Saturday, October 24, 2015

"Ilaco building vigil "




"இலாகோ கட்டிட பாதுகாப்பும் "

எல்.ஐ.சி சங்க ஊழியர்களூம்......!!!



மதிப்பிற்குறிய எஸ்.எ .பி அவ்ர்கள் மேற்கு வங்கத்தில் நடந்த "துர்கா பூஜை " பற்றியும் அதனை மக்களை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி  பயன் படுத்திக்கொண்டதையும் பற்றி அழகாக குறிப்பிட்டிருந்தார்கள்.

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைமை  கணிணியை எதிர்த்த போராட்டத்தில் இதெ யுக்தியை பயன்படுத்தியது நினவு  தட்டியது.

60 ம் ஆண்டுகளின்  முற்பகுதியில் எல்.ஐ.சி   நிர்வாகம்  "மறு சீரமைப்பு "            -reorganization  என்ற திட்டத்தை கொண்டுவந்தது . அதன் நோக்கம் எல்.ஐ.சி யை பிரித்து கணிணியை புகுத்துவதாகும். ஊழியர்களுக்கோ சங்கத்திற்கோ தெரிவிக்காமல் ரகசியமாக  ஆரம்பித்தார்கள்

1965ம் ஆண்டு பாகிஸ்தான்"கட்ச் "தீவு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தது.இந்தியா இதற்கு சரியான பதிலடி கொடுத்ததுபாகிஸ்தான் ராணுவத்தை விரட்டி அடித்து,"லாகூருக்கு "  சிலகிஂமி வரை பிடித்துக் கொண்டது> உக்கிரமா னா சண்டையில் பாகிஸ்தான் எதையும் செய்யும் ! அதனிடம் அமெரிக்க கொடுத்தf 16 ரக விமானங்களிருப்பதால் இந்திய நகரங்களை  தாக்கும் என்று ராணுவம் கருதியது.

குறிப்பாக பம்பாய் நகரம் தாக்கப்படலாம் என்று கருதியது. அதனால் இரவு முழுவதும் black out பண்ண முடிவு செய்யப்பட்டது தெருத்தெருவாக  விடுகளிலும்  ,தெருக்களிலும் விளக்குகள் எரியாமல் பார்க்க தோண்டர்கள் நியமிக்கப்பட்டனர் நகரமே இரவு நேரத்தில் கறுப்புத்திரை போர்த்தியதுபோலானது.

மனச்சாட்சியற்ற ஏல ஐ சி நிர்வாகம் தன்னுடைய "கணினி 'மயமாக்கும் திட்டத்தை இந்த நேரத்தில் நிறைவேற்ற முடிவு செய்ததுஅரசாங்கத்தின் உதவியோடு இரவோடு இரவாக கணினியை மத்திய அ லுவலகத்தில் நிறுவியது  .

ஏற்கனவே ஒன்று வந்து விட்டதால் ஊழியர்களின் எதிர்ப்பு கூர்மழுங்கிவிடும் 
என்று கருதி மாற்றொன்றை  கல்கத்தாவில் நிறுவ திட்டமிட்டது.
 
இது பற்றி மத்திய அரசோடு நடந்த பேச்சு வார்த்தையில் அப்போது இருந்த chairman   M .R . Bide என்பவர்   computer is on the high seas . it will  be installed in ilaco building No power can stop it " என்று கொக்கரித்தார்.

லக்ஷ்மி இன்சூரன்ஸ் கட்டிடமாகிய " இலாகோ "  நாலாவது மாடியில் வைக்க முடிவாகியது. அதன மேலே கொண்டு போக அந்த கட்டிடத்தின் அருகில் இருந்த முட்டு சந்தில்ஹைடிராலிக் இயந்திரத்தை நிறுவி னார்கள்.

சங்கத்தலமை நிலைமையை விவாதிதது..  முட்டுச் சநதில் அருகில உள்ள மக்களின் உதவியோடு அந்த கட்டிடத்தினை  ஒட்டி " துர்க்கை அம்மன் சிலையை " வைத்து  பந்தல் போட்டு துர்கா பூஜையை கொண்டாடியது> பூஜை ஒருமாத காலம் நடக்கும் என்றும் அறிவித்தது.

இரவு நேரங்களில் பாதுகாப்பு அளிக்க ஊழியர்கள் முறைவைத்து பந்தளில் படுக்க ஏற்பாடு செய்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக தினம் ஒரு அரசியல்தலைவர் பூஜையை பார்க்க வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. 

அப்போது முதலமைச்சராயிருந்த  அஜாய் குமார்  முகர்ஜி வந்தார்.
துணை முதல்வராயிருந்த "ஜோதிபாசு வந்தார் . தினம் ஒரு அமைச்சர் கலந்து கொண்டதால் நிர்வாகத்தால் எதுவும் செய்யமுடியவில்லை.

அப்போது தோழர் பி ராமமூர்த்தி அவர்களை பம்பாய்  அழைத்து  சென்ற    நிர்வாகம் நிறுவிய கம்யூட்டரைக்காட்டி   சங்கத்தை ஏற்றுக்கொள்ளும் படி   ஆலோசனை கூரும் படி கேட்டுக் கொண்டது .அவர் சங்கத்தோடு நீங்கள் பேசுங்களேன் என்று கூறிவிட்டார்.

கப்பலில் வந்து இறங்கிய பிரும்மாண்டமான கணிணி Fort william  கோட்டையில் துருப்பிடிக ஆரம்பிக்க எல்.ஐ.சி நிர்வாகம் அதனை கப்பல்படைக்கு விற்றது.

அன்று 40000 உழியர்கள் நடத்திய  போராட்டத்தால் இன்று  ஒருலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்டுள்ளது எல்>ஐ>சி>

ilaaco vigil என்பது வரலாறாகியது.


 











0 comments: