Monday, August 17, 2015

அட.... பாவிகளா !!!

இந்தியா சுதந்திரம் பெற்றாலும் அதற்குள் சில கண்ணி வெடிகள  வைக்க ஏகாதி பத்தியம் திட்டமிட்டது .

வடக்கே காஷ்மீரம்,மேற்கே ஜுனாகத், கிழக்கே அசாம் மலைகாடுகள், மத்தியில் ஹைதிராபாத், தெற்கே கேரளம் என்று கண்ணி வைத்தார்கள். இடது சாரிகளும்,தேசபக்தர்களும் அதனை தடுத்தாட் கொண்டார்கள். இதில் அமெரிக்க,பிரிட்டிஷ், பிரெஞ்சு எகாதிபத்தியம் என்ற வித்தியாசமே  இல்லை. 

நிஜாம் ஆட்சிய எதிர்த்து விவாசாயிகளின் புரட்சியை கம்யுனிஸ்ட்கட்சி தலமை தாங்கி நடத்தியது. அன்று அவர்கள் செய்த தியாகத்தை ஹைதிராபாத்தில் உள்ள "சுந்தரய்ய விஞ்ஞான கெந்திர" காட்சியகத்தில் இன்றும் பார்க்கலாம்.

ஒரு பக்கம் நீஜாமின் கொடுங்கோலாட்சி. மறு பக்கம் பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் அடக்குமுறை ! இந்தியாவில் அவர்களின் ஆட்சியை எதிர்த்த சுதந்திர போராட்டம். இந்த சூழலை எதிர்கொண்டு வெற்றி பெற்று மூன்றுஆண்டுகள் ஹைதிராபாத் சம்ஸ்தானத்தை கம்யூனிஸ்டுகள் ஆண்டனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது அந்த பொராளிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. இந்தியாவோடு இணந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கனவு காண  ஆரம்பித்தார்கள்.

நிஜாம் இந்தியாவோடு சேர மறுத்துவிட்டார். இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள்  கம்யுணிஸ்டுகளொடு கைகுலுக்க தயராக இல்லை. அன்றய நேரு அரசு ஹைதிராபத் நிஜாமை அடக்க ராணுவத்தை அனுப்பியது. கர்னல் சௌதிரி தலமையில் படைவந்தது. சர்வதேச சிக்கல் வரமலிருக்க இந்த ராணுவ நடவடிக்கையை " police action "  என்று பொய் சொல்லி நடத்தினார்கள். போராளிகளுக்கு ஒருபுறம் நிஜாம்-மற்றொரு புறம் இந்திய ராணுவம் --நிஜம் சரணடந்தார்-  விவசாயிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் சிதறினர். 

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றாலும் ஹைதிராபாத் 1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தெதிதான் இந்தியாவோடு இணந்தது.

செப்டம்பர் 17ம் தேதியை தெலுங்கானா ராஷ்ற்ற கட்சி முதலவர் சந்திர செகர ராவ் கொண்டாட மறுக்கிறார்.அவருக்கு முஸ்லீம்கள் வாக்கு முக்கியம்.

பா.ஜ.கா இதனைகொண்டாடியே தீர வேண்டும் என்று நிற்கிறது . முஸ்லீம்களை எதிர்க்க ஒரு வாய்ப்பு என்பதால் .

அந்த விவசாயிகளின் புரட்சியை இந்தபாவிகள் எவ்வளவு கேவலப்படுதமுடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தவே செய்வார்கள்..

என்ன செய்ய !!!

  

0 comments: