செவ்விசையும் . இசை உலக போராளி
T. M .கிருஷ்ணாவும் ....!!!
கர்நாடக இசை வானில் இளம் நட்சத்திரங்கள் புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ! சமீப காலங்களில் பலருடைய கவனத்தை கவர்ந்தவர்களில் திரு T.M .கிருஷ்ணா முக்கியமானவர் !
நோபல் பரிசு பெற்ற அமார்த்திய சென் அவர்கள் , கோபாலகிருஷ்ண காந்தி அவ்ர்கள் தலைமையில் கிருணாவின் "தி சதெர்ன் மியூசிக் " என்ற புத்தகத்தை 2013ம் ஆண்டு வெளியிட்டார் ! அந்த புத்தகம் பற்றி ஆங்கில மொழி அலைவரிசை ஒன்றில் கிருஷ்ணாவின் காணொளி நேர்காணலை பார்க்க கிடைத்தது !
--------------------------------------------------------------------------------------------------------------------------
அது பற்றி எழுது முன் கிருஷ்ணாவை பற்றி சில வார்த்தைகள் !
கிருஷ்ணா வின் தந்தை தொழில் முதலாளி ! அவருடைய தாயார் சங்கிதம் பயின்றவர் ! சிறு வயதிலேயே தாயின் குருவிடம் இசை பயின்றார் ! ஜே.கிருஷ்ண் மூர்த்தியின் தத்துவ பள்ளியில்(ரிஷிவந்தியம்) பயின்றார் !விவேகானந்த கல்லூரியில் பட்டம் பெற்ற்வர் !
மறைந்த இந்திய நிதி அமைச்சர் TT கிருஷ்ணமாச்சாரி அவருடைய தாய்வழி பாட்டனார் !
--------------------------------------------------------------------------------------------------------------------------
"கர்நாடக இசை குறிப்பிட்ட சாதியினுடையதாக மாறிவிட்டது ! ஆம் ! நான் பிராமணர்களைத்தான் குறி ப்பிடுகிறேன் ! இசைக்கு அவ்ர்கள் ஆற்றிய பணியை நான் குறைத்து மதிப்பிடவில்லை !அவர்களில் இசைமேதைகள் பலர் தோன்றியுள்ளார்கள்! ஆனாலும் இசை ஏன் பரவலாகவில்லை ? "
"பள்ளிகளில் ஏன் இசை கற்றுக் கொடுக்கப்படுவதில்லை ! ஓவியத்திற்கு வகுப்பு இருக்கிறது ! இன்னுமெதற்கு குருகுல பயிற்சி ! மற்ற வகுப்பைச் சேர்ந்தவனும் கற்க வசதி ஏற்பட்டால் இசை தங்கள் கையைவிட்டு போய்விடுமென்பதாலா !"
"நாதஸ்வரமும்,தவிலும் இசையின் அற்புதமான வாத்தியங்கள் ! அதனை ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான் வாசிக்க வேண்டுமா ? திருவாவடு துறை ராஜரத்தினமும்,காருகுறிச்சி அருணாசலமும் மட்டும் தானா ! அதன் பிறகு ஏன் வரவில்லை ?"
"இதை விட படு பாதகமான நிகழ்ச்சி என்ன தெரியுமா ? மிகச்சிறந்த மிருதங்க வித்வான், வயலின் வித்வான் ஆகியொர் "குறிப்பிட்ட பாடகர்களுக்கு பக்கவாத்தியமாக வாசிக்க மாட்டேன் "என்று அறிவித்தார்கள் ! அவர்கள் அறிவித்தபாடகர்களின் திறமைக் குறை விற்காக என்றால் கூட சரி என்று கொள்ளலாம் ! ஆனால் அவ்ர்கள் "பெண் " என்பதால் மறுத்தார்கள் !"
" இதை விட சோகம் என்ன வென்றால் மேடை ஏறும் ஒரு பாகவதர் கூட இதனை எதிர்க்கவில்லை ! பெண்பாடகர்களும் வாய் திறக்கவில்லை !"
"சங்கீத மும்மூர்த்திகள் கச்சேரி செய்து பிழைக்கவில்லை ! கச்சேரிக்காக விதி முறை எதையும் வைத்துவிட்டு போகவில்ல ! ஒரு வர்ணம் , ஒரு சிறு கீர்த்தனை, ஒரு பல்லவி, தானம், கனராகம், துக்கடா என்று எந்தபந்தாவும் இல்லை ! சில தலைகட்டுகள் வைத்தது தான் சட்டம் என்கிறார்கள் ! நான் ஒரு இசைக் கலைஞன் ! என் மனம் மகிழ பாடவிரும்புகிறேன் ! இதில் எதற்கு விதிமுறைகளோ ! மேடை பந்தாவோ !"
செவ்விசைத்துறையில் அசுத்தம் (dirt in music ) சேர்ந்து விட்டது அதனை களைய வேண்டிய தருணம் வந்து விட்டது !
போராளிகிருஷ்ணாவின் கைகளை பலப்படுத்துவோம் !!!!
6 comments:
ஆச்சரியமாய் இருக்கிறது. அவரும் பிராமணர் என்றல்லவா நினைத்திருந்தேன்.
ஆச்சர்யமான செய்தி ஐயா...
இங்கு ஒரு சிலவை ஒரு சில சாதிக்கென்றே அமைக்கப்பட்டு விட்டன....
இசைத்துறையிலும் துர்நாற்றமா
வேதனை ஐயா
திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாசரி (T.T KrishNamachari ,ex.finance minister) ஒரு பிராமணர் ! டீ.எம் கிருஷ்ணாவின் தாயரின் தாய் மாமன் ! அப்படியானால் கிருஷ்ணாவும் பிரமணர்தான் என்று கருதுகிறேன் சிவகுமரன் அவ்ர்களே ---காஸ்யபன்.
சங்கீத அசிங்கம் . கிருஷ்ணா அழகாக்கி விடுவார் நிச்சயமாக .
அப்படியெனில் கிருஷ்ணா இன்னொரு பாரதி.
Post a Comment