இருந்த தன வீட்டில் !ஒரு ஹால் ,இர்ண்டு படுக்கை அறை, ஒரு சமையலறை இவை தான்!அந்த வீடு! படிக்கை அறையில் எந்தவிதமான சிறப்பு ஏற்பாடுகளும் கிடையாது ! ஹாலில் ஆணியில் அவருடைய ராணுவ உடையும் தொப்பியும் மாட்டியிருக்கும் ! அவர் மூத்தமகன்"யுகோவ்"சமையல் அறையில் உள்ள சோபாவில் தான் படுப்பான் ! இரண்டாவது மகன் "வசலோவ்"ஒரு படுக்கை அறையில் படுப்பான் ! மற்றொரு அறையில் ஸ்டாலின் படுப்பார்!
சோவியத் நாட்டில் கட்சி ஊழியர்களுக்கு மாத"அலவன்ஸ் " தருவார்கள் ! எந்த பதவியில் இருந்தாலும் அதற்குள் தான் குடும்பம் நடத்த வேண்டும் !
அந்த"சர்வாதிகாரி"ஸ்டாலினுக்கு மாதம் 500 ரூபிள் தான் அலவன்ஸ் ஆக கட்சி கொடுக்கும் ! அதற்குள் தானே அவர் குடும்பம் நடத்த வேண்டும் !
ஜோசப்ஃ ஸ்டாலினாக இருந்தாலும் அவரும் கட்சி ஊழியன் தான் !
என்று வர்ணித்தன !
2 comments:
ஜோசப் ஸ்டாலின் போன்ற தலைவர்களை இன்றைய காலத்தில் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை ஐயா.
குற்றவாளி என்று தீர்ப்பு வந்த பிறகும், தெய்வமாக கும்பிடும் கேடுகெட்ட சமுதாயத்தில், எம்.எல்.ஏ பதவிக்காக கிடைக்கும் 50000 ஊதியத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு, கட்சி தரும் சொற்ப சம்பாத்தியத்தில் வாழும் அரசியல்வாதிகளும் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் ஜெயக்குமார் அய்யா. அவர்களுக்கு நம் மக்கள் அளித்த பட்டம் பிழைக்கத் தெரியாதவர்கள்.
Post a Comment