Saturday, November 22, 2014

முகவரிதான் உங்களுக்கு தெரியுமே !

ஒரு அஞசல் அட்டை போடுங்களேன் ...!!!


அந்தககுழந்தை பிறந்த உடனேயே அவர்கள் குலவழக்கப்படி அவளுக்கு மாப்பிளளையை தீர்மானித்து விட்டர்கள் ! குழந்தைத் திருமணம் ! பதினைந்து வயதில் சடங்கு ! நாள் குறித்து கணவன் வீட்டிற்கு போனாள் !

மூன்று  மாதம்கணவரோடு வாழ்ந்தாள் ! 

பின்னர் தாய்வீடு வந்தாள் ! 

கணவர் அழைத்து செல்வார் என்று காத்திருந்தார் ! வரவில்லை !

வேலைக்கு செல்ல விரும்பினார் ! கணவரால் கைவிடப்பட்டவருக்கு கலக்டர் வேலையா கிடைக்கும் ! பள்ளிப் படிப்பு  தொடர்ந்தது! ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியரானார் !

என்றாவது ஒரு நாள் கணவர் வருவார் ! என்ற நினைப்பிலேயே வாழ்ந்தார் !

கணவரப்பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் மனம் முகிழ்ந்து போவர் ! அவர் நன்றாக வாழ கடவுளை வேண்டுவார் ! காலம் ஓடிக்கொண்டிருந்தது !

ஊரில், அண்டை அசலில் என்ன பேசுவார்கள் என்று அவர் சிந்திக்க வில்லை ! மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கருதவில்லை ! பெண் என்பதால் பாதுகாப்பிற்கு சகோதரன் குடும்பத்தோடு வாழ்ந்தார் ! 

ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வும் பெற்று விட்டார் ! 

Zee Media Bereu என்ற நிறுவனத்திடம் " வோ லேனே ஆயோந்தோ மை தயார்ஹூம் " ( அவர் என்னை அழைத்தால் நான் தயாராகஇருக்கிறேன் ) என்று அந்த அம்மையார் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன!

திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆகிவிட்டன ! 

கடைசிகாலத்தில் கணவனோடு வாழ விரும்பும் அந்த மூதாட்டியின் ஆசை நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன் ! 

நீங்களும் விரும்புவீர்கள் என்று எனக்கு தெரியும் !

அவர் கணவருக்கு ஒரு அஞசல் போடுங்களேன் !

அவருடைய முகவரி  ........

உங்களுக்குத்தான் தெரியுமே !!!     




  

2 comments:

Unknown said...

போடும் கடிதம் அவரிடம் போய்ச் சேரும்வரை, இப்போது கிடைத்திருக்கும் இந்த புதிய முகவரி நிலைத்திருக்குமா என்ற கவலைதான் ஐயா

சிவகுமாரன் said...

சிரிப்புத் தான் வருகிறது.