"மலரும் சருகும் "
செல்வராஜ் ....!!!
எழுபதாம் ஆண்டுகளில் நவீனதமிழ் இலக்கியத்தில் சொசலிச யதார்த்தவாத படைப்புகள் என்றால் அது என்போன்றோர்களுக்கு "மலரும் சருகும் " மற்றும் "பஞ்சும் பசியும்" ஆகிய படைப்புகளிலிருந்து ஆரம்பமாகிறது.
அப்போதெல்லாம் செல்வராஜ் என்றால் எங்களுக்கு தெரியாது. "மலரும் சருகும் செல்வராஜ் என்றால் தான் அடையாளப்படுத்துவோம்.
அதுமட்டுமல்ல.தலித்துகளை மையமாக முதன் முதலில் வைத்து படைத்தவர் . செல்வராஜ்தான் .
வானம் பார்த்த பூமியான கயத்தாறு பகுதியில் வாழ்ந்து செத்துக்கொண்டிருந்த அந்த தலித் மக்களை ஏமாற்றி மேற்கு மலைதேயிலை தோட்ட கூலி களாக்கிய காலத்தை , தோட்டத்தோழிலாளர்களின் பாடுகளை அவர்களில் ஒருவராக இருந்து பார்த்தவர் செல்வராஜ். அதனை 70ம் ஆண்டுகளில்"தேநீர் " என்ற ஒப்பற்ற நாவலாக எழுதியாரும் செல்வராஜ்தான்.
டாக்டர் கனகசபாபதியும்.டாக்டர் சிவத்தம்பியும் மிகவும் பாராட்டிய படைப்புகள் ஆகும் அவை..
செல்வராஜ் எழுதிய நாடகங்களும் முக்கியமானவைகளாகும். ரயில்வே தொழிலாளர்களின் மாநாடு திருச்சி பொன்மலையில் நடந்தது (60 களில்) .
அதில் அவர் எழுதிய நாடகம் " பாட்டுமுடியு முன்னே " இன்றும் பேசப்படும் ஒன்றாகும்..இடது சாரிகளின் நாடகங்கள்ளில் அப்போதேல்லாம் திரைப்பட நடிகர்கள் டி கே பாலசந்தர்,என்.என்.கண்ணப்பா, விராச்சாமி ,பிரபாகர்,காந்திமதி ஆகியோர் நடிப்பார்கள்.
அவருடைய "யுக சங்கமம் " என்ற நாடகமும் முக்கியமானதாகும். சமிபத்தில் அவரோடு தொலைபேசியில் உரையாடியபோது அது பற்றி மிகவும்பரவசத்தொடு நினைவு கூர்ந்தார் .
"சென்னை மியுசியம் அரங்கில் அரங்கேற்றம் . எஸ்.வி .சகஸ்ரநாமம், டி கே.சண்முகம் . சௌந்தரா கைலாசம் ஆகியோர் வந்திருந்தனர். நாடகம் முடிந்ததும் டிகே எஸ் மேடைக்கு ஓடிவந்து என்னை கட்டிதழுவிக்கொண்டார். சங்கித நாடக அகடமியின் விருதினை பலத்த எதிர்பிக்கிடையில் நான் ஒரு இடதுசாரி என்று தெரிந்தும் சௌந்தரா கைலாசம் அளித்தார் நாடகத்தில் கதா நாயகனாக என்.என்கன்னப்பா நடித்தார் கதாநாயகியாக தமிசகத்தின்மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி அவர்களின் துணைவியார் தர்மாம்பாள் என்ற ராஜாத்தி அவர்கள் நடித்தார்கள் " என்றார் செல்வராஜ்.
திண்டுக்கல் நகரில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம். பாதுகாப்பற்ற தொழிற் சூழலில் தலித் மக்கள் அதில் உழைத்து வந்தனர்.அவர்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு ஒரு சங்கம் அமைக்க இரண்டு பேர் வந்தனர்அவர்களுடனேயே தங்கி உண்டு உறங்கி அவர்களை தைரியப்படுத்தி சங்கம் அமைத்தவர் வக்கீல் எ பாலசப்பிரமணியம் ஆவார்
பின் நாளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகவும் ,அரசியல் தலைக்குழு உறுப்பினராகவும் உயர்ந்தவர்.
மற்றோருவர் மதன கோபால் என்ற இளைஞர் . அன்றைய காங்கிரஸ் அரசு மதன கோபாலை கைது செய்து, வாயில் செருப்பை கொடுத்து அடித்து தெருதெருவாக இழுத்துச்சென்றதை பெரியவர்கள் இன்றும் நினைவு கூறுவார்கள்.
இந்த இருவரையும் கதாநாயகனாக்கி செல்வராஜ் எழுதிய நாவல் தான் "தோல் " என்ற படைப்பாகும். சாகித்திய அகாதமி இதற்க விருது அளிக்க அதனை ஏற்றுக்கொண்டு செல்வராஜ் அகதமிக்கு பெருமை சேர்த்தார்.
சாகித்திய அகாதமி விருதினை கர்நாடக எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனமாக பல எழுத்தாளர்கள் திருப்பி கொடுத்து வருகிறார்கள்.
இந்த எதிர்ப்பாளர்கள் பக்கம் நாம் நிற்போம்.
அதே சமயம் தமிகத்திலிருந்து அகாதமி விருது பெற்றவர்கள் எவரும் இப்படி செய்வில்லையே என்று அவர்களை தூற்றாமலிருப்போம்.
அவர்கள் "பஞ்சமாபாதகங்கள் " எதையும் செய்து விடவில்லை என்பதால்.
0 comments:
Post a Comment