skip to main |
skip to sidebar
இந்த துணை நிறுவனங்கள் ....!!!
"மோகன் பகவத் அவர்களை இந்து மதத்தின் தலைவர்களில் ஒருவராக நான் பார்க்கவில்லை.
இந்து மதத்தின் தலைவர் ஒருவரோ அல்லது எந்த மதத்தின் தலைவரோ பண்டிகை நாட்களில் தொலைக் காட்சிகளில் தம் மக்களை வாழ்த்தவும், தங்களது மேன்மையை அடுத்தவர்களின் மனம் புன்படாத வண்ணம் உரையாற்றவும் அனுமதிப்பதில் தவறு இருப்பதாகவும் படவில்லை.
மதவெறி அமைப்பொன்றின் தலைவரை அழைப்பதுதான் ஆபத்தானதும் கண்டிக்கத் தக்கதும் ஆகும்! "
இரா எட்வின் அவர்கள் நிலைதகவலாக கொடுத்துள்ளார் !
முற்றிலும் இதனை ஆதரிக்கிறேன் !
இதனை ஒட்டி எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் !
நாடக செயற்பாட்டாளரும் ,மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாளருமான "சப்ஃ தார் ஹஷ்மி படு கொலை செய்யப்பட்டார் ! அதனைப்பற்றி செய்தி செகரிக சென்றீருந்தேன் ! டெல்லி நகர செய்லாளர் ராஜேந்திர சிங் அவர்களோடு சென்றிருந்தேன் ! அந்தநிகழ்ச்சியில் அங்கு நிருப ராக வந்திருந் ஜோஷி என்பவர் கொஞ்சம் கூடுதலாக இடது சாரிகளை விமரிசித்தார் !
பா.ஜ.க ஆதரவாளர் ! பேச்சு கடுமையாகவும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் இருந்தது ! "இப்படிப்போனால் இந்தியா சிதறுண்டு விடும் " என்று என் ஆதங்கத்தை கூறினேன் !
"நல்லதாயிற்று ! ஒரு இந்து ராஜ்ஜியத்திற்கு பதிலாக 56 இந்துநாடு என்றால் எங்களுக்கு விருப்பமே " என்றார் !
இது அவ்ர்களின் மனநிலையை குறீக்கிறது !
இதே போல் மற்றொரு சம்பவம் !
நாற்பது வருடங்களுக்கு முன் குமரியில் நடந்தது ! அங்கு மதகலவரம் !
மறைந்த குன்றக்குடி அடிகளார் ஓடோடி சென்று அமைதியை ஏற்ப்படுத்த நடவடிகை எடுத்தார் !
இந்துக்களை தூண்டிவிட்டு கிறிஸ்துவர்களுக்கு எதிராக இந்து முன்னணிதலவர்கள் செயல்பட்டனர் ! அமைதியை நிலைநாட்டிய அடிகளார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் !
"மதம் வேண்டும் ! பெரூவாரியான மக்கள் நம்பிக்கை உள்ளவர்கள் ! அவ்ர்களுக்கு மத ஏற்பாடு தேவை ! ஆனால் மதத்தின் பெயரை சொல்லி இந்த துணை நிறுவனங்கள் தேவை இல்லை ! அவ்ர்கள்மத தலவர்களுக்கும்கட்டுப்பட மாட்டார்கள் ! சட்டங்களுக்கும் கட்டுபட மாட்டார்கள் " என்றார் !
இது பற்றி அடிகளார் "தீக்கதிர் " பத்திரிகையில் புனைபெயரில் கட்டுரைகள் எழுதியுள்ளார் !
போப் ஆண்டவர் கிறிஸ்துவர்களுக்கு வாழ்த்துசொல்வது ,டெல்லி இமாம் புகாரி அவர்கள் "ஈத் " பண்டிகையின் பொது வாழ்த்துவது ,சங்கர மடாதிபதி தீபாவளி வாழ்த்துச் சொல்வது போன்றதல்ல ,மோகன் பகவத் சொல்வது !
திட்டமிட்டு சாமர்த்தியமாக மிகவும் நுணுக்கமாக செயல் படுகிறார்கள் ! மத சார்பற்ற நண்பர்கள் தங்கள் "தான் "என்ற மமதையை கைவிட்டு ஒன்றுபட வேண்டும் !
அதனைக் குலைக்க "கார்பெரேட்டுகள் " முற்சிக்கிறார்கள் !
அதன் வெளிப்பாடு தான் மராட்டிய மாநில தேர்தல் !
0 comments:
Post a Comment