நூல் விமரிசனம் .
"அம்பாரம்"
(ஆசிரியர் : க.லெனின் )
எழில் மீடியா வெளியீடு,
திருப்பூர். விலை ரூ 50 /
நான் தமிழகத்தின் தெற்கு மாவட்டத்துக்காரன் ! எங்கள் ஊரில் களத்து மேட்டில் அறுவை முடிந்து "சூட்டடித்த"பின் நெல்லை குமித்து வத்திருப்பார்கள் ! அதனை "அம்பாரம் "என்போம் ! கோடை காலங்களில் உளுந்து ஊடுபயிராகவும் ,சில சமயங்களில் மிளகாயும் குமித்து வைத்து "அம்பாரம் அம்பாரமாக " விற்போம் !
லெனின் அவர்கள் தன் நினைவுகளை , அனுபவங்களை 17 கட்டுரைகளாக "அம்பாரம் : என்ற நூலாக தந்திருக்கிறார் !
இவை கட்டுரைகளா ? சிறு கதைகாளா ? நினைவோடைகளா ? பயணக்கட்டுரைகளா ? குறுநாவலா?
எல்லமும் தான் !
ஒர் தந்தை தன் மகள்மெல் உள்ள பாசத்தை , பிரியத்தை, இப்படியெல்லாம் சொல்ல முடியுமா? லெனின் சொல்லி இருக்கிறார் !
தன் தாயின் மீது தான் கொண்ட மதிப்பை,மரியாதையை. அன்பை கொட்டி எழுதியிருக்கிறார் !
ஒரு "டப்பர்வேர் ' பாத்திரத்தில் மிர்னி "தயிரு வேணுமா? தயிரு " என்று அந்த சின்ன குட்டி பெண்
வருகிறாள் ! தான் சிறுவயதில் ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் தயிர் விற்றது நினைவு தட்ட ஆசிரியர் கண் கலங்குகிறார் !
சோனாகாச்சி யில் திருடன் பெண்குழந்தையை களவாண்டு ஓடுகிறான் ! அவனைப் பிடித்து குழந்தயை காப்பாற்றுகிறார்கள் ! இதனைப் பார்த்த ஆசிரியர் தன் காருக்கு ஓடுகிறார் ! மடிக்கணீணியை எடுத்து இரண்டு நாள் கழித்து வாங்கிய ஃப்ளைட் டிக்கட்டை கான்சல் செய்து விட்டு மறுநாள் காலைஃபளைட்டுக்கு டிக்கட் வாங்குகிறார் ! வாசகனின் மனம் ரத்தம் வர கதறுகிறது !
லெனினின் தாய் நாகலட்சுமி அம்மையார் ! எப்பெர்ப்ட்ட சித்தரிப்பு ! கேரளாக்கார வியாபாரியிடம் மாட்டை விற்பதில் சம்மதம் இல்லை !எனினும் வேறு வழியில்லை ! மாடு கேரளா பொகும் வழியில் இவர்கள் தோட்டம் வந்ததும் போக மறுக்கிறது ! இரண்டு உயிர்கள் சங்கமிக்குமிடமாக அது மாறுகிறது 1
நூல் முழுவதும் பின்னணி இசையாக இரண்டு குரல் கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன ! ஒன்று அன்பு மகள் மிர்னி ! இரண்டாவது தாயார் நாகலட்சுமி அவர்களின் குரல் !
மூன்று தலைமுறையாக மார்க்ஸிஸ்டுகள் ! மிர்னிய சேர்த்தால் நான்காவது தலமுறை !
இறப்பு எல்லருக்கும் உண்டு ! "தீக்கதிர்" பத்திரிகையில் வரும் அஞ்சலி செய்தியை மிர்னி
படித்து காட்டுவாள் !
நூறு ஆண்டுகள் கழித்து !
வாழ்த்துக்களுடன் !
1 comments:
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
நன்றி
Post a Comment