Sunday, August 23, 2015

"ஏன் இப்படி ?  "  



கோபால் ராம் எங்கூட படிச்சவன். நெத்தில குங்கும பொட்டு வச்சிருப்பான். பேசும் போது கொஞ்சம் - கிறுக்கன் இல்ல சார் - அப்படி சில பெருக்கு தோணலாம் ! தோள்ல துண்டு பொட்டிருப்பான். மஞ்சகலர்ல இருக்கும் அதுலகருப்பு எழுத்துல "ராம் ! ராம் ! கிருஷ்ண ! கிருஷ்ண! " நு எழுதி இருக்கும் ! நல்லவன் சார் தப்பா  நினைகாதீங்க !


" பெட்ற்றோல் விலை சகட்டு மேனிக்கு குறைச்சுட்டாங்க பாத்தியா ?" என்றான் என்னப் பார்த்து.

"ஆமம் ! டெ " 

"என்ன ஓமாம் !டே" 

"என்ன செய்யணும் க " 

"அத appriciate பண்ண மாட்டீயளோ ?"

"ஏல ! நான் என்ன காரால வச்சு ஓட்டறேன் ? "

"ரயில்ல போரால்ல! "  கொபால்ராம் இப்படித்தான் மாட்டிக்குவான் .

"பெற்றொல் வெலை ஏறினா ரயில் சார்ஜை ஏத்துவிய ! இப்பம் குறஞ்சு போச்சுல்ல ! சார்ஜை கொறக்க வேண்டியது தானே!" "

"ஆமம் ல ! ஏன் இப்படி "என்று ஆச்சரியபட்டான் கொபால் ராம் . 

அவன் துண்டுல "ராம் ! ராம் ! "நு  எழுதிய இடத்தை தடவிக்கிட்டிருந்தேன் .

"துண்ட விடு டெ" "

"அத தாண்டா நானும் சொல்றேன்" என்றேன்.






















0 comments: