Thursday, May 15, 2014

அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் !

வாழ்த்துங்களேன் ...!!!

அவள் கல்லூரியில் முதுகலை பட்டம் முடித்தாள் ! அப்போது அவளுக்கு இருபத்திமூன்று வயது ! 

அவளுடைய திருமணத்திற்கு அவள் தந்தை ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார் !

நல்ல வடிவான முகத்தோற்றம் ! "அழகி " என்பதை விட கொஞ்சம்  கூடுதலான களையான முகத்தோற்றம் !

எதற்கும் இருக்கட்டும் என்று அவளுடைய விருப்பத்தை கேட்க விரும்பினார் !
"நீங்கள்  பார்த்து முடிவு செய்யுங்கள் ! ஆனால் வரதட்சிண கொடுக்கக்கூடாது" என்று கூறிவிட்டாள்  ! 

அதிகமாக தேடும் நிலை ஏற்படவில்லை ! நெருங்கிய பலகுடும்பங்களில் பெண்கேட்க விரும்பியிருந்திருக்கிறார்கள் ! அது பின்னல் தான்  தெரிந்தது !ஆனாலும் அவள் தந்தை  வெளியூரிலேயெ மாப்பிள்ளை பார்த்தார் !

மாப்பிள்ளை பையன் வெளிநாட்டில்" முனைவர்" பட்டத்திற்காக ஆராய்சியில் ஈடுபட்டிருந்தார் !

மாப்பிள்ளை வீட்டரிடம் அவள் தந்தை வரதட்சினை என்பது என்னுடைய "பட்ஜெட்டில் "இல்லை ! என் மகள் அதனைஒரு நிபந்தனையாக போட்டிருக்கிறாள் " என்று கூறிவிட்டார் ! " என் மகனும் வரதட்சிணை வாங்கக் கூடாது என்று கூறியிருக்கிறான் " என்று அவர்களும் பதில் கூறிவிட்டனர் !

திருமணம் உறுதி செய்ய நாள் குறிக்கப்பட்டது ! பெரியோர்கள் ,உறவினர்கள் முன்னிலையில் "நிச்சயதார்த்த" விழா நடந்தது !

அவர்கள் வழக்கப்படி திருமண நாள் குறிக்கப்பட்டு முகூர்த்த பத்திரிக்கை பெரியவர்கள் முன்னிலையில் எழுதப்பட்டது !

அதனை எல்லார் முன்னிலையிலும் வாசித்து சம்மதம் கேட்பார்கள் !

அதே போல் பெரியவர் அதன வாசிக்க "யாருக்காவது இதில் ஆட்சேபனை இருக்கிறதா ?" என்று கேட்டார்கள் !

சபை மவுனமாக இருந்தது ஒருநிமிடம் !

மெலிதான குரலில் "மாமா! ஒரு சின்ன திருத்தம் "என்று சன்னமான குரல் ஒலித்தது !

சபை அதிர்ந்து திரும்பிப்பார்த்தது !

மணப்பெண் தான் அந்த சன்னமான குரல் கொடுத்தது !

"என்னம்மா! என்னம்மா ?!" என்று மாப்பிள்ளையின் தந்தை கேட்டார் !

" பத்திரிகையின் வாசகத்தில் ஒரு திருத்தம் மாமா !  " கன்னிகாதானம் " என்று எழுதியிருக்கிறீர்கள் ! I  am not a commodity to be given in alms ! அந்த வார்த்தையை மாற்ற வேண்டும் !" என்றாள் அந்த பேண் !

 பெரியவர்கள் விவாதித்தார்கள் !அந்த மணமகளின் பெரியப்பா அதனை "மாற்ற" கூடாது என்றார் !

இறுதியில் மாற்றுவது என்றும் "கன்னிகா தானம்"    என்பதற்கு பதிலாக "பாணி கிரகணம் " என்று முடிவாகியது ! இதனையும் அவள் வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டாள் !

திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவனோடு அவள் வெளிநாட்டுக்கு செல்ல விருந்தாள் !

"குழந்தை ! எல்லாம் நல்லபடியாக முடிந்தது ! ஆனா எனக்கு ஒரு சந்தேகம் !"
என்றார் அவளின் தந்தை !

"என்னப்பா ?" 

"கல்யாணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் தான் மாப்பிளையே இந்தியாவிற்கு வந்தார் ! அவரைப் பார்க்காமலேயே நீ எப்படி சம்மதம் சொன்னாய் ?" என்று கேட்டார் !

" அப்பா ! இந்த பெண்பார்க்கும் படலம் மாதிரி அராஜகம் இங்கதான் உண்டு அப்பா ! நான் அவனுக்கு காப்பிகொடுக்கணும் ! அவன் வாங்கி குடிப்பான் ! சுத்தி பத்திபதினந்துபேர் என்னயே பாத்துக்கிட்டு இருப்பாங்க ! நான் அவன ஒரு fleeting  moment ல பாத்து ...! என்னப்பா அநியாயம் ! அப்படி பாத்து ...அவனோட past , future  எல்லத்தையும்கண்டுபிடிச்சுடுவேனா ! அப்படியே நான் வேணான்னு சொன்னாலும் நீங்க விடுவேளா  ! பாட்டிலேருந்து பக்கத்து வீட்டு ஆச்சி வரை "பையன் முக்கும் முழியுமா இருக்கான் ! அவனுக்கு என்ன குறை ? உடனே வெளிநாட்டுக்கு "ஜாம் ஜாம்"நு  பறக்கப்பேறே ! நு சொல்லி என்னச் சுத்தி கும்மியடிச்சு சம்மதிக்க வைக்கமாட்டீங்க !இதுல பாக்கறது என்ன பாக்கறது  "

அப்பா கேட்டுக் கொண்டிருந்தார் !

"இன்றைய நிலைல எங்களால இவ்வளவுதான் முடியும் ! காலம் மாறும் அப்பா ! "என்று முடித்தாள் !  

அந்த பெண் யாருமில்லை ?

ஹன்ஸா  காஷ்யப் ! M .A ; M Phil ;M L 

எனது செல்லமகள் !!!

மே மாதம் 16ம்தேதி அவளுடைய பிறந்த நாள் !!!

வாழ்த்துங்கள் !!!! 


  




3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

//மக(ள்)ன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல்எனும் சொல்//
தங்கள் மகள் அல்லவா

தங்களின் செல்ல மகள்
ஹன்ஸா காஸ்யப் அவர்களுக்கு
மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

இளங்கோ said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

அழகிய நாட்கள் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். குறிப்பாக அவரது சிந்தனைகளுக்கு...
திலிப் நாராயணன்.