Wednesday, November 12, 2014

அபுல் கலாம் முகையுத்தீன் என்ற 

ஆசாத் .......!!!



1962ம் அண்டு ஹைதிரபாத்திளிருந்து மாற்றல் பெற்று மதுரை வந்தேன் ! அது சமயம் குஜராத்தி நண்பர் "தோர்சி மேத்தா" என்ற நண்பர் India Wins Freedom என்ற நூலை நினைவுப்பரிசாக கொடுத்தார் !

ஆசாத் அவர்களின் சுய சரிதம் அது !

ஆசாத்அவர்கள்சொல்லச்சொல்ல   அவர்களின் சீடர் பேராசிரியர் ஹுமாயூன் கபிர் அவ்ர்கள் எழுதியது ! 

இந்திய சுதந்திரபோராட்டத்தின் மிக வும்முக்கியமான கட்டத்தில் ஆசாத் அவ்ர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் ! அதிகார பரவல் பற்றியும்,நிர்வாகம் பற்றியும் மவுண்ட் பாட்டனுடன் பேசிமுடிவு செய்தவர் அவர் ! மிகவும் இக்கட்டான அந்த காலகட்டத்திலவ்ருடைய பணி மகத்தான ஒன்றாகும் ! 

சுதந்திர மடந்த இந்தியா ஒரு சோசலிச நாடாக இருக்கவேண்டும் என்று கனவுகண்டவர் அவர் ! லக்னௌ காங்கிரசில் இது பற்றி விவாதம் வந்த பொது ராஜேந்திர பிரசாத்,வல்லபாய் படேல்,ராஜகோபாலாச்சாரி ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்தனர் ! ஆசாத்,நேரு,சுபாஷ் ஆகியோர் இதனை ஆதரித்தனர் ! 

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஜப்பான் ரங்கூன் வழியாக இந்தியாவை நெருங்கிவிட்டது ! அஸ்ஸாமை பிடித்து கலகத்தாவையும் பிடித்துவிடும் அபாயம் ! பிரிட்டீஷ் அரசு மேற்கு வங்கத்தில் உள்ள தொழிற்சாலைகளை எதிர்கள் கையில் சிக்காமலிருக்க வெடிவைத்து தகர்க்க முடிவு செய்தது ! கம்யுனிஸ்டுகள் இதனை எதிர்த்தனர் !  ஆலைகளையும் தொழிற் சாலைகளையும் பாது காக்க தோழர்களை  நிறுத்தினார்கள் ! ஆஸாத் ,காங்கிரஸ் தொண்டர்களு ம் கம்யூணீஸ்டுகளொடு சேர்ந்து கொள்ளுமாறு உத்திரவிட்டார் ! காங்கிரசில் பலர் இதனை எதிர்த்தனர் ! நேருவும் ஆசாத்   அவர்களும் காங்கிரஸ் காரியக்கமிட்டியிளிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தனர் ! பின்னர் சமரசம் நடந்தது ! 

இந்து--முஸ்லீம் ஒற்றுமைக்காக நின்றவர் அவர் ! அவருடைய சீடர் ஹுமாயூன் கபிர் ஒரு இந்து பெண்ணை காதலித்து மணந்தார்! அவரை ஆதரித்து நின்றவர் அசாத் ! 

காந்தி ,நேரு வரிசையில் வைத்துபோற்றப்பட வேண்டியவர் அவர் ! எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் பணியாற்றியவர் அவர் !

புனித தலமான மெக்காவில் பிறந்த அவருடைய குடும்பம் கலகத்தாவில் குடியேறியது ! அரபிய மொழியிலும்,உருது மொழியிலும் மிகச்சிறந்த ஆற்றல் மிக்க எழுத்தாளர் !

அபுல் கலாம் முகையுத்தீன் என்ற அவர் "ஆசாத் " என்ற புனை பெயரிலேயே எழுதினார் ! 

"ஆசாத் "என்றெ அழைக்கப்பட்டார் !

அன்றய தலைவர்கள் பற்றிய மிகவும் அந்தரங்கமான விஷயங்களையும் தன சுய சரிதையில் எழுதினார் ! அது பற்றிய மூன்று  அத்தியாயங்களை 58ல் புத்தகம் வெளியிடும் பொது அதை செர்க்கவேண்டாமென்று தவிர்த்து விட்டார் !

1985ம் ஆண்டுக்குப் பிறகு அதனை வெளியிடலாம் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டிருந்தார் ! 

வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருந்த  முன்று அத்தியாயங்களும் பின்னர் வெளியிடப்பட்டன !









ஆசாத் மிகவும் முற்போக்கான சிந்தனையாளர் 

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் படிக்கின்றேன் ஐயா
நன்றி