"அந்த இளம் தாயின்
பிரகடனம் ........ "
"ஸ்ஸூ...... அது ஒரு ஆண் குழந்தை....:):) அம்மா சென்டிமெண்ட்டை காலத்துக்கும் பெரிசா ஏன் பேசராங்க என்பதை இப்போ உணர்ந்துகிட்டென் . இனி நானும் டயலாக் விடுவேன்.. உன்னை பத்து மாதம் சுமந்து பெத்தவா டா ... நு...ஆனால் மிகவும் கூர்மையாக பார்த்தால் ...இந்த அம்மா சென்டிமென்டுக்கு பின்னால் அல்லது இந்த தாய்மை கதைகளுக்கு பின்னால் .....பல ஆத்மாக்கள் அந்த முழுமையான உணர்வினைப் பெற ...:):) அதனால நாந்தான் சுமந்தேன் நு....எனக்கு மட்டும் தான் வலி நு ...எனக்குமட்டும்தான் வேதனை நு... சொல்ல மாட்டேன் ......இந்த சமயத்தில மற்றவர்களிடமிருந்து நான் அபரிமிதமான அன்பை பெற்றேன்...என்னுடைய நெருக்கமன நண்பர்களாகட்டும்... உறவினர்களாகட்டும்.... என்னுடன் பணியாற்றியவர்களாகட்டும்...நான் சந்தித்தவர்களாகட்டும்... ஓவ்வோருவரும் ...ப்ப்ப்ப்பா ...மனிதர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறாங்க .....அதுவும் என்ன சுத்தி எவ்வளவு நல்லவங்க.....இதுக்கு மேல எனக்கு என்ன வேணும் !!!! நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் நு சொல்றதெலாம் சின்ன வர்த்தை...... நானெல்லாம் இப்படி உங்க யார்கிட்டயும் இருந்ததில்ல ....இப்படி இருப்பனா நு தெரில...என்னோட பையன் இத்தன பேரோட கவனிப்புல ....இத்தன பேரோட அன்புல....இத்தன பேரோட பாசத்துல பிறந்திருக்கான்...இதுக்கும் மேல என் குழந்தைக்கு நான் எதுவும் வெணும் நு கேக்கல.....!!! நான் சந்தித்த அத்துணை உள்ளங்களுக்கும் என் அன்பும் அணைப்பும் உரித்தாகுக..:):) என் தாய்மையை நான் உணர்வது உங்களால் தான்...என் பையன் எல்லருக்குமாக இருப்பான்.... நல்லா வளருவான்...நம்பிக்கை ...தைரியம் எனக்கு இருக்கு....."
எங்கள் அன்புத்தோழன் "அசாக்கி "ன் மகன் ஜெய சந்திர ஹஷ்மி. அவன் மனைவி "அன்பு" ! சின்னஞ்சிறு பெண் ! அசாக்கிற்கு பேரனை நேற்று பெற்று கொடுத்திருக்கிறாள் . என்னை "தாத்தா-தாத்தா ' என்று அழைப்பாள் . அந்த சின்னப் பெண்ணுக்குள்ளே எவ்வளவு பெரிய உள்ளம்
....அசாக்கு நீர் கொடுத்து வைத்தவர்...ஹஷ்மி நீயும்தான்.... நீடூழி வாழுங்கள் .
("அசாக் " அந்த புரட்சிகர பத்திரிகயான "தீக்கதி" ரின் ஆசிரியர். அவரை "ஏல ! "அசாக்கு "நு கூப்பிட முடியாது, ஹஷ்மி ,அன்பு அந்த சின்னப்பயல நான் "ஏல ! ஏல ! "அசாக்கு" நு ஆயிரம் தடவை கூப்பிடுவேன் . சரியா ? )
0 comments:
Post a Comment