Sunday, August 09, 2015

(சிறு கதை)

"எங்கே அவர்கள் ?"

"பாபா ! டாகூர் தாத்தா ஒக்கந்துகிட்டு இருக்கார் " என்றான் கொள்ளுப்பேரன் "பிக்லி"

பந்து ச ர்க்கார் எட்டிப்பார்த்தார்.படுக்கையின் மேல் நிர்மல் சர்க்கார் அமர்ந்திருந்தார். பந்து மெதுவாக அவர் அறைக்குள் சென்றார். நிமிர்ந்து பார்த்த பெரியவர் " என்னப்பா? ஏதாவது சொல்லணுமா... ?

"ஆமாம் ...தாதா..." 

"என்ன?'

"பதட்டப்படாதீங்க..." 

"பளீசின்னு சொல்லேன் ...?

"ப்ரசாந்த் சூர் காலமாயிட்டார்..." 

"ஆங் " திறந்த வாய்மூடவில்லை. கண்கள் கலங்க குபுக் என்று கண்ணீர் பெருக்கெடுத்தது.அருகில் இருந்த திவானில் அமர்ந்திருந்த மகருன்னிசாவை பார்த்தார்.

அப்பாவிடம் அவ்சரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று பந்து கவலைப்பட்டார். பந்துவிற்கு வயது அறுபத்து ஓன்று . அப்ப நிர்மல்சர்க்காருக்கு எண்பத்தி ஒன்று.அம்மா  மெகருன்னிசாவிற்கு எண்பத்தி ஐந்து.எத்தனை வருடம்?...எத்தனை வருடம் ..?பிரசாந்த் தானே அப்பொது நிர்மலையும் அவர் குடும்பத்தய்யும் பாதுகாத்தான். ...அவன் ..அவன் .போய்விட்டானா...? நிர்மலின் நினைவலைகள் புரண்டு எழுந்தன .

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த் வெள்ளிக்கொழமை....ஆகஸ்டு 15. ...மேருமலை முகடுகளீருந்து குமரிமுனை வரை...அஸ்ஸாம்காடுகளிலிருந்து தார் பாலைவனம் வரை.....எவரும் முந்தய இர்வு தூங்கவில்லை .டெல்லி நவ இந்தியாவை வரவேற்க தயாராகி உள்ளது.மவுண்ட் பாட்டன் பிரபு,பண்டித  நேரு,அபுல்கலாம் ஆசாத்,சர்தார் வல்லபாய் படேல் ....எல்லோரும்...எல்லொரும்...

மவுண்ட் பெட்டன் " நாம் ஒருவரலாற்று நிகழ்ச்சிக்காக கூடி இருக்கிறோம். ஆனால் ஆதிகர்த்தாவான அந்த மனிதரை...மகாத்மா காந்தியை இங்கே பார்க்க முடியவில்லைஆனாலும் நமது கண்களும் நீனைவுகளும் அவரையே விரும்புகின்றன ." என்றார்.

கல்கத்தா நகரத்து பாழடைந்த ஹைதாரி மான்ஷன் என்ற  குப்பை மேட்டில் கொடூர கலவர பூமியில்  அண்ணல் காந்தியடிகள் தன்னுடைய தக்ளியில்  நூல்நூற்று க்கொண்டிருந்தார்.

நவகாளீயில் இந்துக்கல் கொண்று குவிக்கப்படுகிறார்கள்.அகதிகளாக அவ்ர்கள்குற்றுயுரும்குலை உயிருமக அவர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.அண்ணல் அங்கு செல்ல டெல்லியிலிருந்து கல்கத்தா  புறப்பட்டார்

ஆனல் கிழ்க்கிலிருந்து வரும் அகதிகள் ..அவர்கள்  சொன்ன செய்திகள் மக்களை  வெறிபிடித்து அலற செய்தது.முஸ்லீம்கள் வசிக்கும்,பைக்பரா,சித்போர், பெல்காசியா,மாணிக்டோலா,நர்கல்டங்கல்,பெலியகட்டா,எந்தாலி,தான்ரா, ராஜாபஜார்,ஆகிய பகுதிகலில் கலவரம் மூண்டது.கலகத்தாவின் முன்னாள் மேயரும்,முஸ்லீம்ளீக்தலவருமான முகம்மது உஸ்மான்,வங்காளமாகாண பிரதமர் சுரவர்த்தி,ஆகியொர் காந்தி அடிகளை சந்தித்து நவகாளி பயணத்தை தள்ளி  வைத்து,கலக்த்தா நகரத்தை காக்க வேண்டினர் .

காந்தி பெலியகட்ட சென்றார். "காந்தி உன் அஹிம்சை எங்களுக்கு வேண்டாம். இந்த நகரத்தில் ஒருமுஸ்லீம்கூட இருக்க விட மாட்டோம்."என்று கோஷம் போடும்மக்களி \டையே நடந்தார்.

"எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் ராணூவ பாதுகாப்பு வேண்டாம்என் சக  இந்தியர்கள்...இந்துமுஸ்லீம் சகோதரர்கள்...என்னைகாக்கட்டும்...அல்லதுகொல்லட்டும்..."என்று நடந்தார். 

குப்பயும் கூளமுமாக இருந்த ஹைதாரி மான்ஷன் முன்வாயிலை சுத்தப்படுத்த ஆரம்பித்தார். 

கலவரக்காரர்கள் மின்சாரம் பாய்ந்தவர்கள்  போல் அதிர்ந்து நின்றார்கள்.மாலை நான்கு மணீக்கு அடிகளின் பிரர்தானை க் கூட்டம் நடந்தது  முப்பதாயிரம் பேர் திரண்டிருந்தனர் இந்துக்களும் முஸ்லீகளுமாக.......

பந்து   சர்க்கார் தொழிற் சங்க அலுவலகத்திலிருந்து வரும் போது முக மலர்ந்திருந்தது .பெலியகட்ட,பெல்காசியா பகுதிகலமைதி காத்தன..

"இந்து சகோதரனே முகாமில் தங்கி இருக்கும் முஸ்லீம்களை நீ போய் அழைத்து வா" என்றார் காந்தி அடிகள்.முஸ்லீம்கள் மீண்டும்தங்கள் வீடு திரும்பினர்.

ஆனாலும்முழுமைடாக பிரச்சினைமுடியவில்லை  கணவனை இழந்த ,வண்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள், அனாதையாக்கப்பட்ட குழந்தைகள்சிறுவர்கள்இவர்களின்மறுவாழ்வு....அதுமட்டுமல்ல...கிழக்கிலிருந்து வந்தவர்கள் புனர்வாழ்வு...?

"நவ இந்தியாவின் நவயுக இளைஞன் என்னை கைவிட மாட்டான்.இளம் விதவைகள்,பலாத்காரம்செய்யப்பட்டோர்,....இந்து என்ன ..முஸ்ளிமென்ன ....அவர்களை மணந்து  மறுவாழ்வுகொடுங்கள்" என்றார் காந்தி அடிகள்.

பந்து சர்க்காருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ...அவருக்கு நான்கு குழ்ந்தைகள். தொழிற் சங்கத்தில் இது  பற்றி  விவாதித்துமுடிவு எடுத்துள்ளார்கள். குடும்பத்தில் திருமணவயதில் இளைஞன் இருந்தால் அவர்களின் பரிபூரண சம்மதத்தோடுஇத்தகைய திருமனத்தை நடத்த முன் வரவேண்டும்.\என்பதுதான் முடிவு.

பந்து ஸ்ர்காருக்கு முதல்  மூண்றும் பெண்கள்....கடைசி தான்  நிர்மல்சர்க்கார் பத்தோன்பது வயது. .. இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருகிறான்.

மாணவர்கள் ,இளைஞர்கள் மத்தியில் காரசாரமான் விவாதங்கள்..சமரசங்கள் ...இந்துக்கள் இந்துப்பெண்களைமணக்கலாம்...முஸ்லீம்கள்முஸ்லீம்பெண்களைமணக்கலாம்.கருத்தரங்கம்...கூட்டங்கள்...சமூக அக்கரை கொண்டவர்களின் முன் முயற்சி....

பிரச்சந்த சூர்தான் முதலில் பந்து சர்காரிடம் பேசினான். அவன் இந்துஸ்தான்கொவாபரேடிவ் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.அனாதையாக்கப்பட்ட முண்று  பெண்குழ்ந்தகளை  எடுத்து வளர்க்கிறான்... 

"நீ செய்வது சரியா? " என்று  பந்து சர்க்கார் பிரசாந்த்திடம் கேட்டார்.

"சரி தவறு என்பது மன நிலையைப் பொறுத்தது காகா"

" இருந்தாலும்..... உன் மனைவியை கலந்து கொண்டாயா? "

" கலந்து கொண்டேன்."

"என்ன சொன்னாள் ?"

"சம்மதம்" என்றாள்.

"இப்பொது அப்படித்தான் சொல்வாள் " 

"......... ......பேச்சு மாறமாட்டாள் " 

"நாளைக்கு குழந்தை பிறந்தால்"

"பிறக்காது " 

பந்து சர்க்கார் ஆச்சரியத்தோடு பார்த்தார்.

"ஜெயபிரகாஷ் நாரயணன் பெற்றுகொள்ளவில்லயே"

பந்து சர்க்காரின் நெஞ்சக்குழியில் பந்து போல உணர்ச்சி கொப்பளித்தது .அவனை கட்டி த்தழுவிக்கொண்டார். "நவ இந்தியா...நவ  இந்தியா" என்று  அவர் வாய் முணுமுனுத்தது.

நிர்மல் கல்லூரியிலிருந்து வந்ததும்,பந்து சர்க்கார் தான் பேச்செடுத்தார்.பிரசாந்த் சூரும் இருந்தான்.

"நிர்மல்  "

"என்ன தாதா? "

"நண்பர்களொடு கலந்து கொண்டாயா?"

"ஆமாம்.."

மெகருன்னிசாவிற் குவயதுஇருபத்திநான்குகலவரத்தின்போதுஅவளை நான்கு  பேர் சின்னபின்னப்படுத்தி விட்டனர். மூன்று மாதமாக அவள் முகாமில் இருந்தாள்.அவள் உறவினர்கள் யாரும் வரவில்லை. மருத்துவ பரிசோதனையில் அவள் கர்ப்பம் என்று தெரியவந்தது. பிற க்கப்போகும் குழந்தைக்கு தகப்பன் யார் என்று தெரியாது "

"நான் தகப்பனாக  இருக்கிறேன்" என்றான் நிர்மல் சர்க்கார்.

மெகருன்னிசாவிர்கு ஆண்  குழந்த பிறந்தது அப்பவின் பெயரான "பந்து" என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதன்பிறகுமெகருன்னிசாவிற் குபென்குழந்த பிறந்தது.அன்னபூரணி என்று அழைத்தார்கள்.திருமனமாகி இப்போது ஒரு பேத்தியும்பேரனும் இருக்கிறார்கள்.

மெகருன்னிசாவும்,நிர்மலும் ஆதர்ச தம்பதிகளா கவே இருந்து வந்தனர்.மெகருக்கு நிர்மல் என்றாலே ஒரு நெகிழ்ச்சிதான்.

"தாதிமா ...தாதிமா"        என்று ஓடிவந்தாள் ஆறு வயது பேத்தி.

"என்னம்மா?...ஓடிவராத...விழுந்திட போற..." 

"பாட்டி ....நீ நமாஸ் பண்ணூவியா ? பூஜை பண்ணுவியா ? "

"ஏன் கேக்கர கண்ணூ ?"

"நீ நமாஸ்தான் பண்ணுவே நு அண்ணன் சொல்றான்" 

"ஆமாம்" 

"அப்ப பூஜை பண்ணமாட்டியா ?"

"பூஜையும்பண்ணுவேன்" 

"புத்து... புத்து...நான் என்ன கெக்கறென்னு புரியலையா?"

"புரியுது"

"நமாஸ் பண்ணூம் போது எந்த சாமிய நினைச்சுப்பே" 

பாட்டி மெகர்  பேத்தி கையை பிடிச்சு அணைத்து  உச்சி மோந்தாள் .

" சொல்லு பாட்டி ". பேத்தி அவசரபடுத்தினாள்.

பெத்தியை அணை த்துக் கொண்டே "மொகன் தாஸ் கரம் சந்த் காந்தி "என்று ஓதினாள்.

"பூஜைபண்ணும்போது ?"

உதடுகள் துடிக்க,கண்கள்குளமாக ..."நிர்மல் சர்க்கார் " என்றாள் மெகருன்னிசா.

திரும்பிப் பார்த்த தாத்தாவுக்கு மெகர் ஏன் அழுகிறாள்  என்பது தெரிந்தே இருந்தது.

ஆதரம்:

(1.. lasat 200 days of Mahathma Gandhi - Hindu Publications.

 2. ஆடன்பரோ இயக்கிய "காந்தி" திரைப்படம். )

(செம்மலரில் வந்த இந்தக்கதை சம்ஸ்கிருத மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு  தொகுப்பில்  உள்ளது )

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

கண்கள் கலங்குகின்றன ஐயா