Wednesday, August 26, 2015
Sunday, August 23, 2015
"ஏன் இப்படி ? "
கோபால் ராம் எங்கூட படிச்சவன். நெத்தில குங்கும பொட்டு வச்சிருப்பான். பேசும் போது கொஞ்சம் - கிறுக்கன் இல்ல சார் - அப்படி சில பெருக்கு தோணலாம் ! தோள்ல துண்டு பொட்டிருப்பான். மஞ்சகலர்ல இருக்கும் அதுலகருப்பு எழுத்துல "ராம் ! ராம் ! கிருஷ்ண ! கிருஷ்ண! " நு எழுதி இருக்கும் ! நல்லவன் சார் தப்பா நினைகாதீங்க !
" பெட்ற்றோல் விலை சகட்டு மேனிக்கு குறைச்சுட்டாங்க பாத்தியா ?" என்றான் என்னப் பார்த்து.
"ஆமம் ! டெ "
"என்ன ஓமாம் !டே"
"என்ன செய்யணும் க "
"அத appriciate பண்ண மாட்டீயளோ ?"
"ஏல ! நான் என்ன காரால வச்சு ஓட்டறேன் ? "
"ரயில்ல போரால்ல! " கொபால்ராம் இப்படித்தான் மாட்டிக்குவான் .
"பெற்றொல் வெலை ஏறினா ரயில் சார்ஜை ஏத்துவிய ! இப்பம் குறஞ்சு போச்சுல்ல ! சார்ஜை கொறக்க வேண்டியது தானே!" "
"ஆமம் ல ! ஏன் இப்படி "என்று ஆச்சரியபட்டான் கொபால் ராம் .
அவன் துண்டுல "ராம் ! ராம் ! "நு எழுதிய இடத்தை தடவிக்கிட்டிருந்தேன் .
"துண்ட விடு டெ" "
"அத தாண்டா நானும் சொல்றேன்" என்றேன்.
Monday, August 17, 2015
அட.... பாவிகளா !!!
இந்தியா சுதந்திரம் பெற்றாலும் அதற்குள் சில கண்ணி வெடிகள வைக்க ஏகாதி பத்தியம் திட்டமிட்டது .
வடக்கே காஷ்மீரம்,மேற்கே ஜுனாகத், கிழக்கே அசாம் மலைகாடுகள், மத்தியில் ஹைதிராபாத், தெற்கே கேரளம் என்று கண்ணி வைத்தார்கள். இடது சாரிகளும்,தேசபக்தர்களும் அதனை தடுத்தாட் கொண்டார்கள். இதில் அமெரிக்க,பிரிட்டிஷ், பிரெஞ்சு எகாதிபத்தியம் என்ற வித்தியாசமே இல்லை.
நிஜாம் ஆட்சிய எதிர்த்து விவாசாயிகளின் புரட்சியை கம்யுனிஸ்ட்கட்சி தலமை தாங்கி நடத்தியது. அன்று அவர்கள் செய்த தியாகத்தை ஹைதிராபாத்தில் உள்ள "சுந்தரய்ய விஞ்ஞான கெந்திர" காட்சியகத்தில் இன்றும் பார்க்கலாம்.
ஒரு பக்கம் நீஜாமின் கொடுங்கோலாட்சி. மறு பக்கம் பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் அடக்குமுறை ! இந்தியாவில் அவர்களின் ஆட்சியை எதிர்த்த சுதந்திர போராட்டம். இந்த சூழலை எதிர்கொண்டு வெற்றி பெற்று மூன்றுஆண்டுகள் ஹைதிராபாத் சம்ஸ்தானத்தை கம்யூனிஸ்டுகள் ஆண்டனர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது அந்த பொராளிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இந்தியாவோடு இணந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கனவு காண ஆரம்பித்தார்கள்.
நிஜாம் இந்தியாவோடு சேர மறுத்துவிட்டார். இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் கம்யுணிஸ்டுகளொடு கைகுலுக்க தயராக இல்லை. அன்றய நேரு அரசு ஹைதிராபத் நிஜாமை அடக்க ராணுவத்தை அனுப்பியது. கர்னல் சௌதிரி தலமையில் படைவந்தது. சர்வதேச சிக்கல் வரமலிருக்க இந்த ராணுவ நடவடிக்கையை " police action " என்று பொய் சொல்லி நடத்தினார்கள். போராளிகளுக்கு ஒருபுறம் நிஜாம்-மற்றொரு புறம் இந்திய ராணுவம் --நிஜம் சரணடந்தார்- விவசாயிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் சிதறினர்.
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றாலும் ஹைதிராபாத் 1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தெதிதான் இந்தியாவோடு இணந்தது.
செப்டம்பர் 17ம் தேதியை தெலுங்கானா ராஷ்ற்ற கட்சி முதலவர் சந்திர செகர ராவ் கொண்டாட மறுக்கிறார்.அவருக்கு முஸ்லீம்கள் வாக்கு முக்கியம்.
பா.ஜ.கா இதனைகொண்டாடியே தீர வேண்டும் என்று நிற்கிறது . முஸ்லீம்களை எதிர்க்க ஒரு வாய்ப்பு என்பதால் .
அந்த விவசாயிகளின் புரட்சியை இந்தபாவிகள் எவ்வளவு கேவலப்படுதமுடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தவே செய்வார்கள்..
என்ன செய்ய !!!
Sunday, August 16, 2015
அந்த மூன்று கம்யுனிஸ்டுகள் ஏற்றிய தேசீயக் கொடி.
இறக்கப்படுவதே இல்லை.........!!!
57ம் ஆண்டுகளி லிருந்து நான் ஹைதிராபாத் நகரத்தில் இருந்தேன். பிரும்மாண்டமான நாகார்ஜுன சாகர் அணை கட்ட ஆரம்பித்திருந்தார்கள். அடிக்கடி நண்ப ர்களௌ அங்கு செல்வேன். கிருஷனானதியின் நீர்வீழ்ச்சியில் குளித்திருக்கிறென். அணையின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்த குன்றும் அதில் இருந்த சிற்பங்களும் நாகர்ஜுன பல் கலை கழகத்தின்பெருமைகளை பறை சாற்றிக்கொண்டிருந்தன. .
அந்த காட்டுப்பகுதியிலுள்ள "லமபாடி"மக்களோடு நனபர்களின் உதவியோடு பேசி மகிழ்ந்திருக்கிறேன்.தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப்புரட்சியில்பங்கு கொண்ட முதியவர்களையும் சந்தித்திருக்கிறேன். அந்த வீரர்களூக்கு பிரிட்டிஷ் இந்தியாவின் ஆந்திர,தமிழகப்பகுதிகளிலிருந்து ஆயுதங்களையும் ,உணவுப்பெருட்களையும் காடுவழியில்கொண்டுசெல்ல இந்த லமபாடி வனகுடி மக்கள் செய்த சாகசங்கள் இதிகாசதன்மை வாய்தவை .
( "கிருஷ்ணா நதிக்கரையிலிருந்து "என்ற என் நாவலில் இதனை விவரமாக எழிதி இருக்கிறேன் )