"தியாக பூமி " திரைப்படமும் ,
சென்னை மழை வெள்ளமும் !!!
"ஆனந்தவிகடன்" பத்திரிகையில் அப்போது கல்கி கிருஷ்ணமூர்த்தி பணியாற்றிக்கொண்டிருந்தார் .சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர் அவர். பத்திரகையின் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் தீவிரமான காங்கிரஸ்காரர்.
"கல்கி " விகடன் பத்திகையில்" தியாகபூமி " என்ற தொடர்கதையை எழுதினார். சம்பு சாஸ்திரி என்ற அய்யர் கோவில் புசாரி. ஊருக்குள் வந்த மழை வெள்ளமாக தாழ்ந்த பகுதியை நிரப்பி விடுகிறது.அங்கு வசிக்கும்தலித் மக்கள் தங்க வழியில்லாமல் தவிக்கும் பொது, சம்புசாஸ்திரி கோவில் கதவை திறந்து அவர்களை தங்க வைக்கிறார். சனாதனிகள் இதனைக்கண்டு வெகுண்டு சாஸ்திரிகளை சாதியிலிருந்து விலக்கி வைக்கிறார்கள்.
சாஸ்திரியின் மகளுக்கு திருமணமாகிறது. அவள் கணவன் அவளை உதாசினப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றுகிறான. கணவனைப்பிரிந்த அவள் பின்னாளில் செல்வச் செழிபோடு திரும்புகிறாள் .அவளை ஏற்க வந்த கணவனை நிராகரித்து சமூகபணியில் ஈடுபடுகிறாள்.
இந்த கதையைவாசன்திரைப்படமாகதயாரித்தார் . கே.சுப்பிரமணியம்
இயக்கினார்
பாபநாசம் சிவன் சாஸ்திரிகளாக நடித்தார் . சாஸ்திரியின் மகளாக எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். அவர் கணவராக கே.ஜே.மகாதேவந நடித்தார்.
சாஸ்திரியின் பாத்திரத்தை அண்ணல்காந்தியடிகள் மாதிரி இயக்குனர் சுப்பிரமணியம் உருவாக்கி இருந்தார் .
சில காட்சிகளில் காந்தியடிகள் நூல் நூற்கும்காட்சிகளையும்
இணைத்திருந்தார்
1939ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடை செய்தனர்.
இந்த படத்தின் ஒரே ஒரு பிரதி பூனே யில் உள்ள திரைப்பட ஆவண காப்பகத்திலுள்ளது..
-----------------------------------------------------------------------------------------------------------------------
திருவல்லிக்கேணியில் உள்ள மசூதியில் யாரும் தங்கி ,உணவருந்த ஏற்பாடு செய்த்ள்ளார்கள்.
அங்குள்ள சமண கோவிலில் தங்க உணவருந்த ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சர்ச் சிலும் தங்க வழி வகுத்துள்ளார்கள்.-
--------------------------------------------------------------------------------------------------------------------------
"ஸ்ரீ ரங்கா நாதனை
பீரங்கிவைத்து தகர்ப்பதும்
என்னாளோ "
என்று பாடிய பாரதிதாசன் நினைவில் வந்து தொலைக்கிறார்.
ஒண்ணூம் செய்ய முடியாது அண்ணன் மார்களே !!!
0 comments:
Post a Comment