"நூல் விமரிசனம் "
"சவுண்ட் சிட்டியும்
சைலண்ட் கோட்டூம் "
ஆசிரியர் : DR. அ. உமர் ஃபரூக் .
எதிர் வெளியீடு,
பொள்ளாச்சி -642002.
விலை : ரூ 70 /-
காமுத்துரை அவர்களின் நூல் அறிமுக விழாவுக்கு தேனி சென்றிருந்தேன் ! "பைபாஸ் சாலையில் உள்ள மணடபத்தில் நடந்தது ! இருபது வருடமாகியிருக்கும் ! பால்வடியும் முகம் கொண்ட சிறுவன் ( மன்னிக்கவும் ) உமர் ஃபரூக் என்று அறிமுகப்படுத்தினார்கள் ! அவர் இன்று டாக்டர்.ஃபரூக் ஆகியுள்ளார் ! அது மட்டுமல்ல ! மருத்துவம் சம்மந்தமாக முப்பதுக்கும் மெற்பட்ட நூலகளை எழுதியுள்ளார் ! அவர் எழுதிய நுல்தான் "சவுண்ட் சிட்டியும் ,சைலண்ட் கோட்டும் " !
ஏமான் தெசத்தின் நடுவீதியில் துவங்குகிறது ! ஏமான் தேசம் கற்பனயானது தான் என்றாலும் நம்மல் அந்த தேசத்தை அடியாளம் கண்டு கொள்ள முடிகிறது !
இது நாவலா ? கட்டுரையா ? எல்லாமும் தான் ! இதன் இலக்கிய வகைமையை வாசகனையே முடிவு செய்து கொள்ளும்படி ஆசிரியர் கேட்டூக் கொள்கிறார் !
இது பின் நவீனத்துவம் ( Post mOdernism ) சார்ந்ததா? அப்படியும் வகைப்படுத்தலாம் !
கோணக்கழுத்தர்கள் நாடு,பேசோஸேபியன்கள்,கட்டயக் குளியல்திட்டம், என்ன அற்புதமான சித்தரிப்பு !
இரண்டு தளத்தில் நூல் பயணம் செய்கிறது ! ஒன்று கற்பனையானது ! மற்றொன்று நம் முன்னே நடப்பது ! இரண்டையும் இணைத்துள்ள பாங்கு தான் ஃபரூக் அவர்களீன் அபரிமிதமான திறமை
மிகச்சிறந்த ஓவியன் மிகக்கவனமாக ,நுணுக்கமாக வறைந்த ஒவியம் போன்றது ! கொஞ்சம் கவனம் சிதறினாலும் கந்தலாகிவிடும் வாய்ப்பு அதிகம் ! ஃபரூக் வெற்றி கரமாக செய்துள்ளார் !
சராசரி வாசகன் "என்னய்யா சொல்றாரு ? " என்று அங்கலாய்க்க வாய்ப்புள்ளது !
நூல் முழுவதும் ஃபரூக் அவர்களின் intellectual brilliance வெளிப்படுகிறது !
இதன் பலமும் அது தான் ! பலவீனமும் அது தான் !
வாழ்த்துக்கள் DR உமர் ஃப்ரூக் அவர்களே !.
7 comments:
நன்றி ஐயா
அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
நலம் தானா சார்!
உங்கள் விமரிசனம் புத்தகத்தை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. கண்ணதாசன் கூட ஒரு கற்பனை தேசத்தை(பேர் கூட ஏமான் தானோ?)
உருவகப்படுத்தி எழுதியிருந்ததை நினைவு கூர்கிறேன்.
யாவும் சுகம் தானே? வானவில்லுக்கும் வாருங்கள். மீண்டும் சில பதிவுகளோடு இயங்க ஆரம்பித்துவிட்டேன்.
35 வருடம் உதவி ஆசிரியராக இருந்தேன் என்கிறீர்கள். வரிக்கு வரி தேவையில்லாமல் எதற்கு ஆச்சரியக்குறி போடுகிறீர்கள்?
சரவணன்
நான் ஓய்வு பெரும் வரை கணினி வரவில்லை ! தமிழ் ஆங்கிலம் தட்டச்சு தெரியாது ! கையால் எழுதினென் ! மகா மொசமான கையெழுத்து ! அச்சுகோக்கும் தோழர்கள் ஏன் எழுத்தை 'கல்வெட்டு" "பிரம்மி " எழுத்து என்று வர்ணிப்பார்கள் ! கணினி யை எதிர்த்து நடந்த எல் ஐ. சி போராட்டத்தில் முண்ணனியில் நின்றவன் ! 80 வயதை நெருங்குகிறென் ! என்ன செய்ய ---காஸ்யபன்.
/// வரிக்கு வரி தேவையில்லாமல் எதற்கு ஆச்சரியக்குறி போடுகிறீர்கள்? ///
இதற்கும் நீங்கள் சொல்லியிருக்கும் பதிலுக்கும் துளி சம்பந்தம் இருக்கிறதா? கணிப்பொறியோ, தட்டச்சோ, கைப்பட எழுதுவதோ எதுவாக இருந்தாலும் நிறுத்தக்குறிகள் பயன்பாட்டுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
அருமையான மெதுவடையை செய்து பரிமாறியுள்ளார் நண்பர் ஃபரூக் ! சுவைத்து அனுபவியுங்கள் என்கிறேன் நான் ! வடைக்கு துளை சரியில்லை என்கிறீர்கள் சரவணன் ! என்ன செய்ய ! நன்றி !---காஸ்யபன்.
ஃபரூக் பரிமாறியுள்ள வடை (அவரது புத்தகம்) பற்றி நான் எங்கே ஐயா குறிப்பிட்டிருக்கிறேன்? உங்கள் பதிவுகளில் ஏன் வரிக்கு வரி ஆச்சரியக்குறி போடுகிறீர்கள், 30 வருடம் பத்திரிகையில் பணியாற்றியபோது நிறுத்தக்குறிகள் பயன்பாடு பற்றிக் கற்றுக்கொண்டிருந்திருப்பீர்கள்தானே என்கிறேன். என் கேள்வியைத் திரிக்கிறீர்களே தவிர இன்னும் பதில் இல்லையே?
Post a Comment