Wednesday, August 26, 2015

(இது ஒரு மீள்  பதிவு )




உலகம் அறியாத ஒன்று ....... !!!




உலகம் அறியாத ஒன்று நடந்தது ! 59 வருடங்களுக்கு முன் இந்தியாவில், உலகத்தில் எவருமே அறியாமல் எட்டுபேர் கொண்ட குழு மட்டுமே அறிந்த ஒன்று நடந்தது !

ஆம் ! இந்திய அரசாங்கத்தின் முடிவு ஆயுள்இன்சுரன்சதேசஉடமையாக்கும   முடிவு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது!

இதனை நடைமுறைப்படுத்த தேவையான அவசர சட்டம் மிக மிக ரகசியமாக தயாரிக்கப்பட்டது!

திறமையாக , எந்த சிக்கலும் ஏற்படாததாக, பார்த்துப்பார்த்து கவனமாக அமல் படுத்த திட்டம் தீட்டப்பட்டது !

அன்று இதனைச் சாதித்த நிதி அமைச்சர் சி.டி .தேஷ்முக் அவர்கள் தன்னுடைய வரலாற்று நுலில் இதனை  குறிப்பிடுகிறார்!


"நான் எச்.எம் படேலை வர்த்தக அமைச்சர் டி டி கிருஷ்ணமாசாரியாரை சந்திக்க அனுப்பினேன் ! அவருடைய சம்மதத்தை பெற -பிரதமரின் ஆமோதிப்பை பெற-அகில இந்திய ரேடியோவின் டைரக்டர் ஜெனரல் முலமாக இன்று இரவு நிதியமைச்சர் நாட்டுமக்களுக்குஒரு அறிவிப்பு செய்யவிருக்கிறார் என்று செய்தி சொல்ல ! என்ன சொல்லவிருக்கிறேன் என்பதை டைரக்டர் ஜெனரலுக்கும் சொல்லவேண்டாமென்று கூறிவிட்டேன் !"


அன்று இரவு ஒரு அவசர சட்டம் தயாராக இருந்தது ! அன்று இரவு அது கையெழுத்தாயிற்று !  மறுநாள் காலை 9 மணிக்கு இதற்காக போறுக்கி  எடுக்கப்பட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இன்சுரன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள் ! அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த  அதிகார உத்திரவை காட்டி அலுவலகத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள் !ஆயு்ள்  இன்சுரன்சு தேச உடமையாக்கப்பட்டது !இது இந்திய அரசாங்கத்தால் மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ,இனி எப்போதும்   நடத்த முடியாத சம்பவமாகும் !"




ஏன் இவ்வளவு ரகசியம் ? !


முன்னமெயே தெரிந்திருந்தால் கோடிகணக்கான கம்பெனி பணத்தை முதலாளிமார்கள் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்குமாற்றிவிடுவார்கள் என்ற பயம் தான் காரணம் !

எச்.எம் படேல்,பி.கே.கவுல்,எ,ராஜ கோபாலன் ஆகியமுவரும்தான் தளபதியாகச் செயல்பட்டார்கள்.! அவர்களுக்கு உதவியாக வையாபுரி,எம்.ஜ.ராவ் ஆகியோர் இருந்தனர் ! இந்த நடவடிக்கையை அமைச்சரவைஇன் ஆமொதிப்புக்காக வைக்கவில்லை ! பிரதமரிடம் மட்டும் சொல்லிவிட்டு -அதுவும் தேதி குறிப்பிடாமல் சொல்லிவிட்டு செய்தார்கள் !

பல்வேறு துறையைச் சேர்ந்த 47 அதிகாரிகாளை முக்கிய நகரங்களுக்கு 17ம்தெதியெஅனுப்பினார்கள்  ! அவர்களுக்கு ஏன் செல்கிறோம், என்பதைச் சொல்லவில்லை ! அவர்களிடம் சீல் வைக்கப்பட்ட கவர்கள் கொடுக்கப்பட்டன ! அதில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது !  

இந்த அதிகாரிகளுக்கன பயண ச்செலவுக்கான பணத்தை அரசு கஜானாவிலிருந்து எடுக்கவில்லை ! முத்த அதிகாரிகள் தங்கள் சொந்த வங்கிக்கணக்கிலிருந்து கொடுத்தார்கள் !  ரகசியம் அந்த அளவு காக்கப்பட்டது !

19-1-56 அன்று இரவு 8.30 க்கு  நிதி அமைச்சர் வானொலி முலம் இன்சுரன்சு நிர்வாகம் அரசு வசம் வருவதற்கான அவசரச் சட்டம்பற்றி  அறிவித்தார் !

கம்பெனி முதலாளிகள் அவசர சட்டம் பற்றிய விதிகளை அறிய தொலைபேசியில் காத்துக் கிடந்தனர் ! மறுநாள்  20-1-1956  அன்று விடிந்ததும் அந்தந்த அலுவலக வாயிலில் ஏற்கனவே நியமிக்கப்பட்டஅதிகாரிகள் கதவு திறக்க காத்திருந்தனர் ! 

கம்பெனியின் கணக்குப் புத்தகங்களில் கோட்டைப் போட்டு கையெழுத்திட்டனர் ! வழக்கம் போல வர்த்தகம் எந்த பாதிப்புமில்லாமல் தொடர்ந்தது ! 

இப்படி ஒரு நடவடிக்கைக்காக 1951ம் ஆண்டிலிருந்து போராடியது    அகில இந்திய இன்ரன்சு ழியர் சங்கம் .

"long live A I I E A !!!


1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இதுபோல் இன்று நடக்குமா?