கருப்புக் கொடி
காட்டினார்கள்.....!!!
காங்கிரஸ் காரர்கள் மட்டுமல்ல இந்திய தேசமே கருப்புக் கொடி காட்டியது. கருப்புக்கொடியை காட்டியது மின்றி "சைமன் கமிஷனே திரும்பிப்போ" என்று பிரிட்டிஷ் இந்தியாவே அதிர முழக்கமிட்டது.!
ஆம் ! 1928ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பது பற்றி ஆலோசிக்க , இந்தியர்களின் தகுதி என்ன என்பதை ஆராய பிரிட்டிஷ் அரசு சைமன் கமிஷ்னை அனுப்பியது. எங்களுக்குக் ஆளும் தகுதி உண்டா என்று ஆராய நீ யார் ? என்று கொதித்தெழுந்த கண்டன ஆர்ப்பட்டங்கள்.கருப்புக்கொடி என்று சீறிப்பாய்ந்தது.இந்தியா.
லாகூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தலமையில் நடந்தது . போலீசார் கடுமையான தடியடி நடத்தினார்கள். அவர்கள குறி லாலா லஜாபதி தான் . அவர் மண்டையை உடைத்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்னுயிர் ஈத்தார்.
மக்கள் ஆவேசம் கூடியது. உத்திர பிரதேசத்தின் வழியாக கல்கத்தா போக அரசு தயங்கியது.
பனாரஸ் இந்து பல்கலைகழக மாணவர்கள் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்திருந்தார்கள். அவர்களின் தலைவன் கிராமம் கிராமமாக சென்று மக்களைத் தீரட்டி தயார் செய்தான். அரசு மானவர்களின் நடவ்டிக்கையை மொப்பம் பிடித்தது.
சைமன் கமிஷனை சாலை வழியாக கொண்டு செல்லாமல் கங்கை ஆற்றின் நடுவே படகில் கொண்டுசெல்ல முடிவெடுத்தது. மாணவர்கள் திகைத்தனர். ஆனால் மாணவர் தலைவன் திட்டத்தஒ மாற்றினான்.
ஆற்றின் இருகரையிலும் மக்கள் நிற்க வேணும். ஒரு படகில் மாணவ்ர்கள் சிலர் மின்பிடிப்பவர்கள் போல் செல்ல வேண்டும். இடுப்பில் கொவணம் கட்டி மேலே கருப்பு துண்டு கட்டவேண்டும். நடு ஆற்றில் மீன்பிடிப்பது போல்.பாசங்கு செய்து கொண்டே சைமனின் அலங்கரிக்கப்பட்ட படகு நெருங்கியதும் துண்டை அவிழ்த்து கருப்புக் கொடியாக காட்டி கொண்டே 'சைமன் கமிஷனே திரும்பிப் போ" என்று கோஷ மிட வேண்டும்.
ஆயுதம் தாங்கிய போலீசார் சைமனின் பாதுகாப்பிற்கு இருப்பார்கள் ! சுட்டுவிடும் வாய்ப்பு அதிகம். அதனல் மாணவர்கள் ஐவரும் கோஷம் போட்டுக்கொண்டே ஆற்றில் குதித்து தப்பி விட வேண்டும்.இந்த ஆபத்தான ஏற்பாட்டிற்கு மாணவர்கள் தலைவனும் மற்றும் நான்கு பேரும் தயாரானார்கள்.
இருகரையிலும் கிராமத்து மக்கள் கூட்டம் ! மானவர்களீன் படகை சைமனின் படகு நெருங்கியது . மாணவர் தலைவன் சமிக்ஞை செய்தான். " அரைதுண்டை அவிழ்த்து கருப்புக்கொடி காட்டிக் கொண்டே "சைமன் கமிஷனே திரும்பிப் போ" என்று கோஷம் மிட்டனர் !
இருகரையிலும் கூடியிருந்த மக்கள் இந்தியாவே அதிர பதில் கோஷம் இட்டனர்.
மாணவர் தலவன் மீண்டு சமிக்ஞை செய்ய அவர்கள் ஆற்றில் குதித்து தப்பினர் .
அந்த மாணவர் தலைவனை அவர்கள் "மதறாஸி -மதறாஸி " என்று அழைப்பார்கள்.
அவன் பெயர் பீ.ராமமூர்த்தி !!!
1 comments:
அறியாத தகவல் ஐயா
நன்றி
Post a Comment