புத்தக விமரிசனம்
"சாதி ,வர்க்கம், மரபணு"
ஆசிரியர்:ப.கு.ராஜன்.
வெளியீடு:பாரதி புத்தகாலயம்,
7,இள்ங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை-
600018 .
விலை : ரூ 40/-
இரண்டு பகுதியாக எழுதப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியர் ப.கு.ராஜன் அவர்கள் மார்க்சீய அறிஞர்.
மார்க்சிய இலக்கியத்தின் மூல நூல்களை பயின்று மற்றவர்களுக்குக்ற்றுக்கொடுக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றவர் !
மரபணு ஆய்வாளர் டாக்டர் பாம்ஸாத் அவர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தை பாருங்கள் :
" மரபணு நிபுணன் அல்ல நான் .உயிரியல் வல்லுனனும் அல்ல.தொழில் ரீதியாக மின்சாரப் பொறியாளன் .தமிழ் நாடு அறிவியல் இயக்கம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர் சங்கம் ஆகிய சில அரசு சாரா முற்போக்கு இயக்கங்களொடுஇணைந்து பணியாற்றி கொண்டிருக்கும் ஒர் ஆர்வலன் மட்டுமே " என்கிறார் ! இது அவருடையா அடக்கமல்ல! பலம்.!
அவருடைய புரிதல்களை குறிப்பிடுகிறார்.
1.இந்தியாவிற்குள் மூன்று அலைகளீல் குடியேற்றம் ஆகியுள்ளது .60000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்,6000 ஆண்டுகளுக்குமுன்னால்,3500 ஆண்டுகளூக்கு முன்னால்.
2. பின் இரண்டுகுடியேற்றங்களும் மேற்கு யூரேசியா,மத்திய ஆசியா ஆகிய இடங்களிலிருந்து வந்தவை.பெரும்பாலும் ஆண்களடங்கிய கூட்டம்.
3 தாயின் கொடிவழி,தந்தையின் கொடிவழி மரபணு கட்டுமானத்தில் வித்தியாசம் உள்ளது
.4.இந்தோ ஐரோப்பிய மரபணு குறிப்பான்கள் உயர்சாதியினர்மத்தியில் அதிகமாகவும்,அடிமட்ட சாதியினர் மத்தியில் மிககுறைவாகவும் காணப்படுகின்றன.!
5.அடிமட்ட சாதிமக்களூக்கும் பழங்குடி மக்களுக்கும் மரபணுரீதியாக நெருக்கம் அதிகம் உள்ளது.
அது மட்டுமல்ல .
என்னுடைய இந்த புரிதல் சரியா என்றும் டாக்டர் பாம்ஸாத் அவர்களீடம் கேட்கிறார் .
இந்தநூலில் மரபணு பற்றிய கட்டுரை பகுதி மிகவும் நேர்த்தியாக வந்திருப்பதாகவே நான் கருதுகிறென்.
சாதி ,வர்க்கம் பற்றிய இரண்டாவ்து பகுதி சரளமாக உள்ளதால் பலர் அதன பாராட்டவே செய்வார்கள்.
" வர்க்க ரீதியாக சுரண்டப்படும் வர்க்கமாகவும்,சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவுமிருக்கும் பெரும்பானமை மக்களை இடது சாரிகளால் வென்றெடுக்க முடியவில்லை"
"சாதீய ஒடுக்குமுறைக்கு சோசலிசமில்லாமல் முழுமையான தீர்வு இல்லை என்பது உண்மைதான்"
"இந்திய குணாம்சங்களுடன் கூடிய சோசலிசம் தான் இதற்கு முடிவு கட்ட முடியும்"
இவற்றை சாதிப்பதற்கு நாமென்ன செய்யவேண்டும் என்பதையும் ஆசிரியர் குறிப்பிடத்தான் செய்கிறார்.
அவை இன்னும்முழுமையாக விவாதிக்கப்படவேண்டும் .
அத்தகைய விவாதத்தை முன்னுக்கு கொண்டு வந்ததில் ப.கு ராஜனும் அவருடைய இந்த நூலும் தனிது நிற்கின்றன .
வாழ்த்துக்கள்
1 comments:
நன்றி ஐயா
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
Post a Comment