வென்னீரும் -காபி வாசனையும் ...!!!
இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் மறைந்த தோழர் எம்.ஆர் .வெங்கடராமன் அவர்களின் சகோதரரின் மகன் !
இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் ! கட்சியின் மத்திய தலைமை அவ்ரை மாணவர் இயக்கத்தை கட்டி வளர்க்க தமிழகத்திற்கு அனுப்பியது!மதுரை மண்டையன் ஆசாரி சந்தில் கட்சி அலுவலகத்தில்தங்கி பணியாற்றி வந்தார் ! அங்கு இவரைப்ப்போன்ற இளைஞர்களை கட்டி மேய்க்க குருசாமி நாயனா இருந்தார் !
முழுநேர ஊழியர்களுக்கு கட்சி அலவன்சு கொடுக்கும் ! மாதம் 10 /-ரூ லிருந்து 15 /- ரூ கொடுப்பார்கள் ! அது கொடுப்பதற்குள்"தாவு"தீர்ந்துவிடும் ! 20தேதிக்குமெல்தான் அது பற்றியே பேசுவார்கள் !
எம்.பி எஸ் அவ்ர்களுக்கு அப்படி இல்லை ! அவர் மத்தியகமிட்டி ஊழியர் ! டெல்லியிலிருந்து மாதம் 20/- ரூ 8ம் தேதி மணியார்டர் வந்து விடும் ! அது பற்றி அவரே விவரிக்கிறார் :
" என் சேக்காளி தோழர்கள் அன்று காலையிலேயே குளித்து விடுவார்கள் ! கட்சி ஆபிசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்போம் ! இருப்பே கொள்ளாது ! வாசல எட்டி எட்டி பார்ப்போம் ! 12 மணிக்குபொஸ்ட்மான் வருவார் ! மணியார்டர் வந்து வாங்கியதும் நாங்கள் காணாமல் போய்விடுவோம் ! மண்டையன் ஆசார சந்திலிருந்து போனால் டவுன்ஹால் ரோடு ! அங்கு தேப்பக்குளத்தில் கம்பி வேலி போட்டிருப்பார்கள்அதையும்தாண்டிமேற்கேபோனால் சுல்தானியாஹோட்டல்! பிரியாணி ஒரு பிளேட் 12 அணா ! ஆளுக்கு அரைபிளேட்! சுக்கா வறுவல் 2 அணா ! சாப்பிட்டுவிட்டு சிகரெட்டு ! திருமலை நாயக்கர் பேரன்கள் மாதிரி கம்பீர நடைபோடுவோம் "
"இரவுகையேந்துபவன் ! ஒரு அணாவுக்கு இரண்டு இட்லி ! ஆளுக்கு எட்டு இட்லி விளாசுவோம் ! அன்று எல்லோருக்குமாக நாலு ரூ ஆகும் ! ஒரு நாலைந்து நாள் ஓடும் !"
"அப்புறம் !கிடைச்சா சாப்பாடு!
"இல்லைனா ?"
"பைத்தியமே ! அது தாண்ட கட்சி வாழ்க்கை ! "
( 80 களின் பிற்பகுதியில் கோவையில் த\.மு.எ.ச.இசை பயிற்சிமுகாம் நடத்தியது ! அதை நடத்தி தந்தவர் எம்.பி எஸ் ! அப்போது அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது )
5 comments:
காபி தூளின் வாசனையினை முகர்ந்து கொண்டே, வென்னீர் குடிப்பது
எப்படியெல்லாம் துன்பப்பட்டிருக்கிறார்கள்
அய்யோ... கண்ணீர் வரவழைக்கிறது தோழர்...!
வசதி மிக்க குடும்பம். சர்.சி.வி. ரமனுக்கு உறவினர் ! மாநிலக்கல்லூரியில் படிக்கும் பொதே மாணவரியக்கத்தில் இருந்தவர் !சுதந்திர பொராட்டவீரர் சைபுதீன் கிச்சுலுவின் மகள் ஜைதா கிச்சுலு என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்து மணந்தவர் ! மூன்ரு நாள் அவரொடு இருந்தேன் ! நிறைய சொன்னார் ! கொஞ்சம் தான் எழுதியுள்ளேன் ! "முத்தையா ! இப்படி ஒரு சங்கம் இருப்பது தெரியமல் போய்விட்டதே ! நூறு பசங்கள எங்கிட்ட ஒருமாதம் அனுப்பு ! அருமையான சேர்ந்திசை குழுவை உருவாக்கிதருகிறென்" என்றார் ! 88 எப்ரலில் நடத்தலாம் என்றும் யோசனை கூறினார் ! 88 மார்ச் மாதம் மாரடைப்பில் மறைந்தார்! ராம்ஜி அவர்களே ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.
நல்ல பகிர்வு ஐயா...
வாசத்தை முகர்ந்து கொண்டே வெந்நீர் குடிப்பது என்பது எவ்வளவு கொடுமை...
பசியிலும் பட்டினியிலும் வளர்ந்த இயக்கம்....
என் மாணவப் பருவத்தில் கண்கூடாய்ப் பார்த்தே வளர்ந்தேன்.
ஜீவா அவர்களைப் பற்றியும் விரிவாய் எழுதுங்கள் காஷ்யபன் சார்!
Post a Comment