skip to main |
skip to sidebar
"பறை" இசையும்,
மசாலா.எப்ஃஎம் அலை வரிசையும்..!!!
இருபத்து நான்கு மணிநேரமும் நிகழ்ச்சிகளை நடத்தும் அலைவரிசை மசாலா.எப்ஃ எம் ! வெளிநாட்டிலிருந்து ஒலி பரப்பப்படும் இந்த அலை இரவும் பகலும் கணினியில் பணிபுரிபவர்களுக்காக திரைப்பட மற்றும் இசை நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது ! மூளை அயர்ந்து விடாமல் இருக்க இசையை பயன்படுத்தும் நோக்கம் கொண்டது !
இந்த நிகழ்ச்சியில் இசைக்கருவிகளைப் பற்றி ஒலிபரப்பினார்கள் !
பறை, நாதஸ்வரம்,தவில்,வீணை ஆகியவை பற்றியும், அவற்றின் தோற்றம்,வளர்ச்சி இன்றைய நிலை ஆகியவை பற்றி விளக்கம் அளித்தார்கள்!
"குழுக்களாக இருந்த மனித சமூகம் தங்களுக்குள் ஒன்றுகூடி தகவல் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது ! ஒலிபெருக்கி, போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் மிகவும் அதிகமானவர்களை சென்றடைய ,அவர்களை அழைக்க ,ஒன்றுபடுத்த, ஒரு கருவியை உருவாக்கினார்கள் !"
"மரத்தாலான ஒரு வட்டில் உருவாக்கி அதனை மாட்டுத்தோலால் மூடி அதன்மீது குச்சியால்தட்டி ஒலி எழுப்பினர் "!காத்திரமானதும்,விசேஷமானதுமான இந்த ஒலி யின் தனித்தன்மை அவர்களுக்கு செய்தியின் அவசரத்தையும் உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது பற்றியும் அறிவுறுத்தியது!
"கால வர்த்தமானத்தில் அது தாளக்கருவியாகவும்,இசைக்கு ஏற்ப ஆட துணைகருவியாகவும் பயன்படலாயிற்று "
இதே போன்று தவில்,நாதஸ்வரம்,வீணை என்று பல்வேறு இசைக்கருவிகள் பற்றி விளக்கம் அளித்தார்கள் !
இந்த நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவர் இசைத்துறையில் பட்ட மேற்படிப்பு (M . A ) படித்தவர் !
இசை கலைஞர்களின் அறிவுசார் உரிமைகள் பற்றி ஆராய்ந்து M .Phil பட்டமும் பெற்றவர!
இதற்காக சட்டக்கல்லூரியில் சேர்ந்து பட்டமேற்படிப்பு (M .L ) பட்டம் பெற்றவர் !
ஹன்ஸா காஷ்யப் என்ற இவர் தற்போது திருச்சியில் வழக்குரைஞராக பணியாற்றுகிறார் !
(கொசுறு : எழுத்தாளர் காஸ்யபனின் செல்ல மகளுமாவார் !)
1 comments:
தங்களின் மகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா
Post a Comment