Wednesday, April 29, 2015

"மாட்டுக்கறி திருவிழா"வும் 

சில தகவல்களும் .....!!!



மகராஷ்ட்ற மாநில அரசு மாட்டுக்கறியை தடைசெய்து சட்டம்போட்டது !  உண்மையில் இந்த சட்டத்தின் மூலம் பசுவதையை தடை செய்வது தான் அதன் நோக்கம் ! பல மாநிலங்களில் இப்படி ஒருசட்டம் பசுவதையை தடை செய்யும் சட்டம் இருக்கத்தான் செய்கிறது ! 


அரசுக்கு தெரியும். பசு வதையை தடை செய்ய முடியாது என்பது ! விவசாயி தன் வயிற்றுக்கே வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நீலையில் பசுவை பாதுகாக்க அவன் பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பது பச்சப்புள்ளைக்கு கூட தெரியும் ! வயதான தாய் தந்தைக்கு சோறு போட முடியாமல் வேறட்டிவிடும் காலத்தில்  பால் கறக்காத மாட்டை காப்பாற்ற அவன் ஒன்றும் கிருஷ்ண பரமாத்மா அல்ல ! 


பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் மாட்டிறைச்சி ஏற்றுமதி கூடியிருக்கிறது என்று ஒர் புள்ளீ விபரம் குறிப்பிடுகிறது ! 


அகில இந்திய மாட்டுக்கறி ஏற்றுமதிதியாளர் சங்கத்தின் தலைவர் ரஷித் கதமி என்பவர்" சென்ற ஆண்டை விட 14 சதம் ஏற்றுமதி கூடியிருக்கிறது" என்கிறார் ! மாட்டிறைச்சி எற்றூமதியில் முதலிடம் வகிப்பது பிரேசில் நாடாகும் ! அந்த நாட்டின் நாணயமதிப்புகாரணங்களால் இந்திய நாணயம் அமெரிக்க டாலருக்கு மதிப்பு குறைந்திருப்பதால் இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி கொடிகட்டி பறக்கிறது ! ஆனால் இப்படியே நீடிக்கும் என்று கூறமுடியாது" என்று அவர் குறீப்பிடுகிறார் !  


இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 6 இந்திய கம்பெனிகள் உள்ளன ! அவற்றில் நான்கு கம்பெனிகள் பா.ஜ.க ஆதரவாளர்களீடம் உள்ளன ! மாட்டிறைச்சி என்றாலும் அவை எருமைமாடா, காளை மாடா,பசுமாடா என்று  ஏற்றுமதியாளர்கள் பகுத்துப் பார்பதில்லை ! பா.ஜ.க அரசும் கண்டு கொள்வதில்லை ! 


இறைச்சி ஏற்றுமதியின் காரணமாக உள்னாட்டில் இறைச்சி விலைகடுமையாக உயர்ந்துள்ளது !

ஆட்டின் இறைச்சி   இன்று கிலோ 400 /- லிருந்து 450 /- ரு பாயாக இருக்கிறது !

மீன் கிலோ 700 /- ரூ எட்டியுள்ளது !

மாடிறைச்சி 250 /-ரூ லிருந்து 300/- ஆகியுள்ளது ! 


கிராமத்து விவசாயி காலை எட்டுமணீக்கு ரோட்டொரம் உள்ள டீ கடையில் மைதா மாவில் செய்த (பஞ்சம் போக்கீ) பணீயாரத்தை தீன்ரு விட்டுவயிறு நிறைய  தண்ணீர்குடித்து விட்டு வேலைக்கு போகீறான் !


புரோட்டின்,சத்துள்ள உணவு என்றேல்லாம்  அவனால் கனவு கான முடிவதில்லை ! வேலையும் இல்லமல் ,வருமானமும் இல்லாமல் அவன் பாடு சொல்லமுடிவதில்லை ! 

 

மாட்டிறைச்சி கூட இன்று வசதி உள்ளவர்களீன் உணவாக மாற்றப்பட்டு விட்டது ! 

அதை உண்ணூவதும் ,உண்ணமலிருப்பதும் தனிப்பட்டவர்களீன் உரிமை !  இதில் அரசு தலையிடுவது தனி மனித உரிமைமீறலாகும் !!!

  

0 comments: