Monday, October 20, 2014

பெரியார் பூமியும் ,

பாரதீய ஜனதா கட்சியும் .....!!!



தமிழகத்தில் மதவாத சக்திகளின் தலைமையை கொண்டுள்ள பாரதிய ஜனதாகட்சி  நுழைய சகல வேலைகளையும் செய்து வருகிறது !  

ஆனால்  ஆகப்பெரிய மனிதர் ரஜனி முன்னாள் முதலவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தி தான்  ஊடகங்களின் கவலையாக இருக்கிறது !

டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை அரசிட மிருந்து அம்பானிகள் கைகளுக்கு மாற்றியாகி விட்டது ! அது பற்றி கவலைப்பட ஆளில்லை !

அறிவார்ந்த தமிழ் தொலைக்காட்சிகள் தமிசகத்தில் பாஜக வின்  எதிர்காலம் பற்றி விவாதங்களை நடத்துகிறது !

வேறு அரசியல் இயக்கம் எதுவும் மக்கள்மனதில் புலப்படக்கூடாது என்ற நோக்கம் அதில்   அடங்கியுள்ளது !

இதில் பங்கு பேரும் அரசியல் நோக்கர்கள் பெரும்பாலானவர்கள் தமிசகத்தில் பா.ஜ.க  வலுவாக கால்பதிக்க முடியாது என்றே கருத்துக் கூறுகிறார்கள் !பாஜக தலைவர்களும் பங்கு பெரும் நிகழ்சிகளிவை !  

"இந்த மண் பெரியாரின் மண் ! சுய மரியாதையை  ,சமுக சீர்திருத்தத்தை ,"சனாதன வாழ்க்கை முறையையைஎதிர்க்கும் மனம்"  கொண்ட மண் !  " என்று மார்தட்டி பேசும்போது நமக்கு புல்லரிக்கிறது ! 

பத்தாம்பசலித்தனமான "இந்துத்வா" இங்கு கடைவிரிக்கமுடியாது என்று கூறும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது !

அதேசமயம் இந்த விவாதங்களில் பங்கு பெறும் பா.ஜ.க பிரமுகர்களின் இதழோரத்தில் தெரியும் இகழ்ச்சிப் புன்னகை பயம் கொள்ள வைக்கிறது ! 

அவர்களுடைய mind voice கேட்கவே செய்கிறது !

"விடுங்கப்பா ! பெரியார் -பெரியார் நு ! பெரியார் தான் அண்ணாமலைல படிக்க வச்சார் ! அந்த முரசொலி மாறன் எங்க வாஜ்பாய் கீழ அமைச்சரா இருந்தார் ! அ .தி.மு.க தம்பித்துரை வாஜ்பாய் கீழ சட்ட அமைச்சரு ! அப்பத்தான் சொத்து குவிப்பு வழக்க கர்நாடகாவுக்கு மாத்தினம்! பெரியார் படத்தையும் பொட்டு தான் கட்சி நடத்தறாரு  ராமதாஸ் ! இப்ப எங்க கூட இருக்காரு ! வைகோ ! பாவம் நல்ல மனுஷன் ! ஏதாவது சொன்ன அழுதுடுவாறு  !  அவர் என்ன பெரியாரை மறந்தவரா ? விடுங்கப்பா ! "

பெரியார் என்ற  "பூச்சாண்டியை " காட்டி பா.ஜ.க. வைத்தடுத்துவிட முடியாது !

அது வெறும் பொம்மை என்று அவருடைய சீடர்களே நிரூபித்து விட்டர்கள் !!!

 




2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பெரியார் வளர்த்த மண்ணில், வளர்த்த மண்ணில், மதவாத சக்திகளுக்கு வாய்ப்பே இல்லை ஐயா

சிவகுமாரன் said...

வேதனையாய் இருக்கிறது அய்யா . ஊழல் கறை புரையோடி விட்ட திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மாற்று வேண்டும் . அருமையான சந்தர்ப்பம் இது. ஏன் மற்ற எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் ? யார் தோளில் சவாரி செய்வது என்று இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது கம்யூநிஸ்ட். அம்மாவின் ஊழல் சிறைவாசம் தியாகமாய் பேசப்பட்டு ஓட்டு வங்கியாய் மாறும் வாய்ப்பு பிரகாசமாய் இருக்கிறது. அப்படி நடந்தால் அது கம்யுனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழ் மக்களுக்கு இழைக்கும் பெருந் துரோகம்.