skip to main |
skip to sidebar
இந்து மத சீர்திருத்த சட்டமும்
வலது சாரிகளின் சதியும் .......!!!
"சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக இன்றி அமையாதது சமூகபண்பாட்டுத்துறையிலும் மாற்றங்கள் வரவேண்டும் ! அப்போதுதான் ஒரு சமத்துவமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் " என்று அன்றய தலைவர்கள் கணித்தார்கள் !
முக்கியமாக இந்து மதத்தில்முக்கியமான சீர்திருத்தங்களை கொண்டுவர நேரு விரும்பினார் ! அவருக்கு ஆதரவாக அம்பேத்கர் இருந்தார் ! சட்டத்திருத்த மசோதாவை உரூவாக்க அம்பேத்கர் முற்பட்டர் !
இதில் மிக முக்கியமான அம்சங்களாக
1) கணவனை இழந்த பெண் ,மற்றும்பெண்வாரிசுகளுக்கு சொத்துரிமை !
2) மனைவியைத் துன்புறுத்தும் கணவனிடமிருந்து விவாக ரத்து பெரும் உரிமை !
3) மனைவி உயிரோடு இருக்கும் பொது கணவன் மறுமணம் செய்து கொள்வதை தடுப்பது !
4) சாதிவிட்டு சாதி திருமணம் செய்வதை சட்டபூர்வ மாக்குவது !
5) சாதிவிட்டு சாதி தத்து எடுத்துக் கொள்வதை சட்டபூர்வமாக்குவது !
இந்த ஐந்தும் முக்கியமானவைகளாகும் ! இதனை வலது சாரிகள் எதிர்த்தனர் ! அவ்ர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் பாபு ராஜேந்திர பிரசாத், ,வல்லபாய் படேல்,ஷ்யாமா பிரசாத்முகர்ஜி ஆகியொர் !
இந்தமசோதாவை நாடாளுமனறத்தில் நிறைவேற்றி சட்டமாக்க நேருவும்,அம்பேத்கரும் முனைப்பாக இருந்தனர் !
இதில் மிகவும் முக்கியமாக இருந்தது சவர்க்கர் இந்த சீர்திர்த்த மசோதாவை ஆதரித்து தான் !" இது காங்கிரஸ் காரர்களின் தேர்தல் பிரச்சாரமாக இருந்தால் என் ஆதரவு இல்லை ! ஆனால் நாட்டின் வளர்சிக்கு இது தேவை என்பதால் ஆதரிக்கிறேன் "என்று சவர்க்கர் அறிவித்தார் !
நாடாளுமன்றத்தில் நிறைவேறும் நிலை உண்டானது !
அப்போது ராஜேந்திர பிரசாத் பிரதமர் நேருவுக்கு மிகமிக ரகசியமாக ஒரு கடிதம் எழுதினார் ! அதில் "நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும் ஜனாதிபதி என்ற முறையில் நான் ஏற்க மறுக்கும் வாய்ப்பு உள்ளது "என்று குறிப்பிட்டிருந்தார் ! இந்த கடிதம் நேருவின் கைகளுக்கு போகும் முன்பே வலது சரிகள் பத்திரிகைகளுக்கு தெரிவித்து விட்டனர் !
ஒரு பக்கம் நடாளுமன்றம் ! மறுபக்கம் ஜனாதிபதி ! இரண்டும்முட்டி மோதுவது அன்றைய இளம் குடியரசுக்கு நல்லதா ! நேரு இதனை எதிர்பார்க்கவில்லை ! மேலும் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் ! இந்த சந்தர்பத்தில் இந்த பலப்பரிட்சை தேவையா என்று நேரு சிந்திக்க ஆரம்பித்தார் !
அம்பேத்கர் நொறுங்கிப் போனார் ! நேரு தன் உறுதி மொழியக் காப்பாற்றாமல் தன்னை கை கழுவி விட்டதாக மனதார நம்பினார் !
பின்னர் நடந்தெதெல்லாம் வரலாறாயிற்று !!!
2 comments:
அந்த வரலாறையும் சொல்லுங்கள் அய்யா
எத்துனை அருமையான திட்டங்கள்
ஆனாலும் நல்ல திட்டங்களுக்குத்தான் எத்துரை எதிர்ப்பு
Post a Comment