Monday, October 26, 2015

(இது ஒரு மீள் பதிவு )







தோழர் சீத்தாராமனும் ,
நானும்........!!!

 1975 ம் ஆண்டு வாக்கில் தொழார் சீத்தாராமனை சந்தித்தேன் ! மேற்கு வங்கத்தில் வாழ்ந்து வரும் தமிழர்! மார்க்சீய சிந்தனையாளர் ! மே.வங்கத்தில் தணிக்கை அதிகாரியாக அவருடைய உறவினர் பணியாற்றிவந்தார் !

தீக்கதிர் அலுவலகத்தில் தங்கினார் !அவரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றேன் ! நாங்கள் கோவில் வாசலை அடையும் பொது காலை 7 மணி இருக்கும் ! "நடையானை " கொண்டு பொய் வைக்க சென்றேன் ! தோழர் அதுவரை கோவில்வாசலிலேயெ நின்றார் !

"வாருங்கள் " என்று கூறி  கோவிலுக்குள் போக முயன்றேன் !

"இருங்கள் தோழர்" கோவில் வாசலில் நின்று கும்பிட்டு விட்டு போகிறவர்களை பார்த்துக்கொண்டு நின்றார் !

காய்கறி மார்க்கெட்டிலிருந்து கூடை நிறைய காய்கறியோடு ஒரு அம்மையார் கோவிலுக்கு நேர் நின்றார் ! "ஆத்தா! இன்னிக்கு படி அளந்துடு தாயே !" என்று வணங்கி விட்டு நடையான மாட்டிக் கொண்டு சென்றார் ! "நீ  தான  ஆத்தா ! வெயில கூடைய தூக்கிட்டு விக்க போற ! மினாட்சியா  அலையப் பொறா !" என்று நக்கலா சொன்னேன் ! அந்த அம்மா திரும்பவில்ல ! 20-25 கிலோ காய்கறி கூடைகனம் ! " எம்பொழப்பு ! அப்படி ! நல்ல இரு " என்று சொல்லிக்கொண்டே சென்றார் !

தொழார் சித்தாராமன் கிளம்பினார் ! நாங்கள் கொடிமரம் பக்கமாக நடந்தோம் ! பலிபீடத்தின் அருகில் தரையில் விழுந்து நமஸ்கரிப்பார்கள்

வயதான அம்மையார் தன மகளொடு விழுந்து வணங்கினார் ! " மீனாட்சி! லோக மாதா !  தகப்ப இல்லா பொண்ணு அம்மா ! சாய தோள்  இல்லை ! நீதான் ஒருவழி காட்டணும் ! " என்று இருகைகளையும் நீட்டி வேண்டிக் கொண்டார் !

அந்தப்பெண் கூனி குறுகி அருகில்நின்று கொண்டிருந்தார் ! இளப்பமாக பார்த்தேன் !

கோவிலுக்குள் சென்றோம் அப்போதெல்லாம் வரிசை,கிடையாது ! மள மள வென்று படியேறி உள்ளெ சென்றோம் !  சொக்கநாதர் கோவிலையும் பார்த்தோம் !

வயதான பெரியவர் அமர்ந்திருந்தார் ! அவர்    அருகில்  அவர் மனைவி   கண்பார்வை  அற்றவர் ! சீத்தராமன் அவர் அருகில் சென்றார் ! தன பையிலிருந்து நூறு ரூபாய் தாள எடுத்து அந்த பெரியவர் கையில்கொடுத்தார் ! பெரியவர் நிமிர்ந்து பார்த்தார் ! அவர் வாய் கோணியது ! வாங்கிக் கொண்டார் !

நாங்கள் அம்மன் கோவில் வழியாக திரும்பினோம் ! "கொஞ்சம் உக்கருவோமெ " என்றார் ! தூண்  ஓரமாக உக்கார்ந்தோம் !

"நீங்கள் அந்த பெரியவருக்கு நுறு ரூ கொடுத்திருக்கக் கூடாது ! "

"ஏன்?"

"நாமே நம் சகமனிதர்களை பிச்சைக்காரர்களாக்குகிறோம் "

"நாம் கொடுக்கவில்ல என்றால் யார் கொடுப்பார்கள் ? "

"சொக்கநாதன் தயவில் தன நூறு  ரூ  கிடைத்ததாக நினைப்பார் !"

"நினைக்கட்டுமே "

"அது மூடத்தனம் இல்லையா ?"

"எது ?காய்கறி விற்கும் அம்மையாருக்கு பிழைக்க வழி செய்ய மாட்டோம் ! முதிர்கன்னியாய்  வைத்துக்கொண்டு தன்னந்தனியாக வாழும் பெண்ணிருக்கு பாது காப்பு கொடுக்க மாட்டோம் ! கண் புறை நோயாளிக்கு மருத்துவம் கிடையாது ! ஏதுமற்ற நிலையில் அவர்கள் கோவிலை நாடினால் அது மூட நமபிக்கையா ? "

தோழர் சீத்தராமன் எனக்கு எதையோ புரிய வைக்க முயல்கிறார் !

"இந்த பாவப்பட்ட மக்கள் நம்பின்னால் நிற்க வேண்டியவர்கள் ! அவர்களை தேவை இல்லாமல் வெறுக்கிறோம் ! மற்றவர்களிடம் தள்ளி விடுகிறோம் !கோவிலுக்கு போவது மட்டும் ஆத்திகம் அல்ல ! போகாதவர்கள் எல்லாம் நாத்திகர்களல்ல ! கோடிக்கணக்கான மக்கள் இந்த நாட்டில் ஆத்திகர்கள் ! அவர்களை என்று நம்பக்கம் கொண்டுவரப்போகிறோம் !"

சீத்தாரமன் புறப்பட்டார் !

0 comments: