Sunday, October 26, 2014

நியா ? நானா? வும்  .

Dramatic finish ம் .....!!! 


ஞாயிற்றுக் கிழமை (26-10-14) அன்றூ "நீயா ?நானா ? " ஆரம்பமாகும் பொது கொஞ்சம் சிரத்தையில்லாமல்தான் பார்த்தேன் !

கோபி-அந்தோனி combination  அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் ! கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றி இறுதியில் முத்தாய்ப்ப்பக சில விஷயங்களை சொருகுவார்கள் !

நேற்றும் அது தான் நடந்தது ! ஒருபுறம் நவீன காலத்து யுவதிகள் ! எதிர் புறம் அவர்களை நேசிக்கும் ,பெருமிதம் கொள்ளும்,அதேசமயம் உலகம் தெரியாத பிள்ளையோ என்று பயம்கொள்ளும் தந்தைகள் ! 

துணிச்சலும் ,பாய்ச்சலும்மட்டும்கொண்ட பதின் வயது பெண்கள் ! அவர்களின் துணிச்சலை, பாய்ச்சலை, சேட்டைகளை மனதிற்குள் ரசிக்கும் தந்தைகள் - அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு கவலையோடு இருக்கும் தகப்பன்கள் !

தந்தை கவலையோடு தெரிவிக்கும்கருத்துக்கள ​ புரிந்து கொண்டு ​ தங்களுக்குள் கண் சிமிட்டிக்கொண்டு  -"அப்பா! நான் சின்னபிள்ளை இல்லைப்பா " என்று கூறும் அந்த சின்னஞ்சிறு "பூ "க்குவியல்கள்   -மிகவும்ரம்மியமான கண்கொள்ளாக் காட்சிகள் !

தங்கள் மகள் காதல்கத்திரிக்காய் என்று எமாறாமலிருக்க வேண்டுமே என்று தவிக்கும் தந்தைகளிடம் "எங்களுக்கு எங்கள் limit தெரியுமப்பா "என்று ஓங்கியடிக்கும் செல்லமகள்கள் ! எங்களிடமpropose செய்பவன் தகுதி அறிந்து அவன அவன் மூஞ்சிக்கு நேரreject  செய்யும் தைரியம் எங்களுக்கு உண்டுப்பா " எனும்போது நான் என்னை அறியாமல் கைதட்டினேன் !

பல சின்னஞ்சிறு சிட்டுகள் -பெரும்பான்மையானவர்கள் காதல் திருமணத்தை ஆதரித்தனர் !

"எந்த சாதியாக இருந்தாலும் காதலிப்பிர்களா ?"

"நிச்சயமாக "

"உங்களைக் காதலிப்பவர் ...தாழ்ததப்பட்டவராக, தலித்தாக இருந்தாலும்   ஏற்றுக்கொள்பவர்கள் எத்தனைபேர் ?கையைத்தூக்குங்கள் ?

கண்கள் பனிக்க அத்துணை பெரும் கையைத்துக்கியத்தை நெஞ்சம் விம்ம கண்டேன்!

கோபி தந்தைகள் பக்கம் திரும்பினார் !

"உங்களில் எத்துணை பேர் உங்கள்மகள் ஒரு தலித்தைகாதலிப்பதை  ஏற்றுக்கொள்வீர்கள்  ? "

ஒன்று இரண்டு பேரைத்தவிர மாற்றவர்கள் அத்துணை பெரும் கையைத்தூக்கினார்கள் !

மனம் நிறைந்த நிகழ்ச்சி !!!


3 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

ஒரு மனித இனத்தை தலித் என்று பெயறிட்டு, அவர்களை தாழ்த்தி வந்த சமூகம், தற்போதுதான் சற்றே கண் திறந்து பார்க்கிறது!.

தலித்தை ஏற்றுக் கொள்வீர்களா என்று பகிரங்கமாக கேட்கும் நிலையில்தான் இந்த சமூகம் இருக்கிறது என்பதை நினைத்தாலே, இன்னும் எவ்வளவு தூரத்தை நாம் கடக்க வேண்டுமே என்ற பிரயாசை ஏற்பட்டது?!.

kashyapan said...

தலித்தை ஏற்றுக் கொள்வீர்களா ? என்று கோபிநாத் கேள்வி கேட்டபொது எனக்கு தோன்றிய அதே எண்ணம் உங்களுக்கும் தோன்றியது தற்செயலானதல்ல ! ஒரு குருடனை,நோண்டியை,ஊமையை ஏற்றுக் கொள்வீர்களா ? என்று கேட்பதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை ! ஊனமுற்ற மனங்களைக் கொண்ட சமூகத்தில் இது தானே எதார்த்தம் ! ஆனாலும் அந்த இளம் சிட்டுகள் "நிச்சயமாக " என்று கூறியதும், தகப்பன்மார்கள் எங்கள் மகளின் மகிழ்ச்சி தான் முக்கியமென்று சொன்னதும்கொஞ்சம் ஆறுதலான ஒன்றாகும் ! கௌரவக்க் கொலைகள் நடக்கும் கலத்தில் இந்த மாற்றமாவது மெலிதாக ,வருகிறதே என்பதல் தான் இடுகையிட்டேன் !வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

சிவகுமாரன் said...

எனக்குள் எழுந்த அதே சங்கடமான கேள்வி . ஆனாலும் வரவேற்கத் தக்க மாற்றம். தொலைக் காட்சியில் கை தூக்கியவர்களில் எத்தனை பேர் நிஜ வாழ்க்கையில் செயல்படுத்துவார்கள் என்பது கேள்விக்குரிய விஷயம். நன்றி அய்யா