Thursday, October 22, 2015

என்னைப  பொறுத்தவரை (சிவாஜியைவிட ) 

எம்.ஜி.ஆர்  தான் நடிப்பில் சிறந்தவர் ........!!!





நடிகர் சங்கம் பற்றிய எனது பதிவிற்குப்பிறகு  தமிழ்நாட்டிலிருந்து ஏகப்பட்ட கோபக்குரல்கள் தோலை பேசி மூலம்!

எம்.ஜி.ஆர் படத்தையே பார்க்காமல் அவர்தான் சிலாஜியைவிட சிறந்த நடிகர் என்று சொல்ல உனக்கு எவ்வளவு துணிச்சல் ? என்று கொதித்து விட்டார்கள்.

விஞ்ஞான பூர்வமாக  நடிப்பை வகைப்படுத்தினால் எம்.ஜி ஆர் தான் சிறப்பு என்பது.புலப்படும். நான் எம்.ஜி ஆர் படங்களையே பார்த்ததில்லை என்பது சரியல்ல.. 62 ம் ஆண்டுக்கு பிறகு பார்த்ததில்லை. அதற்குமுன்னால் பார்த்திருக்கிறேன்.

"நாம் "   என்றொரு படம். முகம்கோரமாகி  கண்ணடித்துண்டுகளீல் பார்த்துகதறுவார் . அற்புதமான சித்தரிப்பு..

"தாய்  மகளுக்கு கட்டிய தாலி " என்றொரு படம். அதில் ஜமுனா என்பவர் நடித்திருப்பார். அவர் இறந்து விட்டார் என்று கருதி கதறுவார். அந்த பெண்ணின் பெயர் "காவேரி.".  கிட்டத்தட்ட 17 முறை " காஆஅவேரி' ' கவிரி"
"கா.வே...ரி "  என்று கதறுவார் ஒவ்வொரு முறையும் ஒரு modulation ' அற்புதமாக இருக்கும்.
"அந்தமான் கைதி " என்தங்கை "ஜெனோவா " இவையெல்லாம் அவருடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய திரைப்படங்கள்.

பக்ஷிராஜாவின்" மலைக்கள்ளன்" என்ற படம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம். அன்றைய மிகப்பெரிய   இயக்குனர். உங்களுடைய அடுக்கு மொழி வசனத்தை தூக்கி எறிந்து விட்டு யதார்த்தமான பேச்சு மொழியில் எழுதுங்கள் என்று கூறி  கருணாநிதியை வசனம் எழுதச்சொன்னார். கருணாநிதிக்கும்.எம்.ஜி ஆருக்கும் புகழ் சேர்த்தபடம்.  இந்தியில் நடித்த திலிப் குமார் அசந்த படம்.

நடிப்பு என்பது பாத்திரமாக மாறுவதல்ல. பார்வையாளனுக்கு நான் பாத்திரமல்ல . நான் பாத்திரம் போல நடிக்கிறேன். என்ற பிரக்ஞையை .உறவாக்குவது தான் நடிப்பு.

பல உதாரணங்களைச் சொல்லலாம். அலுவலகங்களில், சிறு நிகழ்ச்சிகளில் நண்பர்கள்  mimicry செய்வார்கள். ரஜினி"போல செய்வார்கள். கமல் போல, பாலையா போல செய்வார்கள்.

மேடையில் நண்பர் மட்டுமே இருப்பார்>ரஜனி இருக்க மாட்டார்.ரஜனி "போல "
கைகால் அசைவு,குரல் என்று இருக்கும். அது நண்பர்தான் என்பது நம் உள்ளுணர்வு சொல்லும். அடுத்தவினாடி பாலையாவாக செய்து காட்டுவார்>அங்குபாலையா இல்லை என்று தெரிந்து நாம் ரசிப்போம் அது தான் நடிப்பு.

இதே போன்ற நடிப்பை நாம் ஜெமினியிடம் பார்க்கலாம்.ஆண்டனி என்ற கிறீஸ்துவப்பையன் . பல பெயர்களில் பிராடு வேலைகளை ச் செய்து வாழ்வான். இவை அத்துணையாகவும்  நடித்து "நான் அவனில்லை" என்பார் ஜெமினி கணேஷ். அதுதான் நடிப்பு.

பாத்திரமாகவே மாறி,நம்மையும் பாத்திரத்தின் உணர்வுகளுக்குள் அமிழ்த்தி melodrama பண்ணுவது நடிப்பு அல்ல>


மீண்டும் சொல்கிறேன்.!

சிறந்த நடிப்புக்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர் தான்.

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

எம்.ஜி.ஆரின் நடிப்பு திறமை சிறப்பானதுதான்! இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரர்!