Tuesday, June 06, 2017




"மதிப்புரை "  




"பொன்வீதி "

ஆசிரியர் : மோகன் ஜி 

அக்ஷரா பிரசுரம்,
g 1702,,அபர்ணாசரோவர்,
நல்ல கண்டலா ,
ஹைதிராபாத்.-500107
விலை : re  125/-



எழுத்தாளர்,கவிஞர் ,கட்டுரையாளர்,பேச்ச்சாளர் , வங்கி நிர்வாகி என்று பன்முகம் கொட்டவர்தான் மோகன் குருமூர்த்தி என்ற மோகன் ஜி !

என் அனுபவத்தில்மிகவும் வித்தியாசமான அனுபவங்களை கொடுக்கும் எழுத்து  கலைஞர் .

"சிறுகதை எழுத்தாளன் எழுதாத வற்றிக்குள் கதையை படிப்பவன் வாசகன் என்கிறார்  மோகன்ஜி தன முன்நுரையீல் . இந்த தொகுப்பு அதற்கான உதாரணம்.இருவது கதைக்கொண்ட இந்த நூலில் முதற்கதை "பொன்வீதி  " உதாரணம்.

"பதினைந்து வயது ஜானு காத்திருக்கிறாள்.சிவா வந்து விடுவான் . சேலத்தில் இருக்கும் அத்தை வீட்டுக்கு வந்திருக்கிறாள்.அவன் வரும்போது பளிச்   சென்று இருக்க வேண்டும். பாவாடை தாவணியை தோய்த்து உலர்த்தி இருக்கிறாள்.

நாலு வீட்டுக்கு இட்டலி தோசை மாவு கிரைண்டரில் அரைத்து கொடுக்கும் கஷ்ட ஜீவிதான் அத்தை. கோடை  விடுமுறையில் வந்து ஒத்தாசையாக இருப்பாள்.அப்பாவும் அம்மாவும் போடும் சண்டையிலிருந்தும் பேசிசிலிருந்தும்தப்ப  அத்தைவிட்டுக்கு வந்து விடுவாள்..

சிவா வந்தான். ஏன் அக்காவிடம் என்னை பற்றி விழுந்து விழுந்து விசாரித்தாய்?ஏன் என் ஸ்க்கூல்  அட்ரசுக்கு கடிதம் எழுதினாய்    என்று சரமாரியாக கேட்கிறான் "


விடுமுறை கழி ந்துஜானு அம்மா வீட்டுக்கு போய்விட்டாள்.சிவாவின் அக்கா வீட்டில் கிரைண்டர் வாங்கி விட்டார்கள். மாவு அரைக்க போகவேண்டாம் .ஜானுவை அதிகமாக கோபித்து கொண்டோமோ ! . சிவா நினைக்கிறான் "


ஜானு சிவாவை விரும்பினாளா  ? சிவா ஜானுவை காதலிக்கிறானா ? மோகன்ஜி இதுபற்றி ஒருவார்த்தைஎழுதவில்லை ..


ஆனால் வாசகன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறான். கதை மாந்தரின் உணர்வுகளை வாசகன் மனத்தில் "மடைமாற்றி "விடுவது !


மோகன் ஜியின் கைவண்ணம் இதுதான்.

"பச்ச மொழகா "  விளையாட்டு,, கூளம்  ,புல்புல் என்று கதைகளை அடுக்கிக் கொண்டே  போகலாம்.    


மிகவும் வித்தியாசமான எழுத்துக்கு சொந்தக்காரர். மோகன் ஜி !


வாழ்த்துக்கள்  தோழரே !!!



1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான சிறுகதைதொகுப்பு ஐயா
நன்றி