Monday, October 13, 2014

(மீள் பதிவு )

 

HOME

ABOUT

POSTS RSS

CONTACT

LOG IN

Monday, October 21, 2013


அலாவுதீன் பாய் அவர்களும் ,

காந்தியைக்  கொன்றவரகாளூம் ...!!!

அலாவுதீன் பாய் அவர்களை 1969ம் ஆண்டு முதன்முதலாக சந்தித்தேன் ! தீக்கதிர் ஆபிசில் page  maker ஆக பணியாற்றிக்கொண்டிருந்தார் !


மொட்டை என்றோ வழுக்கை என்றோ சொல்லமுடியாத தலை முடி ! நீண்ட கைவைத்த வெள்ளை சட்டை,வேட்டி தோளில் துண்டு என்று பார்ப்பதற்கு கம்பிரமான உயரத்தில் இருப்பார் ! பேசுவது குறைவு! ஆனால் " நறுக்" என்று இருக்கும் ! என்னை "சாமா,சாமா " என்று  கூ ப்பிடுவார் ! மதிய சாப்பட்டிற்கு பின் அவரோடு பேசுவேன் ! பழைய விஷயங்களை சொல்வார் ! 


அலாவுதீன் பாய் சொந்தமாக அச்சகம் வைத்திருந்தார் ! தமிழ் நாட்டில் அப்போது "உருது " மொழியில் அச்சுக் கோக்க தெரிந்த வேகு சிலரில் அவரும் ஒருவர் ! பின்னாளில் அச்சகமுதலாளிஅச்சக தொழிலாளியாக மாறினார் !


மதுரை நகராட்சி கவுன்சிலராக இருந்தார் ! 4வது வார்டு என்று நினைவு ! பட்டரக்கார தெரு,முனிச்சாலை பகுதியில்பிரபலமானவர் !


அவரோடு கவுன்சிலராக இருந்தவர்கள் பூச்சி அண்ணன்,வேம்புலு ,தயிர்கடை சுப்பிரமணியம் ஆகியொர் உண்டு!


மதுரை வைத்திய நாத அய்யர் ,,ஹிரா பாய், என்று பலர் பற்றி  பேசிக்கொண்டிருப்பார்  !


48ல் காந்தி சுடப்பட்டு இறந்தது பற்றி சொன்னார் !


"சாமா !கா ந்தியைக்    கொன்ற பொது  ஂமுஸ்லீம்க   தான்  கொன்றிருப்பார்கள் என்ற வதந்தியை கிளப்பி விட்டர்கள் ! முனிச்சாலை, பட்டரைக்காரதெரு,

தாசில்தார் பள்ளிவாசல்,இஸ்மாயி புறம் நு பதட்டமாயிருன்தது !கம்யூனிஸ் கட்சிதான் அவங்களுக்கு பாது கொடுக்க தீர்மானித்தது !ஏன்னா  அப்போ அவங்கத்தான் மதுரைல சக்தியோட இருந்தாங்க ! ஒருமணி நேரத்தில 20000 பேர திரட்டிருவாங்க ! வெறும் தண்டோரா போட்டே ஆளா சேத்துருவாங்க !

தைக்கால்   தெரு,மணி நகரம்,பூந்தோட்டம் ,செல்லுருன்னு ஆளுககுவிஞசுருவாங்க ! பூச்சி அண்ணன்னை தான் இதுக்கு அனுப்புவாங்க ! அவரு குதிரவண்டி தொழிலாளர் சங்க தலைவரு !வண்டியோட ஆளுகளை கொண்டுவந்து நீருத்திட்டரூ.குதிரை வாண்டிக்குள்ள சாமான்களை வச்சுப்புட்டாரூ !" 

"வாங்க பாய் டீ  சாப்பிடுவோம் "

"சரி சாமா "

பாய் தொடர்ந்தார் ! "அப்பந்தான் அய்யர் அனுப்பின ஆள் வந்தாரு ! காஜிமார் தெருவுக்கு ஆளனனுப்பச் சொன்னாருன்னு சொன்னான் !"

"யாரு சொன்னா?"

"அய்யரு!"

"யாரு பாய் அய்யரூ  "

"வைத்தியநாத அய்யரு ! பூச்சி அண்ணனுக்கு சொல்லிவிட்டறு "

அண்ணனும் எற்பாடு பண்ணிப்புட்டறு "

அப்புறம் ?"

"அப்புறம் என்ன அப்புறம் ! ஒரு பய வல்லை !"

"அதெப்படி வைத்திய நாதய்யருக்கு பூச்சி அண்ணன் பழக்கம் "

"அதுபெரியகதை ! "வைக்கல் "படப்புகதை ! "

"சொல்லும் பாய் "

"வாங்க சாமா ?"

பாய் எழுந்து நடக்க ஆரம்பித்தார் !


அலாவுதீன் பாய்,பூச்சி அண்ணன்,வேம்புலு  --


தோழர்களே! நீங்கள் எங்களுக்கு இன்று எவ்வளவு தேவைப்படுகிறீர்கள் தெரியுமா ? !!!!!


1 comments:

சிவகுமாரன் said...

தமிழ்நாட்டில் கம்யூனிசம் கிளர்ந்தெழ இது தான் தக்க சமயம் அய்யா.எனக்குத் தெரிந்து 90 களில் அம்மாவின் ஊழல்களை தமிழகத்த்ன் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்றதில் கம்யூநிஸ்ட்களின் த.மு.எ.ச. , த.க.இ.பெ போன்ற அமைப்புகளுக்கு பெரும் பங்குண்டு. அதைப் போல தற்போதும் இயங்க வேண்டும். எங்கே மறுபடியும் ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியின் தோளில் தொங்க போய் விடுமோ எனக் கவலையாக இருக்கிறது.