அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் !
வாழ்த்துங்களேன் ...!!!
அவள் கல்லூரியில் முதுகலை பட்டம் முடித்தாள் ! அப்போது அவளுக்கு இருபத்திமூன்று வயது !
அவளுடைய திருமணத்திற்கு அவள் தந்தை ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார் !
நல்ல வடிவான முகத்தோற்றம் ! "அழகி " என்பதை விட கொஞ்சம் கூடுதலான களையான முகத்தோற்றம் !
எதற்கும் இருக்கட்டும் என்று அவளுடைய விருப்பத்தை கேட்க விரும்பினார் !
"நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள் ! ஆனால் வரதட்சிண கொடுக்கக்கூடாது" என்று கூறிவிட்டாள் !
அதிகமாக தேடும் நிலை ஏற்படவில்லை ! நெருங்கிய பலகுடும்பங்களில் பெண்கேட்க விரும்பியிருந்திருக்கிறார்கள் ! அது பின்னல் தான் தெரிந்தது !ஆனாலும் அவள் தந்தை வெளியூரிலேயெ மாப்பிள்ளை பார்த்தார் !
மாப்பிள்ளை பையன் வெளிநாட்டில்" முனைவர்" பட்டத்திற்காக ஆராய்சியில் ஈடுபட்டிருந்தார் !
மாப்பிள்ளை வீட்டரிடம் அவள் தந்தை வரதட்சினை என்பது என்னுடைய "பட்ஜெட்டில் "இல்லை ! என் மகள் அதனைஒரு நிபந்தனையாக போட்டிருக்கிறாள் " என்று கூறிவிட்டார் ! " என் மகனும் வரதட்சிணை வாங்கக் கூடாது என்று கூறியிருக்கிறான் " என்று அவர்களும் பதில் கூறிவிட்டனர் !
திருமணம் உறுதி செய்ய நாள் குறிக்கப்பட்டது ! பெரியோர்கள் ,உறவினர்கள் முன்னிலையில் "நிச்சயதார்த்த" விழா நடந்தது !
அவர்கள் வழக்கப்படி திருமண நாள் குறிக்கப்பட்டு முகூர்த்த பத்திரிக்கை பெரியவர்கள் முன்னிலையில் எழுதப்பட்டது !
அதனை எல்லார் முன்னிலையிலும் வாசித்து சம்மதம் கேட்பார்கள் !
அதே போல் பெரியவர் அதன வாசிக்க "யாருக்காவது இதில் ஆட்சேபனை இருக்கிறதா ?" என்று கேட்டார்கள் !
சபை மவுனமாக இருந்தது ஒருநிமிடம் !
மெலிதான குரலில் "மாமா! ஒரு சின்ன திருத்தம் "என்று சன்னமான குரல் ஒலித்தது !
சபை அதிர்ந்து திரும்பிப்பார்த்தது !
மணப்பெண் தான் அந்த சன்னமான குரல் கொடுத்தது !
"என்னம்மா! என்னம்மா ?!" என்று மாப்பிள்ளையின் தந்தை கேட்டார் !
" பத்திரிகையின் வாசகத்தில் ஒரு திருத்தம் மாமா ! " கன்னிகாதானம் " என்று எழுதியிருக்கிறீர்கள் ! I am not a commodity to be given in alms ! அந்த வார்த்தையை மாற்ற வேண்டும் !" என்றாள் அந்த பேண் !
பெரியவர்கள் விவாதித்தார்கள் !அந்த மணமகளின் பெரியப்பா அதனை "மாற்ற" கூடாது என்றார் !
இறுதியில் மாற்றுவது என்றும் "கன்னிகா தானம்" என்பதற்கு பதிலாக "பாணி கிரகணம் " என்று முடிவாகியது ! இதனையும் அவள் வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டாள் !
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவனோடு அவள் வெளிநாட்டுக்கு செல்ல விருந்தாள் !
"குழந்தை ! எல்லாம் நல்லபடியாக முடிந்தது ! ஆனா எனக்கு ஒரு சந்தேகம் !"
என்றார் அவளின் தந்தை !
"என்னப்பா ?"
"கல்யாணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் தான் மாப்பிளையே இந்தியாவிற்கு வந்தார் ! அவரைப் பார்க்காமலேயே நீ எப்படி சம்மதம் சொன்னாய் ?" என்று கேட்டார் !
" அப்பா ! இந்த பெண்பார்க்கும் படலம் மாதிரி அராஜகம் இங்கதான் உண்டு அப்பா ! நான் அவனுக்கு காப்பிகொடுக்கணும் ! அவன் வாங்கி குடிப்பான் ! சுத்தி பத்திபதினந்துபேர் என்னயே பாத்துக்கிட்டு இருப்பாங்க ! நான் அவன ஒரு fleeting moment ல பாத்து ...! என்னப்பா அநியாயம் ! அப்படி பாத்து ...அவனோட past , future எல்லத்தையும்கண்டுபிடிச்சுடுவேனா ! அப்படியே நான் வேணான்னு சொன்னாலும் நீங்க விடுவேளா ! பாட்டிலேருந்து பக்கத்து வீட்டு ஆச்சி வரை "பையன் முக்கும் முழியுமா இருக்கான் ! அவனுக்கு என்ன குறை ? உடனே வெளிநாட்டுக்கு "ஜாம் ஜாம்"நு பறக்கப்பேறே ! நு சொல்லி என்னச் சுத்தி கும்மியடிச்சு சம்மதிக்க வைக்கமாட்டீங்க !இதுல பாக்கறது என்ன பாக்கறது "
அப்பா கேட்டுக் கொண்டிருந்தார் !
"இன்றைய நிலைல எங்களால இவ்வளவுதான் முடியும் ! காலம் மாறும் அப்பா ! "என்று முடித்தாள் !
அந்த பெண் யாருமில்லை ?
ஹன்ஸா காஷ்யப் ! M .A ; M Phil ;M L
எனது செல்லமகள் !!!
மே மாதம் 16ம்தேதி அவளுடைய பிறந்த நாள் !!!
வாழ்த்துங்கள் !!!!
3 comments:
//மக(ள்)ன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல்எனும் சொல்//
தங்கள் மகள் அல்லவா
தங்களின் செல்ல மகள்
ஹன்ஸா காஸ்யப் அவர்களுக்கு
மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும். குறிப்பாக அவரது சிந்தனைகளுக்கு...
திலிப் நாராயணன்.
Post a Comment