திசைகள் எட்டுக்கும்
கொண்டு செல்வீர்.....!!!
90ம் ஆண்டுகளாக இருக்கலாம். "லோக் லேகக் சங் " என்ற மக்கள் எழுத்தாளர் சங்கம் அகில இந்திய மாநாட்டை கல்கத்தாவின் சால்ட் லேக் சிட்டி அரங்கில் நடத்தியது.
மதிப்பிற்குரிய மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களும் நானும் கலந்து கொண்டோம் .
சங்க இலக்கியத்திலிருந்து தமிழ் நவீன இலக்கியம் வரை ஒரு அருமையான சொற்பொழிவை மேலாண்மை நிகழ்த்தினார்அவரது பேச்சின் சுருக்கத்தை இந்தி மொழியில் எழுதி நான் வாசித்தேன்.என் உச்சரிப்பு சரியாக இல்லையோ என்னவோ 1இந்து உருது எழுத்தாளர் சங்க தலைவர் சஞசல் சௌஹான் வாசிக்க ஆரம்பித்தார்.
என் பங்கிற்கு நான் ஆங்கிலத்தில்பேசினேன். நமது கலை இரவுகள் பாற்றி விளக்கினேன். கவிஞர் கந்தர்வன் கவிதை வரிகளை சுட்டிகாட்டினேன் .
"நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ,
ஞாயற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை"
என்ற வரி களைச்சுட்டிய பொது கரகோஷம் விண்ணை எட்டியது. பஞ்சாபி ,வங்க,இந்தி கவிஞர்கள் அவரவர் வரிவடிவத்தில் தமிழ் உச்சரிப்பை கேட்டு எழுதிகொண்டார்கள் .நாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்து உச்சரிப்பை சரிபார்த்துக் கொண்டார்கள்.
மராட்டிய, வங்க, பஞ்சாபி எழுத்தாளர்களோடு பேசி மகிழ்ந்தேன். "
"சரத்த்சந்திரரும்,தகூரும்,பிரேம்சந்தும் ,காண் டெகரும்,தகழியும், வேமன்னாவும், மாஸ்தியும் எங்கள்கிராமத்து இலக்கிய வாதிகளுக்கு தெரியும்.எங்கள் கலைமகள்,கல்கி,விகடன் போன்ற பத்திரிகைகள் 50 களிலேயே அவற்றை தொடராக பிரசரித்துள்ளன.உங்களுக்குபாரதியை தெரிந்திருக்கலாம் .புதுமைபித்தனை தெரியுமா? அழகர் சாமியைதேரியுமா ? சின்னப்பா பாரதியதேரியுமா? என்று கேட்டேன். அவை இந்தியில்,வங்காளத்தில் வந்துள்ளதா ? என்று கேட்டார்கள்.. ஆம் என்று பொய் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது"
என்னுடைய சிறுகதைகள் இந்தியில் வந்துள்ளன.வங்காளம்,தெலுங்கு,மராத்தி.ஏன் சம்ஸ்கிருதம் பிரெஞ்சு ,ஆங்கிலத்தில் வந்துள்ளன.
எந்த பின்புலமும் இல்லாத என்னால் இதனை செய்யமுடியுமென்றால் .....!
சிறுகதகளை பொருத்தவரை தமிழ் சிறுகதைகள் உலக தரத்தை எட்டியுள்ளன. சந்தேகமில்லை.
இவை பற்றி இந்திய மொழி இலக்கியவாதிகளுக்கே சரியான பாரவை இல்லை.
நமது மொழிபெயர்ப்பாளர்களின் திறமைககும் பஞசமில்லை.
பாரதி புத்தகாலயம், கிழக்கு பதிப்பகம் ஆகியவை முன்கை எடுத்து செயல்படவேண்டிய நேரமிது.
சுப்பாராவ், குமரேசன் போன்றவர்கள் ஆங்கிலத்திற்கு தமிழ் எழுத்தாளர்களை கொண்டு செல்ல வேண்டும்.
மொழிபெயர்ப்பு என்பது ஒருவழிப்பாதை அல்ல.
நவீன தமிழுக்கான அங்கீகாரம் மொழிபெயர்ப்போடு பின்னிப்பிணந்துள்ளது .
கொண்டு செல்வோம் !!!