Friday, November 28, 2014

ஏழை மக்களின் 

ஈரலை வறுத்து .....!!!!


ரூ பாய்க்கு முனு படி அரிசின்னு சொல்லி ஆட்சிக்கு வந்தது தி.மு.க ! போடலன்னா முச்சந்தில வச்சு சவுக்கால அடின்னாறு அண்ணா அவர்கள் 

-போடலை !

தெருவிளக்குகம்பத்துல சாவுக்க கட்டிவைத்து "சவுக்கு இங்கே  ! மூணூபடி எங்கே ?" என்று கேட்டார்கள் காங்கிரசார் !

கிட்டத்தட்ட நாற்பத்தி எட்டு வருடம் ஆகிவிட்டது ! 

அரைப்படி (ஒரூ கிலோ ) புழுத்த அரிசி கடைல 30/- ரூ ! அதையே கொஞ்சம் தீட்டி பாலிஷ் பண்ணினான்னா 50/-ரூ !

"ஏல !ஏழை எளிய ஜனங்க என்னடா செய்வாங்க ? "

" அதுக்குதான் உணவு பாது காப்பு சட்டம் கொண்டாந்து இருக்கோம்"ஞான் ! 

"சர்க்கார் கிட்டங்கில அரிசியும் கோதுமையும் புளுத்துபோகுதே டேய் ?" நு  உச்ச நிதிமன்றம் சொல்லிச்சு  ! "அத ஜனங்களுக்கு கொடுக்கலாம்லா ?" நு நீதிமன்றம் கேட்டுது !" அது அரசாங்கத்தின் கொள்கை ! அதுல தலையிடாத " நு டாக்டர் மன மோகன சிங் சொல்லிட்டாரு ! இவருக்கு டாகடர் பட்டம் கொடுத்தவன செருப்பால அடிக்கணும்னு தோணுது ! முடியலயே !!

அதுக்குப்பதிலா ஒட்டால அடிச்சு கீழ இறக்கிபுட்டாங்க ! 

அடுத்து வந்தவன் "வஜ்ரா சும்பன் " ! உணவாவது பாதுகாப்பாவது " அதெல்லாம் அமெரிக்க ஒத்துக்காது ! பொது வினியோகம் லாம் கூடாதுன்னுட்டன் " !

"இந்தியா வளரணும் ! அத தடுக்குது இந்த மான்யம் ,சலுகை, எல்லாம்  தான் ! அத எடுத்துட்டா வளந்துருன் கான் " ஒரு மூதி ! இவன்தான் நிதி அமைச்சர் ! பொதுத்தேர்தல்ல தோத்த பய !

இப்பமே கண்ணா கட்டுதே ! 

இன்னும் கேளுங்கவே !

"சகதில இற்ங்கி விவசாயம் பண்ணுதான் ! அவனுக்கு உரம் கொடுக்கணும் ! உணவு கொடுக்கணும் ! எரிபொருள் வேணும் ! இதெல்லாம் அவன் வாங்கற விலைக்கு கொடுத்தாதான் அவன் பொளைக்க முடியும் !' அதுக்கு மான்னியம் கொடுத்தாங்க !

அதுல கையவக்கான் !

அவன் சொல்லுதான் "இந்த மானியம் மட்டும் 2லட்சத்து நாற்பயிரம் கோடி ! இந்திய ஏழை நாடு ! அப்பம் எப்படி வளரும் ? மானியத்தை கொஞ்சம் கொஞ்சமா எடுக்கணும் !'' நு சோலிய பாத்துட்டான் !

பத்து பேருக்கு நல்லது நடக்கும் நா அறைபட்டினி கிடப்பம் நு மக்கள் சரிங்காங்க !

"நாட்ட  வளக்க முதலாளிகள் கஷ்டப்படறாங்க ! தொழில் வளர்ந்தாதான் நாடு வளரும் ! அதுக்கு அவங்களுக்கு ஆதரவா இருக்கணும் ! நு நைசா பேசறான் !

"அநியாயத்துக்கு வரி போட்டிருக்கு ! அத எடுக்கணும் !இறக்கு மதிக்கு வரி! மறைமுக வரி ! எக்சைஸ் வரி,! தனி நபர் வரி,கம்பெனி லாபத்துக்கு வரி ! இப்படி  அவன போட்டு கசக்கினா !"

"பாவம் ! அத கொறைகப்போறென் !" ஞான் 

"அது எம்பிட்டு நு? " கேட்டா 

சொல்லுதான் "கொஞ்சம் தான் ஒரு ஆறுலட்சம் கோடிங்கான் "!!

விளங்காத பயலுக !!!





































1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் கோபம் புரிகிறது ஐயா