Tuesday, October 06, 2015

வாஜ்பாய் ,காந்தி  மற்றும் 

சோசலிசம் ............!!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டபோது.,Gandhian socialism என்று பதிலளித்தார்.

இது இந்துத்வா வாதிகள் காந்தியக் கொன்றபிறகு  நடந்தது. அவருக்கு அன்று அப்படி ஒரு நிர்பந்தம் ஏற்பட்டிருக்கலாம்.

இன்று அரைடிரவுசர்கள் கூட" பசுவைக் கொல்லக்கூடாது " என்று காந்தியே சொல்லி இருக்கிறார் என்று அடித்து விடுகிறார்கள். எதையுமே சம்மந்த சம்மந்தமிலாமலேடுத்து விடுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை .

காந்தி சொன்னார் என்பது உண்மை . இவர்கள் அந்த உண்மையின் பகுதியைமட்டும் சொல்வார்கள்.

காந்தி "பொருளாதாரகாரணங்களை கொண்டு அதனை  சொன்னார்.

"நிலம்பார்த்த பூமி இது. கடுமையாக உழைக்கும்விவசாயிகளைக் கொண்ட நாடு .அவர்களின் உறுதுணையாக உழைப்பைக் கொடுப்பது காளைகள்  .அவற்றை பாதுகாக்க வேண்டும் .காளைகளுக்கு துணை வேண்டும்.அதனால் பசுவையும் பாது காக்கவேண்டும் " என்றார்.

"நான் மனிதனை மனிதன் நேசிக்க  அன்புகாட்ட வேண்டும் என்பவன் .அஹிம்சையின் உச்சம் மனிதனையும் தாண்டி பிற உயி ர்களிடம் அன்பு காட்டுவது ஆகும்."

"அதற்காக மாமிசமுண்பவர்கள வெறுக்க வேண்டியதில்லை .அவர்களிடம் பேசி அவர்களை சைவ உணவுக்கு மாற்றலாம். அவர்கள் மாறவில்லை என்றால் அது அவர்களுடைய தவறு அல்ல. தவ்று நம்முடையது. அவர்கள்மாறும் வரை பேசவேண்டியது நம்கடமை "என்றார்.

காந்தியைவிட காந்தியத்தில் நம்பிக்கை உள்ளவர்" கான் அப்துல் காபர்கான் ."எல்லைபுற் காந்தி" என்று அழைக்கப் பெற்றவர்.

அவர் ஒரு முறை காந்தியை சந்திக்க சேவாகிராமம் வந்திருந்தார் அவருடன் அவருடைய பேரக்குழந்தகளும் வந்திருந்தனர்.ஆசிரமத்தில் சைவ உணவுதான் உண்டு. அண்ணல் காந்தி அடிகள் வெளியிலிருந்து மாமிசம் வாங்கி வரச்செய் து,குழந்தைகளுக்கு கொடுக்கச் செய்தார்'பாவம் !குழந்தகள்.அவர்களை பட்டினி போடக்கூடாது"என்று விளக்கினார்.


காந்தியை கொன்றவர்கள் காந்தீயம் போசும் காலமாகிவிட்டது !!!

0 comments: