Wednesday, December 03, 2014

அந்த விளம்பரம் பற்றி ......!!!



அந்தப் பெண்ணுக்கு முப்பது வயது இருக்கலாம் ! புதுதாக திருமணம் ஆனவர் ! 

"நான்  நினைத்தபடி எனக்கு அமைந்தது ! இவ்வளவு சீக்கிரம் இது நடக்குமென்று நான் நினைக்கவில்லை  !"

சோபாவிலமர்ந்திருந்த அவள் கணவன் வெட்கம் கலந்த பெருமிதத்தோடு பார்த்தவிட்டு குனிந்துகொண்டான் !

"அழகா எனக்கு பிடித்தமாதிரி " அந்தப்பெண் தொடர்கிறாள் ! 

அவள் கணவன் அவளைப் பார்த்துவிட்டு தலையை குனிந்து  கொண்டு "இப்படி எல்லாம் பேசுகிறாளே ! வெட்கமில்லாமல் " என்று நினைத்துக் கொண்டு லேசாக தன தலையில் செல்லாமாக அடித்துக்கொள்கிறான் !

"அழகா, சின்னதா , குட்டியா " அவள் தொடருகிறாள் !

கணவன் அவளை  நிமிர்ந்து   பார்க்க  மேலும் என்ன சொல்லப்போகிறாள் என்பதை  கேட்க ஆசையோடு பார்க்கிறான் !

"இப்படி ஒரு ப்ஃளாட்  கிடைக்கும் என்று " அவள் தொடறுகிறாள் !

தன்  புது மனைவி தன்னை சொல்கிறாள் என்று நினைத்த கணவன் ஒரு சிறு புன்னகையோடு தன்  ஏமாற்றத்தை மறைத்துக்கொள்கிறான் !

"அருண் பில்டேர்ஸ் " விளமபர  படம் இது !

concept ,takings ,நடிப்பு எல்லாமே அருமை !

குறிப்பாக புது மணத்தம்பதியாக  Anchor "dd"  யும்  அவருடைய கணவர்  ஸ்ரீகாந்தும்  அருமையாக நடித்தனர்!

ஸ்ரீ காந்தின் நடிப்பு  சபாஷ் போட வைக்கிறது !

( சென்னையில் உள்ள பிரபலமான கல்லுரி ஒன்றில் பேராசிரியராக இருக்கிறாராமே anchor "dd" )  


 





2 comments:

திசைசொல் said...

உங்கள் நடை சபாஷ்

கரந்தை ஜெயக்குமார் said...

அவ்விளம்பரத்தினை நானும் பர்த்தேன் ஐயா
அருமை