skip to main |
skip to sidebar
பாம்பும் -நல்ல பாம்பும் .....!!!
காட்டிலாகாவில் பணியாற்றும் நணபர் அவர் ! அடிக்கடி சந்திப்போம் ! வனகுடிமக்களின் பாடுகள் பற்றி , பீடி இலையை சேகரிப்பது பற்றி, அதனை வாங்கும் கான்டிராக்டர் கள் பற்றி, நகசலைட்டுகள் செயல்பாடுகள் பற்றி எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வேன்!
வனவிலங்குகள்,பறைவைகள் பற்றி புதிய புதிய செய்திகள் அவரிடம் கிடைக்கும் ! வந்தால் அரைநாளாவது பேசிக்கொண்டிருப்போம் !
வனவிலங்குகளைப் பற்றி பேசும் போது பாம்புகளைப் பற்றி பேச்சு வந்தது நான் எனக்குத்தேரிந்ததை சொல்வேன் !
"உயிரினங்களில் இன விருத்தியில் ஈடுபடும்போது முகத்திற்கு முகம்பார்த்து செயல்படுபவை இரண்டே இரண்டு உயிரினம் தான் ! ஒன்று பாம்புகள் ! இரண்டாவது மனிதன் ! " என்றேன் !
"அதனால் தான் குழந்தைப் பேறு வேண்டி நாகர் சிலை அடித்து பூசை செய்வதும், வழிபடுவதும் நடக்கிறது !"
"பாம்புகள் பல இருக்கின்றன ! எல்லப்பம்புகளும் விஷமுள்ளவை அல்ல !நாலைந்து வகை பாம்புகள்தான்விஷ முள்ளவை ! "என்றார் நண்பர் !
அவர் தொடர்ந்தார் ! "விஷமுள்ள பாம்புகள் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட பரப்பை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன ! அதற்குள் யாரும் வந்தால்மட்டுமே தனக்கு ஆபத்து என்று நினைக்கின்றன ! சுருட்டை,கட்டுவிரியன் ஆகியவை விஷ்முள்ளவை ! அவை தங்கள் ஆளுமைக்குள் சிறு பரப்பையே வைத்துக் கொள்ளும் ! வெளியே சென்று இறை தேடிய பிறகு தங்கள் பரப்பில் வந்திருக்கும் ! வெளியிலிருந்து யார் வந்தாலும் கொத்திவிடும் ! "என்று விளக்கினார் !
"கருநாகம் அப்படி அல்ல " என்று தொடர்ந்தார் ! ' அவை தங்கள் வசம் மிக அதிகமான இடத்தை வைத்துக்கொள்ளும் ! அதற்குள் யார் வந்தாலும் விரட்டிவிட பார்க்கும் ! அதிர்வின் மூலம் வெளியார் வருவது புலப்பட்டால் "உஸ்-உஸ் " என்று சீரும் ! மேய்ந்து கொண்டிருக்கும் கால்நடைகள் தீடீரென்று பாய்ந்து ஒடுவதப்பர்த்திருக்கலாம் ! சீரும் சத்தம்கேட்டு அவை ஓடுகின்றன ! இதற்குப்பிறகும் நெருங்கினால் நாகம் தலையை பூமியிலிருந்து தூக்கி தன இருப்பை உணர்த்தும் ! தன உடலை balance செய்து கொள்ள தன முகத்தை குடை போன்று விரித்து காற்றில்தொங்க வைத்துக் கொள்ளும் ! நாம் பாம்பு படம் எடுக்கிறது என்பது இதைத்தான் ! அப்படியும் எதிரி நகரவில்லை என்றால் நாகம் தன விஷமில்லாத பல்லால்கடிக்கும் ! அதையும் தாண்டி எதிரி நெருங்கினால் வேறு வழியில்லாமல் விஷப்பல்லை பயன்படுத்தும்" என்றார் !
தன்னை தாக்க வரும் எதிரியைக்கூட " எச்சரிக்கை செய்துவிட்டு" தாக்குவதால் தான் அதனை
"நல்ல பாம்பு "
என்று சொல்கிறோம் என்றார் !
3 comments:
நல்ல பாம்பு உண்மையிலேயே
நல்லபாம்புதான் ஐயா
நன்றி
பாம்புகளை நினைத்தால் எனக்கு பயத்தை விட, பரிதாபம் தான் வரும்.
என் கவிலைகள் - என்ற கவிதையில் எழுதி இருக்கிறேன். http://sivakumarankavithaikal.blogspot.in/2012/08/blog-post_30.html
அன்புள்ள ஐயா
நல்ல பாம்பு என்பதில் நல்ல என்பதற்குத் தகுதியான அதாவது பாம்பிற்குரிய தகுதியைப் பெற்றுள்ள பாம்பு என்றாலும். கடிப்பதில் அதுகூட ஒரு நியாயத்தையும் அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிரிக்கு வழங்குகிறது என்பது கற்றுக்கொளள்வேண்டிய பாடம்.
Post a Comment