பத்திரகை நிருபர்களும் ,
கொடுக்கப்படும் "கவர்களும் "......!!!
இலங்கையில் முக்கியமான தமிழ் பத்திரிகைகளில் ஒன்று "வீர கேசரி ". இந்தியா சுதந்திர மடைவதற்குமுன்பு நெல்லை,மதுரை ராமநாதபுரம் மக்கள் இலங்கையோடு கொண்டான் கொடுத்தான் உறவோடு வாழ்ந்த காலம் அது.
நெல்லயை சேர்ந்த" நெல்லையா " என்பவர் விர கேசரி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அங்கிருந்த லெனின்பிரஸ் அவருடைய படைப்புகளை வெளியிட்டு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்..அவர் எனக்கு "பெரியப்பா" முறை வேணும்.
"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகையில் chiefreportor ஆக இருந்தவர் P .V .ராமசந்திரன்.. காமராஜ்,ராஜாஜி, சி.சுப்பிரமணியம் ஆகியோரின் மரியாதைக்குரிய நிருபர். அவர் என் தாயாரில்தாய்மாமன் மகன்.
எங்கள் குடும்பத்திற்கும் பத்திரிகைத் துறைக்கும் நெருக்கம் அதிகம்.
அந்தக் காலத்தில் G .K .ரெட்டி என்று ஒரு நிருபர் இருந்தார். "இந்து"பத்திரிகையின் டெல்லி chief ஆக இருந்தார்> நேரு,இந்திரா அம்மையார் காலம்.ரெட்டி ஒரு செய்தி கட்டுரை எழுதினார் என்றால் அது பற்றி பெரிய விவாதமே நடக்கும் சரியாக ஒரு மாதம் கழித்து அரசு கொள்கை ரீதியாக அதன் மேல் ஒரு முடிவை எடுக்கும்.
G .K ரெட்டியின் மூத்த சகோதரர் CGK ரெட்டி .இவரும் இந்துவில் எழுதியவர் தான். சுதந்திட போராட்டத்தின் பொது நேதாஜியோடு இருந்தார்> வடகிழக்கில் நேதாஜிபடையோடு வரும் பொது பம்பாய் போன்ற பகுதிகளில் ஆள் சேர்க்க ரகசியமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். துரோகி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டுகைதானார்.அவசரநிலைக்காலத்தில்கைதுசெய்யப்பட்ட நிருபர்களில் அவரும் ஒருவர்.
அப்படிப்பட்ட நிருபர்கள் இப்போதுமிருக்கத்தான் செய்கிறார்கள்.
ஜனதா கட்சி என்று இருந்தது.பின்னர் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது .
ஜனதா கட்சி என்ற பெயரைமட்டும் வைத்துக்கொண்டு one man army ஆக செயல்பட்டு வந்தார் சு.சாமி.15 நாளைக்கு ஒருதரம் அவர்பற்றிய செய்திகள் பத்திரிகையில் வரும்.அவர் எப்பது தமிழ்நாடு வந்தார் என்பது எவருக்கும் தெரியாது. அவருடைய செய்திகள போட நிருபர்கள் ,பத்திரிக்கைகள் இருந்தனர் மதுரையி ஒரு தேசிய தலைவர் இருந்தார்.மெலமாசிவீதி ஆரிய பவனில் மாதம் ஒரு நிருபர் கூட்டம்னடத்துவார். படங்கள் செய்திக்குறிப்பு.அறிக்கை எல்லவற்றையும் ஒரு கவ்ரில்போட்டுகொடுப்பார்> அதில் நிருபரின் தரத்திற்கு ஏற்ப நோட்டுகள் இருக்கும்.
மதுரையில் RMS போகும் சாலையில் நிருபர்கள் சந்திக்குமிடமுண்டுஅங்கு
இருந்து தான் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு செல்வார்கள். அதில் மதுரை மெயில்,குமரி பூ என்ற பத்திரிகைகளின் நிருபர்களும் இருப்பார். இந்த போலிகள் இருப்பது நிஜ நிருபர்களுக்கும் தெரியும்.
என்னுடைய நண்பர் மகன் - sslc ல் மூன்று தரம் பெயில்.. ஒரு நாள் அவனை ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பார்த்தேன். "மக்கள் ஒலி " என்ற பத்திரிகயில்செய்தி செகரிப்பவனாக இருக்கிறேன் என்றான். சம்பளம் எவ்வளவுடா ? என்று கேட்டேன். ஒருநாளைக்கு 10 ரூ என்றான்.எப்படிடா சமாளிக்கரே என்றேன். "கவர " வச்சுக்கிடுவேன் என்றான் .
தூக்கி போட்டு தலவரானவர்கள் பிரஸ் கவ்ரேஜுக்காக கவரில் பணம் கொடுப்பார்கள்..
கவரோடு party யும் உண்டு.அது Hot or cold என்பது நிருபரின் சாய்ஸ்..
கவர் எல்லாருக்கும் கொடுக்கமாட்டார்கள். இந்து,இந்தியன் எக்ஸ் \பிரஸ், தீக்கதிர், தினமலர் போன்ற பத்திரிக்கை நிருபர்கள் வாங்க மாட்டார்கள்.
இளைய ராஜாவிடம் கேட்ட நிருபர் ஒரு ஆர்வத்தில் scoop பண்ணலாம் என்று நினைத்து வஞசகமில்லாமல் கெட்டிருக்கிறார் என்று தான் தோன்றுகிறது.
இளைய ராஜாவும் இப்போ போய் இத கேக்கறியே என்பதாகத்தான் நினைத்திருக்கிறார் ..
ஊதி பெரிதாக்கி விட்டர்கள் மற்றவர்கள்.
0 comments:
Post a Comment