skip to main |
skip to sidebar
சிக்மண்ட் ப்ராய்ட் அவர்களும் ,
அவரும் ........!!!
சிக்மண்ட் ப்ராய்ட் மிகச்சிறந்த நரம்பியல் நிபுணர் ! 1856 மாண்டு ஆஸ்திரிய நாட்டில்பிறந்த அவர் 1938ம் ஆண்டு லண்டனில் இறந்தார் !
உளவியல் துறையிலும்,மனநல மருத்ததுவத்திலும் அவருடைய "வரையறை "கள் மிக முக்கியமான வைகளாகும் ! அவை இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம் ஆகிய துறைகளிலும் தன செல்வாக்கை செலுத்தின !
கொஞ்சம் கூடுதலாகவே அவை போற்றப்பட்டன் !
உயிரினத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அடிப்படை பாலுணர்வு தான் என்று அவர் கூறினார் !
"freudism " என்ற தத்துவ போக்காகவே அது உருப்பெற்றது !
வளர்ந்து வரும் மார்சியத்தின் செல்வாக்கை நீர்த்துப் போகச்செய்ய "பிராய்டிசத்தை " தூக்கிப்பிடித்தவர்களும் உண்டு !
உலகம் புறாவும் அக்டோபர் 10 ம் தேதியை "உலக மனநல "தினமாக கொண்டாடுகிறார்கள் ! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அந்த தினத்தை இந்திய "மனநல "தினமாக கொண்டாட வேண்டும் என்கிறார் ! இந்தியாவில் வரும் பத்து ஆண்டுகளில் 24 கோடிப்பேர் எதாவது ஒருவகையில் மனநல பாதிப்பு உள்ளவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது என்கிறார் ! அதனால் ஏழை எளிய மககளுக்கு மனநல மருத்துவம் போய்ச் சேரவேண்டும் என்றும் அறிவித்துள்ளார் !
நம்மில் பலர் மறதி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் ! இதனை மனனலமருத்துவர்கள் memory lapse என்கிறார்கள் !
சிலர் பேசும் போது தவறான பெயர்களை தகவல்களை கூறுவார்கள் ! இதனை slip of the tong என்பார்கள் !
சிலர் ஒரே விஷயத்தை அடிக்கடி பலமூறை தவறாகச் சொல்பவர் கள் உண்டு !
உதாரணத்திற்கு பிரதமர் மோடி அவர்களை எடுத்துக் கொள்ளலாம் ! மடிசன் சதுக்க தோட்டத்தில் பிரமுகர்கள் முன்னால்பேசும் பொது
மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி என்பதற்கு பதிலாக" மோகன்லால் "
என்று குறிப்பிட்டார் ! சென்ற ஆண்டு ஒருகூட்டத்திலபெசும் போதும் "மோகன்லால் "என்றே கூறி யுள்ளார் !
பல தோலைக்காய்சிகளிலும்,முக நூலிலும் இதனை பலமுறை ஒளிபரப்பினர் ! மனசுக்கு கஷ்டமாக இருந்தது !
இது மறதியா மனநோயா ! ?
"நமக்கு பிடிக்காத ஒருவரைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய பொது இப்படிப்பட்ட மனநிலை ஏற்படும் " என்று சிக்மண்ட் பிராய்ட் குறிப்பிடுகிறார் !
திருச்சியில் பிரதமர் பேசும் பொது வெதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றி தவறாக குறிப்பிட்டார் !
அசாம் சென்றிருந்தபோது கிருஷ்ண பரமாத்வாவின் மனைவி "ருக்மணி" பிறந்த ஊர் என்றூ கூற பத்திரிகைகள் அது "விதர்பா" என்று கிண்டலடித்தன !
ஐக்கிய நாடுகள் சபையில் "காஷ்மீர் " என்று குறிப்பிட வேண்டிய தருணங்களில் "பாகிஸ்தான் ,பாகிஸ்தான் " என்று குறிப்பிட வெளி உறவுத்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் சமாளிக்க வேண்டியதயிற்று !
இதனை Freudian slip of the tong என்று மனநல மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள் !
எது எப்படியிருந்தாலும் இந்திய மக்களுக்குமனநலம் பற்றிய மருத்துவம் என்பதை சுகாதாரத்துறை புரிந்து கொண்டு செயல்படுவது மன நிறைவைத்தருகிறது !
2 comments:
மறதி வியாதி நம் மக்களிடம் நிறையவே இருக்கிறது. அது தான் அரசியல் வியாதிகளுக்கு மூலதனமாய் இருக்கிறது .
///நமக்கு பிடிக்காத ஒருவரைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய பொது இப்படிப்பட்ட மனநிலை ஏற்படும் " என்று சிக்மண்ட் பிராய்ட் குறிப்பிடுகிறார் ///
உண்மையாகத்தான் இருக்க வேண்டும் ஐயா
Post a Comment