Wednesday, October 08, 2014

"ஓய்வூதியம் என்றால் என்ன ? ....."



"உழைக்கும் பொது சம்பளம் வாங்குவது நியாயம் ! ஒய்வு பெற்ற பிறகு உழைக்காமல் சம்பளம் பெறலாமா ? என்று "சிவகங்கை சின்னப்பையன்"என்று கருணாநிதியால்  அழைக்கப்பட்ட ப.சிதம்பரம் கூறுவார் !

அதனை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதில்  முனைப்பாக இருப்பவர் அவர் மட்டுமல்ல ! 

பா.ஜ.க வின் யஷ்வந்த் சின்ஹா வும் அதே கருத்து உள்ளவர் தான் ! அவ்ர்களின் நண்பரான   ஜஸ்வந்த் சிங் அவர்களும் ஓய்வூதியத்தை காலி பண்ண வேண்டும் என்ற எண்ண முடை யவர் தான் ! 

பா.ஜ.க ஆட்சியின் போது தான் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன !

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதால் அரசின்வரவு செலவு கணக்கு அதிகமாகிறது என்று மூன்று  பெரும் புலம்புகிரார்கள் !    

அப்பவிமக்களில் பலரும் இவ்ர்கள்  கூறுவதில்  நியாயம் இருப்பதாக நினைக்கிறார்கள் !

உண்மையில்  "ஓய்வூதியம்" என்றால் என்ன ?

அரசு ஊழியர் ஊதியம் பெறுகிறார் !அவர் குடும்பத்தில் அவர் அவர்மனைவி ஆகியோர் அதன வைத்து வாழ்கின்றனர் ! அவ்ர்களுக்கு குழ்ந்தை இருந்தால் அதனையும் காப்பறுகிறார் ! அவருடைய பத்து வயது மகனை  பள்ளிக்கு அனுப்புகிறார் ! வயதான் தாய் தந்தையரை கவனித்துக் கொள்கிறார் ! 

அரசு ஊழியரத்தவிர வெறு எவரும் உழைக்கவில்லை ! அவர்களால் உழைக்க இயலாது ! அவர்களைக் காப்பாற்றுவது  அந்த ஊழியரின் பொறுப்பு ! முதியோர்களையும் ,குழந்தைகளையும், இளைஞர்களின் கல்வியையும் இந்த சமுகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் ! ஆனால் இதனை  அரசு ஊழியர் ஏற்றுக்கொண்டு தன உழைப்பில் நிறைவு செய்கிறார் ! 

அவர் ஒய்வு பெறும் போது இந்த கடமைகளை தொடர அவருக்கு கொடுப்பது தான் ஒய்வு ஊதியம் !

அதற்கு வேட்டு வைக்க இந்தப்பாவிகள் முயற்சிக்கிறார்கள் !






2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இப்படி எல்லாம் எப்படி எண்ணுகிறார்களோ தெரியவில்லை ஐயா

சிவகுமாரன் said...

மெத்த சரி அய்யா.
என்னைப் போன்ற தனியார் ஊழியர்கள் என்ன செய்வது?